Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மசக்காளிபாளையம் ரோட்டை திட்ட சாலையாக மாற்ற ஆய்வு

Print PDF

தினமலர் 12.01.2010

மசக்காளிபாளையம் ரோட்டை திட்ட சாலையாக மாற்ற ஆய்வு

கோவை: அவிநாசி ரோட்டையும், திருச்சி ரோட்டையும் இணைக்கும் மசக்காளி பாளையம் ரோட்டை திட்ட சாலையாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டு பணிகளை விரைவு படுத்த மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.ஆக்கிரமிப்பு பணிகளை துவக்கும் முன் மசக்காளி பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியின் உரிமையாளர்களை அழைத்து பேசி, செம்மொழி மாநாடு குறித்தும், ரோடு விஸ்தரிக்கப்படுவது குறித்த கூட்டம் நடந்தது.

மேயர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அதிகாரிகள் பேசியதாவது:அவிநாசி ரோட்டையும், திருச்சி ரோட்டையும் இணைக்கும் மசக்காளி பாளையம் ரோட்டை திட்ட சாலையாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது."மசக்காளிபாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.

ஆக்கிரமித்துள்ளவர்கள், தாங்களாகவே முன் வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், மாநகராட்சி உரியநடவடிக்கையின் மூலம் அகற்றும்.இவ்வாறு அதிகாரிகள் பேசினர்.அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இக்கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றிய முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

Last Updated on Tuesday, 12 January 2010 07:22