Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 37 கோடியில் சாலைகள் செப்பனிடப்படும்

Print PDF

தினமணி 20.01.2010

ரூ. 37 கோடியில் சாலைகள் செப்பனிடப்படும்

நாகர்கோவில், ஜன.19: கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் மாதத்துக்குள் ரூ.37 கோடியில் சாலைகள் செப்பனிடப்படும் என, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.

நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் நகரில் அமைக்கப்பட்டுவரும் சுரங்க நடைபாதைப் பணிகளை விரைவில் முடிக்கவும், இதுபோல, நகரில் தேவையான இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) விஜயகுமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தாஸ், வெள்ளையா, நகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கோட்டப் பொறியாளர் பழனியப்பன், நகர டி.எஸ்.பி. ஸ்டீபன் ஏசுபாதம், அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளர் சாம் ஜெயராஜ், லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சிவச்சந்திரன், மினி பேருந்து உரிமையாளர்கள் சங்கச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 20 January 2010 06:30