Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கும்பகோணம் நகராட்சி சாலைகள் : மாற்றியமைக்க முடிவு: அதிகாரி தகவல்

Print PDF

தினமலர் 24.04.2010

நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கும்பகோணம் நகராட்சி சாலைகள் : மாற்றியமைக்க முடிவு: அதிகாரி தகவல்

கும்பகோணம்: நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கும்பகோணம் நகராட்சி சாலைகள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத் தப்படும் என திட்ட மேலாளர்
முருகன் தெரிவித்தார்.தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை மேம்பாடு செய்வது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. திட்ட செயல்பாடுகள் குறித்து நிறுவன திட்ட மேலாளர் முருகன் கூறியதாவது:கும்பகோணம் நகரில் உள்ள சாலைகள் சராசரியாக 6மீ. அகலத் தில் தான் உள்ளது. பெருகி வரும் சாலை போக்குவரத்தை கருத்தில் கொண்டு அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு நெரிசலை தவிர்ப்பதற்கு மேம்பாடு பணிகளை மேற் கொள்வது தான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்கென சர்வதேச தரத்திற்கு இணையாக சாலைகள் அமைக்கப் பட உள்ளது.

இது தொடர்பான அறிக்கையை அடுத்தவாரம் அரசுக்கு அனுப்ப உள்ளோம். இத்திட்டத்தின் கீழ் நகரில் என்னென்ன சாலைகள் தேவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளை பற்றி விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி வரப் பெற்றதும் இன்னும் 3 மாதங்களில் ஆயத்தப் பணிகள் தொடங்கப்படும். நகர சாலைகள் மட்டுமின்றி மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளும் இத்திட்டத் தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 6 நெடுஞ்சாலைகளும், 12 இணைப்பு சாலைகளும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 4 வழி சாலைகள் அமைய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்தந்த சாலைகளின் அகலத்திற்கேற்ப 4 நிலைகளில் மேம்பாடு செய்யப்படுகிறது. காவிரி, அரசலாறுகளை ஒட்டி போக்குவரத்து மாற்றத்திற்கு தேவையான கூடுதல் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.

ஸ்டேட் பாங்க் காலனி அய்யப் பன் நகரை இணைக்கும் வகையில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே நகரில் உள்ள 3 பாலங்களும் புதுப்பிக்கப்படும். காசிராமன் தெரு, ஆயிகுளம் ஆகிய 2 இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்படும். மாரியம் மன் கோவில் தெருவில் ரயில்வே லெவல் கிராசிங்கில் உயர்மட்ட மேம்பாலமும், நகர் முழுவதும் 22 சாலையோர பூங்காக் கள் மூலம் சென்னை, கோவை மாநகரை போல அழகுபடுத்தப்படும். தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஸ்டீல் மேல் கூரை கொண்ட பயணிகள் நிழற்குடையும், எந்தவித சுவரொட்டிகளும் எங்கும் ஒட்டாத வகையில் தடை செய்யப் பட்டு பொது இடங்களில் டிஜிட்டல் விளம்பர பலகைகள் மூலம் மட்டும் ஒளிபரப்ப வழிவகை செய்யப்படும். நகரில் பயன்பாட்டில் இல்லாத 4 கழிவுநீர் வாய்க்கால்களின் அளவுகளை குறைத்து புதிய சாலை வசதி செய்யப்படும். இப்பணிகள் அனைத்தும் இன்னும் 3 மாதங்களில் தொடங் கப்பட்டு 3 ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.நகராட்சி தலைவர் தமிழழகன் தலைமை வகித்து பேசினார். ஆணையர் பூங்கொடி மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 24 April 2010 06:02