Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ.108 கோடியில், 1,200 சாலைகள் போட திட்டம்

Print PDF

தினமலர்             20.08.2012

ரூ.108 கோடியில், 1,200 சாலைகள் போட திட்டம்

சென்னை:சென்னை மாநகரில் உள்ள, 1,200 சாலைகள், 108 கோடி ரூபாயில், புதிதாக போட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள், செப்டம்பர் 1ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள், குறுகிய காலம் கூட தாக்குப் பிடிக்காமல் சேதமடைவதால், பிளாஸ்டிக் சாலைகளாக போடும் திட்டத்தை மாநகராட்சி அறிவித்தது. ஒப்பந்ததாரர் தேர்வுஇதன்படி, இந்த ஆண்டுக்கு, 1,200 சாலைகள், 108 கோடி ரூபாயில் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சாலைகள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறும்போது, ""44 சிப்பங்களாக பிரித்து, 1,200 சாலைகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில், 40 சிப்பங்களில் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில், 956 சாலைகளுக்கு ஒப்பந்தாரர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த வார மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, பணி ஆணை உடனே வழங்கப்படும். செப்டம்பர் 1ம் தேதி முதல் சாலைப் பணி துவங்கும்,'' என்றார்.விடுபட்ட, நான்கு சிப்பங்களில், 241 சாலைகள் உள்ளன.இதற்கு மறு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இதையும் வேகப்படுத்தி, உடனே பணிகள் துவக்கப்படும் எனவும், சாலைகள் அனைத்தும், பிளாஸ்டிக் கலந்த தார் சாலைகளாகவே போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்ணாநகர் இல்லைஅதிகபட்சமாக, மாதவரம் மண்டலத்தில், 211 சாலைகளும், வளசரவாக்கம் மண்டலத்தில், 119 சாலைகளும் போடப் பட உள்ளன. ராயபுரம் மண்டலத்தில், குறைந்த அளவில் 14 சாலைகளும், அம்பத்தூர் மண்டலத்தில் 34 சாலைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அண்ணா நகர் மண்டல சாலைகள், சிமென்ட் சாலைகள் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், அந்த மண்டலத்தில் தார் சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Last Updated on Monday, 20 August 2012 07:19
 

குடந்தையில் பிளாஸ்டிக் கலவையுடன் தார் சாலை

Print PDF

தினமணி     15.08.2012

குடந்தையில் பிளாஸ்டிக் கலவையுடன் தார் சாலை

தஞ்சாவூர், ஆக. 14: கும்பகோணத்தில் பிளாஸ்டிக் கலவையுடன் கூடிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றார் கும்பகோணம் நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர்.

 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கி அச்சிட்டு வழங்கிய சுத்தம் காப்போம் சுகாதாரம் காணுவோம் விழிப்புணர்வு இலவச கையேடு வெளியீட்டு விழாவில் அவர் மேலும் பேசியது:

 கும்பகோணம் தமிழகத்திலியே முதன்மை நகராட்சியாக மாற்றப்பட்டு வருகிறது. நகரில் உள்ள பழைய தார் சாலைகளுக்குப் பதிலாக தரமான தார் சாலைகள், சிமென்ட் சாலைகளாக அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் கலவையைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு குடந்தை நகர மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

 விழாவுக்கு சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சந்திரபிரபு தலைமை வகித்தார். சிட்டி யூனியன் வங்கி துணைப் பொது மேலாளர் ஸ்ரீதர், காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவ. பாஸ்கர், சேம்பர் ஆப் காமர்ஸ் செயலர் சண்முகம், துணைத் தலைவர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேவிகாராணி வரவேற்றார். உமா நன்றி கூறினார்.

 

உக்கடம் மேம்பாலம், 2ம் கட்ட மண் பரிசோதனை துவங்கியது

Print PDF

தினகரன்     10.08.2012

உக்கடம் மேம்பாலம், 2ம் கட்ட மண் பரிசோதனை துவங்கியது

கோவை, : உக்கடத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான இரண்டாம் கட்ட மண் பரிசோதனை நேற்று துவங்கியது.கோவை மாநகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரிக்கிறது. வாகன பெருக்கத்துக்கு ஏற்ப சாலைகள் விரிவுபடுத்தப்படவில்லை. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை செல்வதற்கு சாலையை விரிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. ஒரு பக்கம் உக்கடம் பெரியகுளம், மறுபக்கம் பள்ளமான வயல்வெளி. இவை இரண்டும் சாலை விரிவாக்கத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. இதனால், இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை சுமார் ஒரு கி.மீ தூரம் மேம்பாலம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணியில் மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். உத்தேச மதிப்பீடு தயாரித்து தமிழக அரசிடமிருந்து நிதியுதவி பெற திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், இச்சாலையின் ஒருபுறம் மண் பரிசோதனை செய்யும் பணி கடந்த வாரம் துவங்கியது. ஒரு வார காலத்தில் ஒருபுறம் முழுவதும் மண் பரிசோதனை நிறைவடைந்து விட்டது. தற்போது, சாலையின் மறுபுறம் மண் பரிசோதனை செய்யும் பணி நேற்று துவங்கியது.

இப்பணி அடுத்த ஒருசில தினங்களில் நிறைவடைந்துவிடும், அதன்பிறகு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி நிதியுதவி பெறப்படும் என மாநகராட்சி பொறியாளர்கள் கூறினர்.

 


Page 36 of 167