Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

80 அடி சாலை திட்டம் சென்னை ஐகோர்ட் வழக்கில் மாநகராட்சியும் இணைகிறது

Print PDF

தினகரன்   08.08.2012

80 அடி சாலை திட்டம் சென்னை ஐகோர்ட் வழக்கில் மாநகராட்சியும் இணைகிறது

ஈரோடு, : ஈரோடு பிரப் ரோட்டையும், ரயில்நிலையம் ரோட்டையும் இணைக்கும் 80 அடி சாலை திட்டம் தொடர்பான வழக்கில் மாநகராட்சியும் இணைந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு உள்ளூர் திட்டக் குழுமம் பகுதி விரிவு அபிவிருத்தி திட்டம் 2ன்கீழ் பிரப் ரோட்டையும், சென்னிம லை ரோட்டையும் இணைக் கும் வகையில் சி.எஸ்.ஐ. பள்ளி வளாகம், சிதம்பரம் காலனி, பெரியார் நகர், பெரும்பள்ளம் ஓடை, கரி« மடு மற்றும் சவானா ஹோ ட்டல் வளாகம் வழியாக 80 அடி சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகர் ஊர¬ மப்பு ஆணையரிடமிருந்து இந்த திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் பெறுவதற்காக விரிவு அபிவிருத்தி திட்ட விதிகள் 13ன்படி பொதுமக்களிடம் ஆலோச னை மற்றும் ஆட்சேபனை கோரி ஈரோடு உள்ளூர் திட்டக்குழுவால் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சி.எஸ்.ஐ. நிர்வாகம் சென்¬ ன உயர்நீதிமன்றத்தில் மாவட்ட கலெக்டர், உறுப்பினர், உள்ளூர் திட்டக்குழும செயலர் ஆகியோரை பிரதிவாதியாக சேர்த்து கடந்த 2010ம்ஆண்டு அக்டோபர் 28ம்தேதி இடைக்கால தடை உத்தரவு பெற்று இந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 27ம்தேதி கலெக்டர் தலைமையில் நடந்த சாலைபாதுகாப்பு கூட்டத்தில் ஈரோடு நகர பகுதிகளில் பி.எஸ்.பார்க். பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பிரப்ரோடு - ரயில்நிலையம் ரோடு ஆகியவற்றை இணைக்கும் 80 அடி சாலை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சாலை அமைக்கும் பகுதிகளில் அரசுக்கு சொந்தமாக இருக்கும் இடங்களையும், ஆக்கிரமிப்பு செய்யப்ப ட்டிருக்கும் இடங்களையும், தனியாருக்கு சொந்தமான இடங்களையும் இணைத்து சாலை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நிலுவையில் உள்ள வழக்கில் மாநகராட்சியும் பிரதிவாதியாக இணைத்துக் கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி 80 அடி சாலை திட்டத்தை விரைவில் அமைக்க தமிழக முதல்வருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் பிரதிவாதியாக மாநகராட்சியும் இணைந்து கொள்ள மனு செய்யவுள்ளனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு பெற்ற பிறகு தீர்ப்பின் அடிப்படையில் 80 அடி சாலை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

ரூ.34 லட்சத்தில் தார் சாலை: சேர்மன் ஆய்வு

Print PDF

தினமலர்                    08.08.2012

ரூ.34 லட்சத்தில் தார் சாலை: சேர்மன் ஆய்வு

பள்ளிபாளையம்: ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில், 34.20 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தார் சாலை அமைக்கும் பணியை, சேர்மன் யுவராஜ் ஆய்வு செய்தார்.
பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து, நான்காவது வார்டில், 2011-12ம் ஆண்டு நபார்டு நிதியுதவித் திட்டத்தில், கன்னிகாடு ரயில்வே கேட் முதல் சின்னாக்கவுண்டம் பாளையம் பாலம் வரை, தார் சாலை அமைக்க, 34.20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அப்பணியை, டவுன் பஞ்சாயத்து சேர்மன் யுவராஜ், துணைத்தலைவர் செல்லதுரை ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

சாலைப் பணிகள் குறித்து மேயர் ஆய்வு

Print PDF

தினமணி                    04.08.2012

சாலைப் பணிகள் குறித்து மேயர் ஆய்வு

திருச்சி, ஆக. 3:  திருச்சி  மாநகராட்சி  ஸ்ரீரங்கம்  மற்றும்  கோ-அபிஷேகபுரம்  கோட்டங்களில் நடைபெற்று  வரும்  வளர்ச்சிப்  பணிகளை  மேயர்  அ. ஜெயா,  ஆணையர்  வே. ப.  தண்டபாணி ஆகியோர்  வெள்ளிக்கிழமை  நேரில்  பார்வையிட்டு  ஆய்வு  செய்தனர் . 8-வது  வார்டு  இ ஆர் மேல்நிலைப்   பள்ளி  பின்புறத்தில்  கழிவுநீர்   வடிகால்   சீரமைக்கும்  பணிகள்,  9-வது  வார்டு ராமமூர்த்தி நகர் சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மேலச் சிந்தாமணி கோட்டை வாய்க்கால் தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றையும் இவர்கள் பார்வையிட்டனர்.மேலும், 60-வது வார்டு வெள்ளாளத்தெரு,  தியாகராஜர்  நகர் சாலைப்  பணிகள்,  50-வது  வார்டு  சத்யா நகரில் மழைநீர் மற்றும்  கழிவுநீர்  வடிகால்  கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்   போது,  துணை மேயர் ம. ஆசிக் மீரா, கோட்டத் தலைவர்கள் எம். லதா, ஆர். ஞானசேகர், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, மாமன்ற  உறுப்பினர்கள்  எஸ்.  சிவசங்கர  ராஜவேலு, வி. அய்யப்பன், அ. நத்தர்ஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 37 of 167