Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

செலவில் மேம்பாலம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு, "ஒர்க் ஆர்டரும்' கொடுக்கப்பட்டுள்ளது.

Print PDF

தினமலர்             15.12.2010

செலவில் மேம்பாலம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு, "ஒர்க் ஆர்டரும்' கொடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க முதல் கட்டமாக 17.67 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கன மழையால் உயிரிழந்த 18 பேரில் இதுவரை 7 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் 176 ஆடுகளும், 86 மாடுகளும், 54 கன்றுகள் என 315 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுவரை 49 மாடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதமும், 49 கன்றுகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதமும், 126 ஆடுகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதமும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் 1,162 குடிசைகள் முழுமையாகவும், 14 ஆயிரத்து 595 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

இதுவரை முழுமையாக சேதமடைந்த 914 குடிசைகளுக்கு 5,000 ரூபாய் வீதம் 45.70 லட்சமும், பகுதியாக சேதமடைந்த 1,264 குடிசைகளுக்கு தலா 2,500 ரூபாய் வீதம் 31.60 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் 14 கி.மீ., சாலை சீரமைப்புக்கு 70 லட்ச ரூபாயும், சிதம்பரம் நகராட்சியில் 8 கி.மீ., தூர சாலை சீரமைக்க 40 லட்ச ரூபாயும், விருத்தாசலம் நகராட்சியில் 5 கி.மீ., சாலை சீரமைக்க 25 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் வடிகால்கள், உடைப்புகள், ஏரிகள் ஆகியவற்றை தற்காலிகமாக சீரமைக்க 4.32 கோடி ரூபாய் முதல் கட்டமாக பெறப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதி அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

கனமழையில் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க முடிவு

Print PDF

தினமலர்            15.12.2010

கனமழையில் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க முடிவு

தாம்பரம் : வெள்ளத்தால் சீர்குலைந்த, சென்னை மாநகர நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட சாலைகளை 73 கோடி ரூபாய் செலவில், சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில் பெய்த கனமழையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது.

ஜி.எஸ்.டி., தாம்பரம் - வேளச்சேரி, மவுன்ட் - மடிப்பாக்கம், திருநீர்மலை - திருமுடிவாக்கம், தாம்பரம் - திருநீர்மலை, மேட வாக்கம் - சோழிங்கநல்லூர், பல்லாவரம் - அனகாபுத்தூர், சென்னை பை-பாஸ் சாலையின் சர்வீஸ் சாலை போன்ற முக்கிய சாலைகளும், உள்ளாட்சி அமைப்பு களின் கட்டுப்பாட்டில் உள்ள, சாலைகளும் மழையால் சீர்குலைந்தன.

மழை விட்டு பல நாட்கள் கடந்தும், இந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத் திலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஒருவர் நேரிடையாக ஆய்வு செய்து வருகிறார்.அந்த சாலைகளை சீரமைக்க, தேவையான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசின் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் சென்னையில், கிண்டி கத்திப்பாராவில் இருந்து கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் 9 கிலோ மீட்டர்; தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சைதாப்பேட்டை முதல் தாம்பரம் வரை; மவுன்ட் - மடிப்பாக்கம் சாலை; மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை; வால் டாக்கஸ் சாலை வழியாக செல்லும் என்எச் 5 சாலை; திருநீர்மலை - திருமுடிவாக்கம் சாலை உள்ளிட்ட 18 சாலைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்தது.இதையடுத்து, இந்த சாலைகளை 72 கோடி ரூபாய் செலவில், சீரமைக்க அரசின் அனுமதி பெறுவதற்காக அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும்.காஞ்சிபுரத்திற்கு ரூ.1.80 கோடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐந்து உள்ளாட்சிகளுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.ஆலந்தூரில் 40 லட்சம், மறைமலை நகரில் 55 லட்சம், காஞ்சிபுரத்தில் 20 லட்சம், தாம்பரத்தில் 50 லட்சம்; பம்மல் 15 லட்சம் என ஐந்து உள்ளாட்சிகளுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

திருமங்கலத்தில் ரூ.62 கோடியில் மேம்பாலம்:

திருமங்கலம் சிக்னல் அருகே, ஏற்படும் நெரிசலை தவிர்க்க, அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும், என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கு மேம்பாலம் கட்ட கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.ஆனால், மேம்பாலம் அமையும் இடத்தில் மெட்ரோ ரயில் தடம் செல்வதால் அதை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில், திருத்திய மதிப்பீடு 62 கோடி ரூபாய்செலவில் மேம்பாலம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு, "ஒர்க் ஆர்டரும்' கொடுக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 15 December 2010 10:45
 

ரூ33 கோடியில் சாலை சீரமைப்பு துவங்கியது

Print PDF

தினகரன்            15.12.2010

ரூ33 கோடியில் சாலை சீரமைப்பு துவங்கியது

மதுரை, டிச. 15: மதுரையில் ரூ.33 கோடியில் சாலை சீரமைப்பு பணி பூமி பூஜையுடன் துவங்கியது. மதுரை நகரில் சாலைகள் சீரமைப்புக்கு தமிழகஅரசு ரூ.33கோடியே 40லட்சம் வழங்கி உள்ளது. இதன் மூலம் 114 கிமீ நீளம் மொத்தம் 117 சாலைகள் புதுப்பிக்க மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் உத்தரவு வழங்கினார். நேற்று சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கின. புதூரில் பூமிபூஜை நடத்தி மேயர் தேன்மொழி தொடங்கி வைத்தார்.

தலைமை பொறியாளர் சக்திவேல் கூறும்போது "பாதாள சாக்கடை குழாய் பதித்தல், வைகை குடிநீர் திட்ட குழாய் பதித்தல் போன்ற பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் உள்பட மிக மோசமான சாலைகள் இந்த திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்படுகின்றன. சில இடங்களில் கான்கரீட் சாலை அமைக்கப்படுகிறது. அனைத்து பணிகளும் 3மாதங்களில் முடிக்கப்படும், என்றார். இதில் வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

நெடுஞ்சாலைத்துறை பொறுப்பிலுள்ள மாட்டுத்தாவணி பிரதான சாலையில் மைய தடுப்பு அமைக்கப்பட்டதால், அதன் அகலம் குறைந்துள்ளது. எனவே சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

துப்புரவு பணி அவசியம்

மதுரை நகரில் பஸ் போக்குவரத்துள்ள சாலைகள், முக்கிய வீதிகள், குடியிருப்புள்ள தெருக்கள், சந்துகள் என மொத்தம் 615 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் உள்ளன. மாநகராட்சி பொறுப்பிலுள்ள 581 கிமீ சாலைகளில் 114 கிமீ சாலை மட்டுமே புதுப்பிக்கப்படுகிறது. 467 கிமீ நீளத்துக்கு தெருக்களில் சாலைகள் படுமோசமான நிலையில் உள்ளன.மழை ஓய்ந்தும் மதுரையில் புழுதி புயல் ஓயவில்லை. முக்கிய சாலைகளில் பஸ் மற்றும் வாகனங்கள் சென்றதும் அதன் பின்னால் புழுதி கிளம்பி வீசுவது பலரையும் பாதிக்கிறது. புழுதியை போக்க மாநகராட்சி தீவிர துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாகும்.

மதுரை மாட்டுத்தாவணி மெயின்ரோடு அகலப்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.

 

Last Updated on Wednesday, 15 December 2010 10:45
 


Page 43 of 167