Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலை சீரமைப்பு பணி தீவிரம்

Print PDF

தினகரன்           15.12.2010

சாலை சீரமைப்பு பணி தீவிரம்

குன்னூர், டிச.15: குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட கரடி பள்ளம் சாலை ரூ.54 லட்சத்திலும், கோத்தகிரி சாலையில் இருந்து சி.எம்.எஸ் செல்லும் இணைப்பு சாலை ரூ.92 லட்சத்திலும், சிங்காரா செல்லும் சாலை ரூ.1 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் தற்போது துவங்கியுள்ளது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் ராமசாமி கூறும்போது, மோசமான நிலையில் உள்ள இந்த 3 சாலைகளும் உடனடியாக சீரமைக்க முடிவு செய்து அரசிடம் இருந்து கிடைக்க பெற்ற நிதியில் பணியை துவக்கி உள்ளோம். தேவையான இடங்களில் சிமெண்ட் தளம் அமைக்கப்படும். மேலும், முறையான மழை நீர் வடிகால் ஏற்படுத்தப்படும்.

 

உடன்குடி பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.48.30 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினகரன்              15.12.2010

உடன்குடி பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.48.30 லட்சம் ஒதுக்கீடு

உடன்குடி, டிச. 15: உடன்குடி பேரூராட்சித்தலைவர் சாகுல்ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை:

 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். அதன்படி சிறப்பு சாலைகள் திட்டத்தில் உடன்குடி பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் புதிய சிமென்ட் சாலைகள் அமைப்பதற்கு ரூ.48.30 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த நிதியில் இருந்து ரூ.14.80 லட்சத்தில் புதுமனை சமத்துவபுரம், ரூ.9.40 லட்சத்தில் வைத்திலிங்கபுரம், ரூ.8.25 லட்சத்தில் மானங்காத்த அய்யனார் கோயில் சாலை, ரூ.7 லட்சத்தில் சாதரக்கோன்விளை வடக்கு மற்றும் தெற்கு தெரு, ரூ.4.30 லட்சத்தில் சைவப்பிரகாசவித்தியாசாலை தெரு, ரூ.3.25 லட்சத்தில் நடுக்கடை காலனி, ரூ.1.30 லட்சத்தில் பரதர் தெரு ஆகிய இடங்களில் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

12வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.7 லட்சம் நிதி கிடைக்கப்பெற்று, புதுமனை உரக்களஞ்சியத்தில் சுற்றுசுவர் கட்டப்பட்டதோடு, சலவைத் தொழிலாளர் குடியிருப்பு தெரு, வடக்கு புதுத்தெரு சந்து, கிறிஸ்தியாநகரம் வடக்கு&தெற்கு தெரு சந்துகள் ஆகிய இடங்களில் பழுதடைந்த சிமென்ட் சாலைகள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ரூ.50.82 லட்சம் செலவில் நபார்டு திட்டத்தில் நகரில் பல்வேறு பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ரூ.1.17 கோடியில் சிமென்ட் சாலை

Print PDF

தினகரன்             15.12.2010

சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ரூ.1.17 கோடியில் சிமென்ட் சாலை

 சங்கரன்கோவில், டிச. 15: சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தில் ரூ.1.17 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது.

தமிழகத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் விதமாக தமிழ அரசு சிறப்பு சாலை என்ற திட்டத்தின் மூலம் அனைத்து நகராட்சியிலும் சாலைகளை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சங்கரன்கோவில் நகராட்சியில் திருவேங்கடம் சாலையில் இருந்து திருநீலகண்ட ஊரணி மேற்கு பகுதி வழியாக கழுகுமலை சாலை வரை யில் சிமென்ட் சாலைக்கு ரூ.50 லட்சமும்,

அம்பேத்கர் நகரிலிருந்து திருநீலகண்ட ஊரணி கிழக்கு பகுதி வழி யாக கழுகுமலை சாலை வரை யில் சிமென்ட் சாலைக்கு ரூ. 32 லட்சமும், மாதாங்கோவில் தெருவில் சிமென்ட் சாலைக்கு ரூ. 18 லட்சமும்,

சங்கர்நகர் 1ம் தெருவில் சிமென்ட் சாலைக்கு ரூ.4.5 லட்சமும், திருவேங்கடம் சாலையில் இருந்து அம்பேத்கர் தெரு வரையில் சிமென்ட் சாலைக்கு ரூ.12.5 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்க தமிழக அரசு ரூ.1.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

அனைத்து பணிகளை யும் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு, சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தினால் சங்கரன்கோவி லில் குண்டும் குழியுமாக காட்சி அளித்த சாலைகள் அனைத்தும் புத்துயிர் பெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பணிகள் தீவிரம்

சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து பணிகளை யும் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு, சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தினால் சங்கரன்கோவி லில் குண்டும் குழியுமாக காட்சி அளித்த சாலைகள் அனைத்தும் புத்துயிர் பெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 


Page 44 of 167