Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கடையநல்லூரில் ரூ.3 கோடியில் சாலைப்பணிகள்

Print PDF

தினகரன்            15.12.2010

கடையநல்லூரில் ரூ.3 கோடியில் சாலைப்பணிகள்

கடையநல்லூர், டிச. 15: கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறப்பு சாலை திட்ட பணிகள் துவங்கியது.

தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் சுமார் ரூ.65 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த ரோடுகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளால் சேதமடைந்த சாலைகள் உட்பட பல்வேறு சாலைகள் இந்த சிறப்பு சாலை திட்டத்தின் மூலம் பொழிவு பெற உள்ளது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பேட்டை மலம்பாட்டை சாலையை ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் தார் தளமும், கரியமாணிக்க பெருமாள் கோயில் ரதவீதிகளில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் கான்கிரீட் தள மும், 33வது வார்டு கருப்பசாமி கோயில் தெரு, வடக்கத்தி அம்மன் கோயில் தெரு உட்பட பல்வேறு ரோடுகளில் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் தார் தளமும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் இதற்கான பணிகள் நேற்று துவங்கியது. பேட்டை மலம்பாட்டை சாலை தார்தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணி களை நகராட்சி இளநிலை பொறியாளர்கள் அகமது அலி, உதவியாளர்கள் ராமகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

காண்டிராக்டர்கள் அருணாசலம், ரவிராஜா, முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் மண் சாலையே இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி துவங்கியது.

Last Updated on Wednesday, 15 December 2010 05:55
 

சிறப்பு சாலை திட்டத்தில் ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர்              14.12.2010

சிறப்பு சாலை திட்டத்தில் ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு

தாராபுரம்: சிறப்பு சாலை திட்டத்தில், தாராபுரம் நகராட்சியில் தார் சாலை மற்றும் சிமென்ட் தளம் அமைக்க ரூ.4.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; இப்பணி நேற்று துவங்கியது. தாராபுரம் நகராட்சி கமிஷனர் துரை கூறியதாவது:

தாராபுரம் நகராட்சி பகுதியில் சிறப்பு சாலை திட்டத் தில் 2010-11ம் ஆண்டுக்கு நான்கு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தார் தளம் அமைக்க, 6,453 கி.மீ., சுற்றளவில் ரூ.2.46 கோடி மதிப்பீடு, சிமென்ட் தளம் அமைக்க 2,948 கி.மீ., சுற்றளவில் ரூ.1.59 கோடி மதிப்பீடு போடப்பட்டது. கொட்டாப்புளிபாளையம் ரோடு, காந்திபுரம், கிழக்கு பெரியார் தெரு, பாரதியார் தெரு, பூக்கார தெரு, என்.என்., பேட்டை குறுக்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சுல் தானியா தெரு பகுதிகளில் சிமென்ட் தளம் அமைத்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்க உள்ளது.

ஆசிரியர் காலனி, முத்து நகர், கிருஷ்ணா நகர், நாமகிரி மின் நகர், கண்ணன் நகர், வேம்பண கவுண்டர் லே-அவுட், முருகன் கல்யாண மண்டபம் தெரு, பீமர் அக்ரஹாரம், கிழக்கு பெரியார் தெரு, அலங்கியம் ரோடு குறுக்கு தெரு, பாரதியார் தெரு, சக்தி நகர் பகுதிகளில் தார் சாலை அமைத்து, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடக்க உள்ளது. என்.என்., பேட்டை தெருவில் தார் சாலை அமைத்தல், விஷ்ணுலட்சுமி நகர், எல்லீஸ் நகர், செட்டியார் தோட்டம், சிவசக்தி நகர், சரஸ்வதி நகர், என்.ஆர்.பி., நகர், ஆர்.கே., நகர், குளத்துப்புஞ்சை தெரு பகுதிகளிலும் தார் சாலையுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்க உள்ளது. இதில், தார் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது, என்றார். நகராட்சி நிர்வாக இன்ஜினியர் தங்கராஜ் உடனிருந்தார்.

Last Updated on Tuesday, 14 December 2010 08:46
 

தர்மபுரி நகராட்சி 3 வார்டுகளில் ரூ43 லட்சம் மதிப்பீட்டில் சாலை

Print PDF

தினகரன்            14.12.2010

தர்மபுரி நகராட்சி 3 வார்டுகளில் ரூ43 லட்சம் மதிப்பீட்டில் சாலை

தர்மபுரி, டிச.14: தர்மபுரியில் மழை பெய்தால், 9 வார்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலங்களில் அரசு மருத்துவமனை, முகமதுஅலி கிளப்சாலை, கந்தசாமி வாத்தியார் தெரு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிந்து 8, 9வது வார்டில் உள்ள கால்வாய் வழியாக செல்கிறது. அங்கு உள்ள சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகின்றன. இதனால் அந்தபகுதி சாலை சேரும், சகதியுமாக மாறிவிட்டது. இதைதொடர்ந்து அப்பகுதி மக்களின் தினசரி வாழ்க்கை பெரும்அளவில் பாதிக்கப்படுகிறது.

எனவே சாக்கடை கால்வாயில் கழிவுநீர் அடைப்பின்றி செல்ல, ஆவின் பால்பண்ணை அருகே சிறுபாலம் உயர்த்தி அமைத்து, தார்சாலை அமைத்து தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் அரசு ரூ19 லட்சத்தில் சாலை அமைத்து சிறுபாலம் உயர்த்தி கட்ட நகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் சாலைப்பணிகளுக்கான பூமிபூஜை போடப்பட்டது. இதுபோன்று ஜி.எம்.தியேட்டர் அருகில் ரூ19லட்சத்தில் சிமென்ட் சாலையும், எஸ்.வி.ரோட்டில் ரூ5லட்சத்தில் தார்சாலையும் போடுவதற்கு பூமிபூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் நகரமன்ற உறுப்பினர்கள் நாட்டான் மாது, சந்திரமோகன், தகடூர் வேணு கோபால், மாது, எழிலரசு, சுமதி, நகராட்சி அலுவலர்கள் சரவணபாபு, முத்துக்குமார், ஒப்பந்ததாரர் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நகரமன்றத்தலைவர் ஆனந்தகுமார்ராஜா கூறும்போது, தர்மபுரி நகராட்சியில் சாலை மேம்பாட்டிற்காக ரூ5.5கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 9வது வார்டில் சாலைவசதியும், 30&வது வார்டில் சிமென்ட் சாலையும், 21&வது வார்டில் சாலையும் போடப்படுகிறது. அதற்கான மதிப்பு ரூ43 லட்சம் என்று கூறினார்.

 


Page 45 of 167