Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

விகேபுரம் நகராட்சி பகுதியில் ரூ.27 கோடியில் சாலை பணிகள்

Print PDF

தினகரன்               14.12.2010

விகேபுரம் நகராட்சி பகுதியில் ரூ.27 கோடியில் சாலை பணிகள்

விகேபுரம், டிச. 14: விகேபுரம் நகராட்சியிலுள்ள 1, 10, 13, 14 மற்றும் 15வது வார்டுகளில் 7 இடங்களில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக் கும் பணியையும், 2, 3, 8, 10, 11, 12, 13, 16 முதல் 19 வரையி லான வார்டுகளில் உள்ள 20 இடங்களில் ரூ.97 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை சபாநாயகர் ஆவுடையப்பன் தொடங்கி வைத் தார்.

அப்போது அவர் பேசுகையில், இப்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஏழை, எளியவர்கள் நலனுக்காக மட்டும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய் அரிசி, சத்துணவில் 5 நாள் முட்டை, இலவச காஸ், லட்சக்கணக்கானவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு திட்டங்களை இந்த ஆட்சி தான் செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சி காலத் தில் எவ்வித நலத்திட்டங் களோ அரசு வேலைவாய்ப்போ அளிக்கப்படவில்லை. எனவே இந்த ஆட்சி தொடர மக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்றார்.

தொடர்ந்து பாபநாசம் பொதிகை அடியில் உள்ள ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். கவுன்சிலர் ராஜன்கான் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் முருகன் வரவேற்றார். இதில் தொமுச பேரவை செயலாளர் பரணி சேகர், தலைவர் நெடுஞ்செழி யன், இளைஞரணி செயலா ளர் செல்வம், கவுன்சிலர்கள் ஜான்சி, ஜெயபிரகாஷ், இசக்கிப்பாண்டியன், செல்வி, பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சபாநாயகர் துவக்கி வைத்தார்விகேபுரம் அய்யனார்குளத்தில் ரூ.25 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் ஆவுடையப்பன் தொடங்கி வைத்தார்.

Last Updated on Tuesday, 14 December 2010 06:28
 

விருதுநகரில் 24 கிமீ சாலைகள் சீரமைப்பிற்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்                    14.12.2010

விருதுநகரில் 24 கிமீ சாலைகள் சீரமைப்பிற்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு

விருதுநகர், டிச. 14: விருதுநகர் நகராட்சி பகுதியில் 24.40 கி.மீ சாலைகளை சீரமைக்க சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து நகராட்சிகளிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. விருதுநகர் நகராட்சி பகுதியில் பாதாளச்சாக்கடை திட்டம் நடந்து வந்ததால் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. திட்டம் நிறைவேற்றப்பட்ட ராமமூர்த்தி சாலை, மல்லாங்கிணறு சாலை, படேல் சாலைகளில் அமைக்கப்பட்ட சாலைகள் ஒரு ஆண்டிற்குள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன.

தமிழக அரசின் சிறப்பு சாலை நிதி ஒதுக்கீட்டின்கீழ் விருதுநகர் நகராட்சிக்கு ரூ.9 கோடி நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி மூலம் பாவாலி ரோடு, பி2, பி2 ரோடு, சர்ச் ரோடு, மீனாம்பிகை ரோடு, புல்லலக்கோட்டை ரோடு,. அகமது நகர், போலீஸ்பாலம் ரோடு, மேலரத வீதி, தெற்கு ரதவீதி, புளுகானுரணி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றுச்சாலைகள் சீரமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விருதுநகர் பகுதியில் அமைக்கப்படும் சாலைகள் அனைத்தும் தரமற்றதாக அமைப்பதால் சில மாதத்திற்குள் குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் விருதுநகருக்கு அரசு ஒதுக்கும் நிதி வீணாகிறது. புதிதாக அமைக்கப்படும் சாலைகள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு சேதமடையாமல் இருக்கும்வகையில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

 

ரூ.3.54 கோடியில் சிறப்பு சாலைகள்

Print PDF

தினகரன்                14.12.2010

ரூ.3.54 கோடியில் சிறப்பு சாலைகள்

சின்னமனூர், டிச. 14: தமிழக அரசு ரூ.10 ஆயிரம் கோடி சிறப்பு சாலைகள் திட்டத்தின் வாயிலாக ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முழுவதும் நகராட்சி பகுதிகளில் சிறப்பு சாலைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு மட்டும் ரூ.3.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியில் நகர் முழுவதும் சிறப்பு சாலைகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ராதாகிருஷ்ணன் ரைஸ்மில் தெரு வில் மயானச்சாலைக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கியது. இதை நகராட்சி தலைவர் தமிழ்செல்வி பார்வையிட்டார்.

 


Page 46 of 167