Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ. 21 கோடியில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமணி              10.12.2010

ரூ. 21 கோடியில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

திருப்பூர், டிச.9: சிறப்புச் சாலை திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் பழுதான சாலைகளை ரூ. 21.02 கோடியில் சீரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு பழுதடைந்துள்ள சாலைகளை புதுப்பிக்கும் விதமாக சிறப்புச் சாலை திட்டத்தை ஏற்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்தது. அதனடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 112 சாலைகள் தேர்வு செய்யப்பட்ட அச்சாலைகளை ரூ.32 கோடி மதிப்பில் புதுப்பிக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதில், 76 சாலைகளை மட்டும் அரசு தேர்வு செய்து ரூ.21.02 ஒதுக்கீடு செய்துள்ளது.

தேர்வு செய்யப்பட்ட சாலைகள் 11 பிரிவாக பிரிக்கப்பட்டு அதில் 7 பணிகளுக்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்கு மாமன்ற அனுமதி பெறப்பட்டதை அடுத்து தற்போது அச்சாலைகள் சீரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை துவங்கியது.

முதற்கட்டமாக, 4வது பிரிவுக்கு உட்பட்ட மாநகராட்சி 3,4 வார்டுகளில் 1.22 கோடி, 17வது வார்டில் ரூ.7.10 கோடி, 3,5 வார்டுகளில் ரூ.12.35 கோடி, 1வது வார்டில் ரூ.14 கோடி, 4-வது வார்டில் ரூ.5 கோடி, 4-வது வார்டில் ரூ.35.20 கோடி என மொத் தம் ரூ.1.96 கோடியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

அஞ்சல் நகரில் நடக்கும் இப்பிரிவு பணிகளை மேயர் க.செல்வராஜ் வியாழக்கிழமை பூமிபூஜை போட்டு துவக்கினார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாலை களையும் புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, பொறியாளர் கௌதமன், மாமன்ற உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், சு.சிவபாலன், எம்.அருணாச்சலம், ஆர்.சந்திரசேகர், சி.கணேஷ், எஸ்.வாசுகி, பி.ஆர்.நடராஜன், வி.கே.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ரூ.4 கோடிக்கு ரோடு; தீர்மானம் "பாஸ்'

Print PDF

தினமலர்            10.12.2010

ரூ.4 கோடிக்கு ரோடு; தீர்மானம் "பாஸ்'

திருப்பூர்:நல்லூர் நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது; தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். செயல் அலுவலர் (பொறுப்பு) குற்றாலிங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு சாலை திட்டத்தில் செய்யப்படும் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்ட விவாதம்:விஜயகுமார் (.தி.மு..,): ஒப்பந்தப்புள்ளி கூடுதலாக உள்ளது. ஒப்பந்த தொகைக்கு மூன்று சதவீதத்துக்கு குறைவாக, பல்லடம் நகராட்சியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. நல்லூரில் 4.97 சதவீதம் அதிகமாக உள்ளதால், நகராட்சிக்கு கூடுதலாக 20 லட்சம், மூன்று சதவீதம் குறைக்காமல் 12 லட்சம் என 32 லட்சம் நஷ்டம். இதர நகராட்சியில் செய்யும்போது, நல்லூரில் ஏன் செய்ய முடியாது? நகராட்சி பொது நிதியை ஒதுக்கினால், இதர பணி பாதிக்கப்படும். செவந்தாம்பாளையம் ஓடைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

குப்பை தொட்டி அதிகமாக தேவைப்படுகிறது.நாகராஜ் (தி.மு..,): சத்தியமூர்த்தி நகர், கவுதம் நகரில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். தெருவிளக்கு பிரச்னை தொடர்கிறது. ராக்கியாபாளையம் பிரிவு, மணியகாரம்பாளையம் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.பத்திரன் (தி.மு..,): வி.ஜி.வி., கார்டனில் ஒரு மோட்டார் மட்டும் இருக்கிறது. 500 வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை. கூடுதலாக இரண்டு மோட்டார் தேவைப்படுகிறது.சுப்ரமணியம் (மா.கம்யூ.,): அனைத்து வார்டுகளிலும் முட்செடிகள் முளைத்துள்ளன. அவற்றை அகற்ற, தனித்திட்டம் தேவை. வடிகாலை தூய்மைபடுவத்துவதில்லை.

குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.நகராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் அளித்த பதில்: செங்கல், சிமென்ட் என கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், டெண்டர் மதிப்பு அதிகமாகியுள்ளது. தெருவிளக்கு பிரச்னை உள்ளிட்ட மின் பிரச்னைக்கு, மின்வாரியத்திடம் பேசப்படும். நகராட்சி முழுவதும் முட்செடி அகற்றப்படும். வடிகாலை தூய்மைப்படுத்த, கூடுதலாக சுயஉதவிக்குழுவினர் நியமிக்கப்பட உள்ளனர். மாநகராட்சியோடு இணைய உள்ளதால், வேலம்பாளையம், நல்லூர் நகராட்சியில் சேகரமாகும் குப்பை பிரச்னைக்கு, மாநகராட்சியோடு இணைந்து திட்டம் செயல்படுத்தப்படும், என்றனர்.

 

தென்காசியில் ரூ.3.51 கோடியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்

Print PDF

தினமலர்              10.12.2010

தென்காசியில் ரூ.3.51 கோடியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்

தென்காசி : தென்காசி நகராட்சி பகுதியில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் சீரமைக்கும் பணி துவங்கியது.

தென்காசி நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் உள்ள பெரும்பான்மையான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக இருக்கிறது. மழைக் காலங்களில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

சீர்குலைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதனை நகராட்சி தலைவர் கோமதிநாயகமும் ஏற்றுக் கொண்டு சாலைகளை சீரமைக்க அரசிடம் நிதியுதவி பெறுவது என தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது.

அரசும் இதனை ஏற்றுக் கொண்டு தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க 3 கோடியே 51 லட்சம் அனுமதி அளித்தது. இதனையடுத்து நகராட்சி பகுதியில் சாலைகள் சீரமைக்கும் பணி துவங்கியது. நேற்று தைக்கா தெரு, போலீஸ் காலனி பகுதியில் சாலைகள் சீரமைக்கும் பணியை நகராட்சி தலைவர் கோமதிநாயகம் துவக்கி வைத்தார்.

நகராட்சி கமிஷனர் செழியன், இன்ஜினியர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நவாஸ், தி.மு..வட்ட செயலாளர் மோகன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தைக்கா தெரு, போலீஸ் காலனி, ரயில்வே ரோடு உள்ளிட்ட சாலைகள் மட்டும் சீரமைக்க 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 


Page 48 of 167