Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ஒரு கோடியில் சிறப்பு சாலை

Print PDF

தினமலர்               10.12.2010

ஒரு கோடியில் சிறப்பு சாலை

வேலூர்: ஒரு கோடி ரூபாயில் சிறப்பு சாலை அமைக்க சத்துவாச்சாரி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சத்துவாச்சாரி நகராட்சி கூட்டம் தலைவர் ஜெய லட்சுமி ஏழுமலை தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஜானகிராமன், செயல் அலுவலர் சண்முகம் கலந்து கொண்டனர். "சத்துவாச்சாரி நகராட்சி வார்டுகளில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சிமென்ட், தார் சாலைகள் ஒரு கோடியே 5லட்சம் செலவில் பணிகள் துவங்குவது' உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மாநகரில் 76 இடங்களில் அமைக்கப்படுகிறது ரூ21 கோடியில் புதிய சாலைகள் பணிகள் துவங்கியது

Print PDF

தினகரன்                 10.12.2010

மாநகரில் 76 இடங்களில் அமைக்கப்படுகிறது ரூ21 கோடியில் புதிய சாலைகள் பணிகள் துவங்கியது

திருப்பூர், டிச.10: சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.21.01 கோடியில், 76 இடங்களில் புதிய சாலை கள் அமைக்கும் பணி திருப்பூரில் நேற்று துவங்கியது. மாநகராட்சி மேயர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி திருப்பூர் மாநகரில் ரூ.21.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கு முறையாக டெண்டர் கோரப்பட்டு, மாநகராட்சி மன்றத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த பணிகள் நேற்று துவங்கின. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ், திருப்பூர் மாநகராட்சி, 4வது வார்டுக்குட்பட்ட புதிய பஸ்நிலையம் பகுதியில் 1.95 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் செல்வராஜ் நேற்று துவக்கி வைத்தார். பூமி பூஜையுடன் இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் கவுதமன் மற்றும் அனைத்து கட்சிகளை கவுன்சிலர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் பணிகள் அடுத்தடுத்து துவங்க உள்ளன. இந்த பணிகள் இன்னும் இரு மாதங்களில் முடிக்கப்படும் என கூறப்படுகிறது. பணிகள் தரத்துடன் நடக்கிறதா என்பது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘’ரூ.21.02 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் அனைத்தையும் மிகவும் தரத்துடன் மேற்கொள்ள பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பணிகள் நடக்கிறதா என்பது தொடர்பாகவும், பணிகளின் தரம் குறித்தும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த பணிகள் தரத்துடனும், விரைந்தும் மேற்கொள்ளப்படும்," என்றார்.

 

சாலையை சீரமைக்க ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்                10.12.2010

சாலையை சீரமைக்க ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கீடு

கூடலு£ர்,டிச.10:கூடலு£ர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் அன்னபுவனேஸ்வரி தலைமையில் நடந்தது. துணை தலைவர் அப்துல்ரகுமான், செயல் அலுவலர் ரஜினி முன்னிலை வகித்தனர். நகரா ட்சி தலைவர் பேசுகையில், தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்திற்கு மன்ற அனுமதி கோரி கடந்த 19ந்தேதி நடந்த அவசர கூட்ட த்தில் , இந்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய வார்டு உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பியபோது குறிப்பிட்ட வார்டுகளுக்கு சாலை மற்றும் நடைபாதைக்கைக்கு தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய கூட்டப்பட்டது என்றார். தலைவரின் பதிலை மினிட் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று கவுன்சிலர்கள் என்று கூறினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட் டது. பின்னர் 1 முதல் 13 வார்டுகளுக்கும் சாலை மற்றும் நடைபாதைக்கு தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்குவது. 12 வது வார்டு பகுதியில் நவீன இறைச்சி கூடத்தை மறு ஏலம் விடுவது எனவும், 6 வது வார்டு பழைய நீதிமன்ற சாலையிலுள்ள மதுக்கடையை மாற்ற வேண்டும் என்ற கவுன்சிலர் பாதுஷா விடுத்த கோரிக்கையை கலெக்டருக்கு பரிந்துரை செய்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 49 of 167