Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

தூத்துக்குடி மாநகராட்சி ரோடுகள் படுமோசம் துரித நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்?

Print PDF

தினமலர்                09.12.2010

தூத்துக்குடி மாநகராட்சி ரோடுகள் படுமோசம் துரித நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்?

தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து ரோடுகளிலும் உள்ள ஆபத்தான பள்ளங்கள் மற்றும் ஆழமான குழிகளை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து ரோடுகளையும் புதுப்பிக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.இது குறித்து தூத்துக்குடி அகில இந்திய தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜா சங்கரலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நான்கு வழிபோக்குவரத்தினை கொண்ட நகரம் என்ற பெருமை தூத்துக்குடிக்கு மட்டுமே உண்டு. மேலும் தமிழக அளவில் விரைவாக வளர்ச்சி அø டந்து வரும் தொழில் நகரம் என்ற பெருமை பெற்றுள்ள தூத்துக்குடி மாநகரம் உள்கட்டமைப்பு வசதிகளில் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டு வருகிறது.

நகராட்சியாக இருந்த தூத்துக்குடி மாநகராட்சி அந்தஸ்து பெற்று இரண்டாண்டுகளை கடந்த விட்டபோதிலும், இன்றும் நகராட்சியாக எப்படியிருந்ததோ அதைவிட மிக மோசமான நிலையில் தான் உள்ளது. தமிழகத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள ரோடுகள் எல்லாம் சிமெண்ட் ரோடாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி அந்தஸ்தில் உள்ள தூத்துக்குடியில் மட்டும் ரோடுகள் எல்லாம் மிகவும் மோசமான நிலையில் காட்சியளித்து வருகிறது. மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகும் அந்த பணி இழுத்துக் கொ ண்டே போகிறதே தவிர, எந்த இடத்திலும் முழுமையாக இன்னமும் நிறைவு பெற்றதாக தெரியவில்லை. மாநகர் பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடைத்திட்டம் என்ற போர்வையில் ரோடுகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாகவே காட்சியளித்து வருகிறது. இதனால் தூத்துக்குடியில் எந்த பக்கம் போனாலும் உடைந்து மோசமான ரோடுகளாகத் தான் காட்சி அளிக்கிறது.

தூத்துக்குடியில் மேற்கு கிரேட் காட்டன் ரோடு மற்றும் விக்டோரியா ரோடு முக்கியமானவையாகும். மாநகரின் மையமானப் பகுதியில் அமைந்துள்ள இந்த இரண்டு பிராதன சாலையில் தான் முக்கிய வணிக நிறுவனங்கள், ஷிப்பிங் ஏஜெண்சிகள் போன்றவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த ரோடுகளில் அதிகாலை முதல் இரவு வரை போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும். மாநகரின் நீளமான ரோடாக அமைந்துள்ள விக்டோரியா ரோட்டில் அந்தோணியார் ஆலயம், வஉசி., காய்கறி மார்க்கெட், டிஎம்பி.,தலைமை அலுவலகம், ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரபல தனியார் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர் என பல உள்ளன. இந்த ரோட்டில் இருந்து பல முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சலைகளும் பிரிந்து செல்கிறது. பரபரப்பாக செயல்படும் விக்டோரியா ரோட்டின் நிலைமை தற்போது மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட அந்த ரோடு சரிவர போடப்படாததால் மரணக்குழியாக பல இடங்களில்காட்சி அளித்து வருகிறது. இதேபோல் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் தெற்கு ராஜா தெருவில் செயல்பட்டு வருகிறது.

இந்த தெருவில் தான் இந்திய வர்த்தக தொழில் சங்கம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம், தூத்துக்குடி பருப்பு வியாபாரிகள் சங்கம் மற்றும் பல வணிக நிறுவனங்கள் மற்றும் அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரான்சிஸ் சேவியர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போன்றவை அமைந்துள்ளன. அப்படிப்பட்ட இந்த தெருவில் தொடர் மழை பெய்தால் மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து குளம் போல் காட்சி அளித்து வருகிறது. சிறப்பான முறையில் வணிகம் செயல்பட்டு வரும் நிலையில், மோசமான நிலையில் காணப்படும் ரோட்டினால் பல இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலைமையை சீர் செய்யும் வகையில் சாக்கடை கழிவுநீர் மழைநேரம் வெளியே வராமல் தடுக்க சிமெண்ட் பிளேட்டுகளால் மூடவேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் பாதாளசாக்கடை திட்டங்களை விரைவில் முடித்து நகரில் உள்ள அனைத்து ரோடுகளையும் போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மேலும் தூத்துக்குடியில் இருக்கும் பிரதான இரண்டு முக்கிய சாலைகளில் ஒன்றான வி.இ., ரோட்டையாவது தற்காலிகமாக விபத்தில்லாமல் வாகனங்கள் சென்று வர சீரமைக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜா சங்கரலிங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் ரூ. 3.50 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி             09.12.2010

பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் ரூ. 3.50 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும்: நகர்மன்றத் தலைவர்

பெரம்பலூர், டிச. 8: பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் ரூ. 3.50 கோடியில் சீரமைக்கப்படும் என்றார் நகர்மன்றத் தலைவர் எம்.என். ராஜா. பெரம்பலூர் நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நகராட்சியின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. கழிவு நீர் நீரேற்று நிலையங்களுக்கான பணிகளும் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் சிறப்புத் திட்டமான சிறப்புச் சாலைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் நகராட்சிக்கு ரூ. 3.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் நகராட்சியில் 11.7 கி.மீட்டர் தொலைவுள்ள சாலைகளைச் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பழைய பேருந்து நிலையம் காந்தி சிலையிலிருந்து, காமராஜர் வளைவு வரையுள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சாலை, தொலைத் தொடர்புத் துறை அலுவலகம் வரையிலான மதரஸô சாலை, கனரா வங்கியிலிருந்து காந்தி சிலை வரையிலான சாலை, திருநகரில் இருந்து ஆலம்பாடி பிரிவு சாலை வரையிலான சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது.

இந்தப் பணிகள் அனைத்தும் 2 மாதங்களில் முடிக்கப்படும். மேலும், பெரம்பலூர் நகராட்சியில் ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், 1-வது வார்டில் உள்ள எம்.ஜி.ஆர். நகர், அண்ணாநகர் பகுதிகளில் ரூ. 7.30 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை அமைத்தல், 2-வது வார்டில் உள்ள இந்திராநகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் ரூ. 11.10 லட்சம் மதிப்பிலும், துறைமங்கலம் 9-வது வார்டு பகுதியில் உள்ள வாசுகி தெரு, üவையார் தெரு பகுதிகளில் ரூ. 6.80 லட்சம் மதிப்பிலும், 12-வது வார்டு திருவள்ளுவர் தெருவில் ரூ. 7.15 லட்சம் மதிப்பிலும், 13- வது வார்டு டாக்டர் அம்பேத்கர் தெரு, சிட்டிபாபு தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 7 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்படும்.

மேலும், ரூ. 3.50 கோடியில் தார்ச் சாலைகள், சிமென்ட் சாலைகள் சீரமைக்கப்படும் என்றார் அவர். கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றுவது தொடர்பான 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆணையர் சுரேந்திர ஷா, பொறியாளர் கருணாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ. அப்துல் பாரூக், பி. அன்புதுரை, ஆர்.டி. ராமச்சந்திரன், என். ஜெயக்குமார், கே.ஜி. மாரிக்கண்ணன், ஜே.எஸ்.ஆர். கருணாநிதி, கே. கனகராஜ், ஆர். சரவணன், எஸ். சிவக்குமார், எம். ரஹமத்துல்லா, ஆர். ஈஸ்வரி, கே. புவனேஷ்வரி, பி. கண்ணகி, ஜி. பொற்கொடி, எம். தாண்டாயி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ரூ. 5 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணி

Print PDF

தினமணி               09.12.2010

ரூ. 5 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணி

திருப்பரங்குன்றம், டிச. 8: மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் மழையால் பாதிப்படைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணி ரூ. 5 கோடி செலவில் பூஜையுடன் (படம்) புதன்கிழமை தொடக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சிறப்புச் சாலைகளின் திட்டத்தின்கீழ் அவனியாபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளைச் சீரமைக்க, அரசு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கி இருந்தது.

இதனையடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான அவனியாபுரம், பெரியசாமி நகர்,திருப்பதி நகர்,வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 14 கி.மீ. நீள சாலைகளைச் சீரமைக்கத் திட்டமிடப்பட்டது.

புதன்கிழமை நகராட்சித் தலைவர் போஸ் முத்தையா தலைமையில், சாலைப் பணிகள் பூமி பூஜையுடன் தொடக்கி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் கருப்பசாமி,நகராட்சி செயல் அலுவலர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 50 of 167