Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

குளச்சல் நகர் பகுதியில் ரூ98 லட்சத்தில் சாலைகள் சீரமைப்பு நகர்மன்ற கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன்               07.12.2010

குளச்சல் நகர் பகுதியில் ரூ98 லட்சத்தில் சாலைகள் சீரமைப்பு நகர்மன்ற கூட்டத்தில் முடிவு

குளச்சல், டிச. 7: குளச்சல் நகராட்சியில் ரூ98 லட்சத்தில் சாலைகளை சீரமைப்பது என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குளச்சல் நகர்மன்ற அவசரக்கூட்டம் தலைவர் ஜேசையா தலைமையில் நடந்தது. ஆணையர் சர்தார், பொறியாளர் கன்னையா, சுகாதார அலுவலர் செல் வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பழனி அஜெண்டா வாசித்தார்.

கூட்டத்தில் ரூ98.4 லட்சத்தில் சன்னதி தெரு முதல் எம்.ஜி.ஆர். சாலை வரை சிமெண்ட் தளம் அமைத்தல், மற்றும் வார்டு எண்கள் 8,9,11,12,13,14 ஆகிய துறைமுகத் தெருக் கள், மாதா காலனி, சீம்பிளிவிளை, தும்பக்காட்டுவிளை, ஆண்டிப்பிள்ளை தெரு, மலவிளை, ஆசாரி மார் மேலத் தெரு, ஆசாத் நகர் முதல் பள்ளிச்சாலை ஆகிய பகுதிகளில் சிமெ ண்ட் தளங்கள் அமைப்பது, 21&வது வார்டு பண்டகசாலைபுரம் ஆசாத் தெருவில் மழை நீர் வடிகால் ஓடை யுடன் கூடிய சிமெண்ட் தளத்தை நீட்டித்து பணி செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

12 பேரூராட்சிகளில் ரூ8.5 கோடி மதிப்பில் சாலை பணிக்கு உத்தரவு

Print PDF

தினகரன்            07.12.2010

12 பேரூராட்சிகளில் ரூ8.5 கோடி மதிப்பில் சாலை பணிக்கு உத்தரவு

மதுரை, டிச. 7: மதுரை மாவட்டத்திலுள்ள 12 பேரூராட்சிகளில் ரூ.8.5 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க பணி ஆணைகள் நேற்று வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் திருநகர், ஹார்விபட்டி, பரவை, வாடிப்பட்டி, விளாங்குடி, அலங்காநல்லூர், சோழவந்தான், பேரையூர், டி.கல்லுப்பட்டி, வல்லாளபட்டி, பாலமேடு, எழுமலை ஆகிய பேரூராட்சிகளில் 82 சிமிண்ட் சாலைகள் அமைக்கப்பட உள் ளது. ரூ.8 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் 33 ஆயிரத்து 876 கி.மீ., நீள சாலை பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கான ஆணைகளை அந்தந்த போரூராட்சி செயல் அலுவலர்களிடம் கலெக்டர் காமராஜ் நேற்று வழங்கினார்.

 

மண்மாதிரி எடுத்து சோதனை

Print PDF

தினகரன்          07.12.2010

மண்மாதிரி எடுத்து சோதனை

சின்னமனு£ர், டிச. 7: சின்னமனு£ர் நகரில் ரூ.3 கோடியே 54 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மண் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

தமிழக அரசு நகராட்சி பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க சிறப்பு சாலைகள் திட்டத்தின்நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சின்னமனு£ர் நகர்பகுதி 26 வார்டுகளில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதற்கான மண் பரிசோதனைக்கு காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப வல்லுநர்கள் சின்னமனு£ர் வந்தனர். தேரடி, வடக்கு ரதவீதி பகுதிகளில் மண் மாதிரி எடுத்து சென்றனர்.

மண் சோதனை முடிவு தெரிந்தவுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கி விடும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 52 of 167