Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திண்டுக்கல்லில் ரூ.2 கோடியில் சிமெண்ட் சாலைப் பணி

Print PDF

தினமணி         06.12.2010

திண்டுக்கல்லில் ரூ.2 கோடியில் சிமெண்ட் சாலைப் பணி

திண்டுக்கல், டிச. 5: திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் ரூ.2 கோடி செலவில் சிமெண்ட் தளம் அமைத்தல் மற்றும் நடைபாதையில் டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணியை, நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் நகரில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில், சாலைகளைப் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி, சிறப்பு சாலைத் திட்டம் 2010-11-ன் கீழ், வார்டு எண் 16 மற்றும் 31 ஆகியவற்றில், வடிகால், பாலம் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரவுண்ட் ரோட்டை சீரமைக்கும் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கான விழாவில், திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன், நகராட்சி ஆணையர் அர. லட்சுமி, வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள், நடைபயில்வோர் சங்கத்தினர், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பின்னர், நகர்மன்றத் தலைவர் கூறுகையில், நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில், சாலைகள் மற்றும் இதர சாலைகளைப் புதுப்பிக்க, துணை முதல்வர் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதைத் தவிர, நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.8 கோடி நிதி வரப் பெற்றுள்ளது. மொத்தம் ரூ.20 கோடி மதிப்பில் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் புதுப்பிக்கும் பணி தொடங்கப்படும் என்றார்.

 

திருவொற்றியூரில் சாலை விரிவாக்கப் பணி 3ம் கட்ட ஆய்வு கூட்டம்

Print PDF

தினகரன்                 06.12.2010

திருவொற்றியூரில் சாலை விரிவாக்கப் பணி 3ம் கட்ட ஆய்வு கூட்டம்

திருவொற்றியூர், டிச.6: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ11.5 கோடி செலவில் சுங்கச்சாவடி முதல் எர்ணாவூர் மேம்பாலம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 65 அடி சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், மந்தகதியில் பணிகள் நடக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தொடர்ந்து நடக்கிறது.

திருவொற்றியூரில் ரூ88 கோடியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்ட பணியும் முடியவில்லை. பள்ளம் தோண்டப்பட்டதோடு, மாதக்கணக்கில் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், சாலை விரிவாக்கம், பாதாளச் சாக்கடை பணிகளை துரிதப்படுத்த 3ம் கட்ட ஆய்வு கூட்டம் திருவொற்றியூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் கலெக்டர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், வருவாய்த்துறை, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். முடிந்துள்ள பணிகள் மற்றும் முடிவடையாத பணிக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், பொன்னேரி ஆர்டிஓ குமார், மாதவரம் தாசில்தார் உமா, நகராட்சி தலைவர் ஜெயராமன், நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மழைக்கு சேதமான சாலைகள் ரூ4 லட்சத்தில் சீரமைப்பு கீழக்கரை நகராட்சி தீர்மானம்

Print PDF

தினகரன்              02.12.2010

மழைக்கு சேதமான சாலைகள் ரூ4 லட்சத்தில் சீரமைப்பு கீழக்கரை நகராட்சி தீர்மானம்

கீழக்கரை, டிச. 2: கீழக்கரை நகராட்சி பகுதியில் சமீபத்திய மழைக்கு சேதமான சாலைகளை ரூ4 லட்சத்தில் சீரமைக்க கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பசீர்அகமது தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜெய்னுதீன், பணி மேற்பார்வையாளர் மணி முன்னிலை வகித்தனர். கீழக்கரை நகரில் சமீபத்தில் பெய்த பலத்த மழையில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ரூ4 லட்சம் நிதியில் சாலைகளை சீரமைக்கும் பணியை துவக்க அனைத்து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. மேலத்தெரு புதுபள்ளி எதிரே அமைக்கப்பட உள்ள ஹைமாஸ் விளக்கை 18 வாலிபர் தர்கா பகுதியில் வைக்க வேண்டுமென கவுன்சிலர் அப்துல் மாலிக் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதுதொடர்பாக கடந்த கூட்டத்தில் தீர்மானம் வைத்தபோது ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை எனக்கூறி அவரது தீர்மானத்தை தலைவர் நிராகரித்தார். தீர்மானம் நிறைவேற்றாவிடில் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அப்துல் மாலிக் கூறியதால் பரபரப்பு நிலவியது. கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 53 of 167