Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ2 கோடியில் வால்பாறை சாலைகள் புதுப்பிப்பு

Print PDF

தினகரன்            01.12.2010

ரூ2 கோடியில் வால்பாறை சாலைகள் புதுப்பிப்பு

வால்பாறை, டிச.1: வால் பாறை பகுதியில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. காஞ்சமலை சாலை, நடுமலை சாலை, வால்பாறை மருத்துவமணை சாலை, நல்லகாத்து சாலை உள்ளிட்ட சாலைகள் வால்பாறை நகராட்சி மூலம் நவீனமாக்கப்படுகிறது.

சுமார் ரூ.2 கோடியே 23 லட்சம் மதீப்பீட்டில் கான்கீரீட் சாலைகள் போடப்படஉள்ளது. இப்பணிகளை வால்பாறை நகராட்சி தலைவர் கணேசன், செயல் அலுவலர் ராஜ்குமார், பொறியாளர் சுப்ரமணியன் உள்ளிட்டடோர் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், நேர்தியாகவும் செய்யவேண்டும் என ஓப்பந்ததாரரிடம் கூறினர்.

 

மழையில் சேதமான 100 சாலைகள் 15ம் தேதிக்கு பிறகு சீரமைக்கப்படும்

Print PDF

தினகரன்          01.12.2010

மழையில் சேதமான 100 சாலைகள் 15ம் தேதிக்கு பிறகு சீரமைக்கப்படும்

சென்னை, டிச.1: சேதமான சாலைகள் 15ம் தேதிக்கு பிறகு சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆணையர் தா.கார்த்திகேயன், துணை மேயர் சத்தியபாமா முன்னிலை வகித்தனர்.

பின்னர் மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கோயம்பேடு அருகில் உள்ள தெற்காசிய விளையாட்டு கிராமம் பகுதியில் 195 சதுர மீட்டர் நிலம் நிரந்தரமாகவும், பிராட்வே பேருந்து நிலைய நடைபாதை அமைந்துள்ள இடத்தில் பூமிக்கு கீழே 845 சதுர மீட்டரும், பூமிக்கு மேலே 285 சதுரமீட்டர் நிலம் நிரந்தரமாகவும் 644 சதுர மீட்டர் நிலம் தற்காலிகமாகவழங்குதல் உள்பட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மழையால் 4.35 லட்சம் சதுர மீட்டர் சாலை சேதமடைந்தது. இதை சீரமைக்க ஒப்பந்தம் விடப்பட்டு அக்டோபர் 18ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது. பருவ மழை தீவிரமடைந்ததால் அந்த பணி அக்டோபர் 27ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. மழையால் நூறு பேருந்து சாலைகள் சேதமடைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க தமிழக அரசு நிதி உதவி செய்யும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் 15ம் தேதிக்கு பிறகு இந்த சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.

 

துணை முதல்வர் பேட்டி சாலைகளை சீரமைக்க ரூ1000 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்             01.12.2010

துணை முதல்வர் பேட்டி சாலைகளை சீரமைக்க ரூ1000 கோடி ஒதுக்கீடு

நாகர்கோவில், டிச. 1: குமரி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு அணை திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் வந்தார்.

பயனாளிகள் ஜெகன், மணிகண்டராஜன், பானுமதி ஆகியோரது வீடுகளை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். வீட்டு சாவிகளையும் பயனாளிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 21 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 3,000 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் வீடுகளும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தில் 2010&11ம் ஆண்டுக்கு 1,539 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு இதுவரை 580 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதர 959 வீடுகளும், டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடும்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. மழை நின்றதும் விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 54 of 167