Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ.6 கோடியில் ரோடு விரிவாக்கம்

Print PDF

தினமலர்              26.11.2010

ரூ.6 கோடியில் ரோடு விரிவாக்கம்

பல்லடம்: பல்லடத்தில் ரூ.6 கோடி மதிப்பில் மங்கலம் ரோடு, பொள்ளாச்சி ரோடு விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியுள்ளது. பல்லடத்தில் இருந்து மங்கலம் செல்லும் ரோடு மிகவும் குறுகலாக இருந் தது. இந்த ரோட்டில் அடிக் கடி போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டு வந் தது. மங்கலம் ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண் டும் என அமைச்சர் சாமிநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது பல்லடத்தில் இருந்து மங்கலம் ரோட்டில் எட்டாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேலம்பாளையம் பிரிவு வரை, ஐந்தரை மீட்டரில் இருந்து ஏழு மீட்டராக விரிவுபடுத்தும் பணி நான்கு கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறையால் துவக்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்படும் பணிக்கு தனியார்களிடம் இருந்து கையகப்படுத்தப்படும் இடங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு நெடுஞ்சாலைத்துறையினர் விபரங்கள் அனுப்பி உள்ளனர். இதேபோல், பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கதர் கடையில் இருந்து உடுமலை ரோடு சந்திப்பு வரையிலான 1.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு அகலப்படுத்தும் பணியும் துவங்கியுள்ளது.7 மீட்டர் ரோடு 15 மீட்டர் கொண்ட ரோடாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரூ. இரண்டு கோடியில் நடக்கும் இப்பணி நிறைவு பெற்றவுடன் சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. மங்கலம்ரோடு, பொள் ளாச்சிரோடு விரிவாக்கப்பணிகள் நிறைவு பெற்றால் பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் சற்று குறையும் வாய்ப்பு ஏற்படும்.

 

ரூ.70லட்சம் மதிப்பில் ரோடுகள் அமைக்க நாசரேத் டவுன் பஞ்., கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 26.11.2010

ரூ.70லட்சம் மதிப்பில் ரோடுகள் அமைக்க நாசரேத் டவுன் பஞ்., கூட்டத்தில் முடிவு

நாசரேத் : நாசரேத் டவுன் பஞ்., சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011ம் வருடத்தின் கீழ் ரூபாய் 70லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் ரோடுகள், தார் ரோடுகள் போடுவதற்கு டவுன் பஞ்., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாசரேத் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் தலைவர் மாமல்லன் தலைமையில், நிர்வாக அதிகாரி தேவராஜ், துணைத்தலைவர் ஜமீன் சாலமோன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் நாசரேத் டவுன் பஞ்., இரண்டாவது வார்டு பிரகாசபுரம் மறுகால் துறையில் இருந்து கடம்பாகுளம் வரை செல்லும் ஓடையை தூர்வாரி கழிவுநீர் தடையின்றி செல்ல மேற்படி ஓடையை சீரமைப்பது, நாசரேத் டவுன் பஞ்.,சில் சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லை மற்றும் சுகாதார கேடு, தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளதால் கொசுவை அப்புறப்படுத்த கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்குவது, அழகம்மாள் ஓடை ஆரம்பம் முதல் முடிவு வரை தூர்வாருவதற்கு இன்ஜினியரிடம் தொழில்நுட்ப அனுமதி பெற்று தூர்வாருவது, நாசரேத் டவுன் பஞ்., 17வது வார்டு அழகம்மாள் ஓடையில் உள்ள பாலம் பழுதடைந்து உள்ளது.

 இதனை பொதுநிதியிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பது, நாசரேத் டவுன் பஞ்., சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011ம் வருடத்தின் கீழ் ரூ.70லட்சம் மதிப்பில் பெத்தானியாநகர் முதல் கந்தசாமிபுரம், திருவள்ளுவர்காலனி வரையிலும், திருமறையூர் பஸ்நிறுத்தம் முதல் ஐ.எம்.எஸ். கட்டிடம் வரையிலும், ஆசீர்வாதபுரம், சன்னதிதெரு முதல் வகுத்தான்குப்பம் ரோடு வரையிலும், பிரதர்டன் தெரு முதல் பஸ் ஸ்டாண்ட் ரோடு வரையிலும், வகுத்தான்குப்பம் மற்றும் கீழத்தெரு வரையிலும் சிமெண்ட் ரோடுகள் அமைக்கவும், என்டிஎன் தெரு, ஜெயபாண்டியன் தெரு முதல் வெள்ளரிக்காயூரணி தேவர் சிலை வரை தார் ரோடு அமைக்கவும், 2010-2011 இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியிலிருந்து ஆழ்வார்திருநகரி நீரேற்று நிலையம் கிணறு பழுது பார்த்து குழாய் விஸ்தரிப்பு பணியை ரூ.11லட்சம் மதிப்பில் மேற்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கொம்பையா, கனியம்மாள், ராமபுஷ்பம், உத்திரக்குமார், ஜான்ஞானதாஸ், மோகன், மீனாராஜகுமாரி, ஜெசிஜேம்ஸ், அன்பு தங்கபாண்டியன், கஸ்திஜெயபால், ஜெயராஜ், செல்வின், சந்திரன், சாராள், மத்தேயு ஜெபசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

பள்ளிபாளையத்தில் ரூ82.76 லட்சத்தில் புதிய சாலைகள்

Print PDF

தினகரன்            26.11.2010

பள்ளிபாளையத்தில் ரூ82.76 லட்சத்தில் புதிய சாலைகள்

பள்ளிபாளையம்,நவ.26. பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் ரூ82.76 லட்சம் செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் துவங்கியுள்ளது. நகர்மன்ற தலைவர் குமார் பணிகளை துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி பகுதிக்குட்பட்ட சாலைகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு ரூ82.76 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு பள்ளிபாளையம் நகராட்சியில் ஏழு இடங்களில் காங்கிரீட் சாலைகளும், இரண்டு இடங்களில் தார் சாலைகளும் அமைக்கப்படுகிறது. புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் பள்ளிபாளையம் நகராட்சியில் நேற்று துவங்கியது. இதற்கான துவக்க விழா நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி தலைமையில் நடந்தது. பூமி பூஜைக்கு பின்னர் பணிகள் துவங்கின. நகர்மன்ற தலைவர் குமார் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் சுமதி, ரங்கசாமி, நகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 56 of 167