Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சிறப்பு சாலைகள் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தரவு ஆட்சியர் தகவல்

Print PDF

தினகரன்                   26.11.2010

சிறப்பு சாலைகள் திட்டம் மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தரவு ஆட்சியர் தகவல்

கடலூர், நவ. 26: கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;

கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளில் சிமென்ட் சாலை மற்றும் தார்சாலை அமைப்பதற்கு முதல்வர் கருணாநிதி ரூ.16 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் படி நகராட்சி பகுதி யில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளது.

கடலூர்: பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்ட பகுதிகளில் சாலை பணி களை மேற்கொள்ள முதல் கட்ட மாக 32 சாலைகள் 19.12 கி.மீட்டரில் அமைப்பதற்கும், அத்துடன் 8 சாலைகளுக்கும் சேர்த்து ரூ.10.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 75 சாலைகள் அமைப்பதற்கு ரூ.10 கோடியே 32 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சி பகுதியில் 5.54 கி.மீ தூரத்திற்கு ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைக்கும் பணிக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சியில் தார்சாலைகள் அமைப்பதற்கு ரூ.ஒரு கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலும், சிமென்ட் சாலைகள் அமைப்பதற்கு ரூ.ஒரு கோடியே 39 லட்சம் மதிப்பீட்டிலும் ,விருத்தாசலம் நகராட்சியில் ரூ.80 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 13 சிமென்ட் சாலைகளும், ஒரு கோடியே 50 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் 28 தார் சாலைகளும் அமைப்பதற்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ரூ.ஒரு கோடியே 2 ஆயிரம் மதிப்பீட்டில் 14 தார் சாலைகள் அமைப்பதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை போல் சிதம்பரம் நகராட்சியில் சி.ஆர்..பி.சி திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேலரத வீதியில் ரூ 65 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளும், வேணுகோபால் தெரு, சிதம்பரம்& சிவபுரி& கவரப்பட்டு சாலை மற்றும் சிதம்பரம் ரவுண்டானா மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றுக்காக ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பணி ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சிறப்பு சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் மற்றும் தார் சாலைகள் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

 

மணவாளக்குறிச்சியில் ரூ75 லட்சம் செலவில் சாலைகள் சீரமைப்பு

Print PDF

தினகரன்             26.11.2010

மணவாளக்குறிச்சியில் ரூ75 லட்சம் செலவில் சாலைகள் சீரமைப்பு

மணவாளக்குறிச்சி, நவ.26: மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் ரூ75 லட்சம் மதிப்பீட்டில் சாலைகளை சீரமைப்பது என பேரூராட்சி அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மணவாளக்குறிச்சி பேரூராட்சியின் அவசர கூட்டம் துணைத்தலைவர் குட்டிராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராஜேஸ்வரி தேவகிருபை முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் மரிய ஜெயந்தன், லீனஸ், முகம்மதுராபி, மைதீன்கான், முருகேசன், ஸ்ரீகுமார், ராஜன்பாபு, சாகிராபீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2010 & 2011 சிறப்பு சாலைகள் திட்டத்தில் ரூ40.50 லட்சத்தில் ஏலாக்கரை முதல் வள்ளியாற்றின் கரை வரை சாலையில் தார்தளம் அமைத்தல், ரூ34.50 லட்சத்தில் குன்னங்காடு ஸ்ரீகிருஷ்ணன்கோவில் சாலை முதல் வடக்கன்பாகம் பாறவிளை வரை மற்றும் சின்னவிளை குருசுபாறை முதல் பாபுஜி மேல்நிலைப்பள்ளி மீனவர் ஓய்வு அறை வரை தெருவில் காங்கிரீட் தளம் அமைப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மாநகராட்சி சிறப்புச் சாலைகள் திட்ட ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமணி                         25.11.2010

மாநகராட்சி சிறப்புச் சாலைகள் திட்ட ஆலோசனைக் கூட்டம்

திருச்சி, நவ. 24: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் "சிறப்புச் சாலைகள் திட்டம் 2010-11'-ன் கீழ் சாலைகளை மேம்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி தலைமை வகித்தார். நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மழையால் பழுதடைந்த சாலைகள், புதை சாக்கடைப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள், 5 ஆண்டுகளுக்கு மேலாகப் புதுப்பிக்கப்படாத சாலைகள் உள்ளிட்டவற்றில் முன்னுரிமை அடிப்படையில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 41.059 கிமீ நீளத்துக்கு சிமென்ட் கான்கிரீட் தளம், 47.107 கிமீ நீளத்துக்கு தார்ச் சாலை அமைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்துக்காக அரசு மானியம் ரூ. 25 கோடி. மொத்த மதிப்பீடு ரூ. 25.19 கோடி. இப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டியது தொடர்பாக ஓப்பந்ததாரர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

 


Page 57 of 167