Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலைப் பணிகளுக்கு ரூ. 16 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி             25.11.2010

சாலைப் பணிகளுக்கு ரூ. 16 கோடி ஒதுக்கீடு

கடலூர், நவ. 24: கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு, தமிழக அரசு ரூ. 16.15 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு சாலைத் திட்டத்தில் ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

இதில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் சிமென்ட் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க ரூ. 16.15 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

கடலூரில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தி உள்ள பகுதிகளில், முதல் கட்டமாக 40 சாலைகள் அமைக்க ரூ. 10.18 கோடியும், 2-ம் கட்டமாக 75 சாலைகள் அமைக்க ரூ. 10.32 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணி ஆணைகளை நகராட்சித் தலைவர் து.தங்கராசு வழங்கினார். பணிகளை உடனே தொடங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மழை காலமாக இருப்பதால் தார்ச் சாலைப் பணிகள்

15-12-2010-க்கு பிறகு தொடங்க அறிவுறுத்தப்பட்டது. பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் ரூ. 1.33 கோடியில் தார்ச் சாலைகளும், ரூ. 1.39 கோடியில் சிமென்ட் சாலைகளும் அமைக்க பணி ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பணிகளை உடனே தொடங்க உத்தரவிடப்பட்டது தார்ச் சாலைப் பணிகள் டிசம்பர் 15-க்கு மேல் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.

விருத்தாசாலம் நகராட்சியில் சிமென்ட் சாலைகள் ரூ. 80.10 லட்சத்திலும், தார்ச் சாலைகள் ரூ. 150.23 லட்சத்திலும் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் ரூ. 1.02 கோடியில் தார்ச் சாலைகள் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது.

சிதம்பரம் நகாரட்சியில் சி.ஆர்..பி.சி. திட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 65 லட்சத்தில் மேலரத வீதி, சாலைப் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மேலும் இதே திட்டத்தில் சாலைப் பணி மற்றும் ரவுண்டானா மேம்பட்டுப் பணிகள் ரூ. 2.5 கோடியில் மேற்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் 31-3-2011-க்குள் நிறைவடையும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 

சிமெண்ட் சாலைப் பணி நகராட்சிகளின் மண்டல இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி         25.11.2010

சிமெண்ட் சாலைப் பணி நகராட்சிகளின் மண்டல இயக்குநர் ஆய்வு

விழுப்புரம், நவ. 24: விழுப்புரத்தில் போடப்பட்டு வரும் சிமெண்ட் சாலைப் பணியை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

நகரில் பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளை சிமெண்ட் சாலைகளாக அமைக்க ரூ.7.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பூந்தோட்ட சாலையில் இப்பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனை மண்டல இயக்குநர் ஆய்வு செய்தார். உடன் நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ், ஆணையர் அ..சிவக்குமார், பொறியாளர் கு.பார்த்தீபன், பணி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ரூ. 65 லட்சத்தில் மேலரதவீதி சாலை அகலப்படுத்தும் பணி

Print PDF

தினமணி              25.11.2010

ரூ. 65 லட்சத்தில் மேலரதவீதி சாலை அகலப்படுத்தும் பணி

சிதம்பரம், நவ. 24: சிதம்பரம் நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ. 65 லட்சம் செலவில் மேலரதவீதி சாலையை 633 மீட்டர் தூரத்துக்கு அகலப்படுத்தி பலவழித்தடச் சாலையாக மாற்றும் பணி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மேலரதவீதி பஸ்நிறுத்தம் எதிரே திட்டப் பணிக்கான பெயர்ப் பலகையை கோட்டாட்சியர் அ.ராமராஜு, திறந்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் எம்.காமராஜ், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் சீனுவாசன், உதவிப் பொறியாளர் தனராஜன், போக்குவரத்துப் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிதம்பரம் நகரை அழகுப்படுத்த ரூ. 3 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக மேலரவீதி சாலையை அகலப்படுத்தி அழகுப்படுத்தப்படும். இந்த பணி 3 மாதத்துக்குள் முடிக்கப்படும் என கோட்டாட்சியர் அ.ராமராஜு தெரிவித்தார்.

 


Page 58 of 167