Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கடலூரில் பொதுநல அமைப்புகளின் "பந்த்' எதிரொலி ரூ.16.15 கோடியில் சாலை போட நகராட்சி உத்தரவு

Print PDF

தினமலர்                 25.11.2010

கடலூரில் பொதுநல அமைப்புகளின் "பந்த்' எதிரொலி ரூ.16.15 கோடியில் சாலை போட நகராட்சி உத்தரவு

கடலூர் : கடலூர் நகரில் பொது நல அமைப்புகள் நடத்திய "பந்த்' தின் எதிரொலியாக 16.15 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் மற்றும் தார் சாலைபோட நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது. கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சின்ன பின்னமானது. பணி முடிந்த தெருக்களில் புதிய சாலைகள் போடாமல் நகராட்சி காலம் கடத்தி வந்தது. இதனால் பொது மக்கள் நகராட்சி மீது வெறுப்படைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பொது நல அமைப்புகள் சார்பில் ஒரு நாள் "பந்த்' நடத்தப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு செய்தனர். தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சாலைப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் முதல்வர் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளில் சிமென்ட், மற்றும் தார் சாலை அமைக்க 16.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் முதல் கட்டமாக 32 சாலைகள் அமைப்பதற்கும், இதர 8 சாலைகளும் ஆக மொத்தம் 40 சாலைகளுக்கு 10.18 கோடியும், இரண்டாம் கட்டமாக 75 சாலைகளுக்கு 10.32 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. 17.65 கி.மீ., தூரத்திற்கு 8 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலைகள் அமைக்கவும், 2.11 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கவும் நேற்று சேர்மன் தங்கராசு பணி ஆணையை வழங்கினார். இதில் சிமென்ட் சாலை பணியை உடனே துவக்கிடவும், தார் சாலை பணிகளை மழைக் காலம் முடிந்தவுடன் துவக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

அதேப்போன்று பண்ருட்டி நகராட்சியில் 1.33 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலையும், 1.39 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கவும், விருத்தாசலம் நகராட்சியில் 80.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலைகளும், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலைகளும், நெல்லிக்குப்பம் நகராட்சியில் 1.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 தார் சாலைகளும், சிதம்பரம் நகராட்சியில் 65 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை பணியும், 2.50 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலை பணிக்கும் நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் 16.15 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் மற்றும் தார் சலைகள் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு 31.3.2011க்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

 

ஊத்துக்கோட்டையில் ரூ77 லட்சத்தில் சிமென்ட் சாலை பேரூராட்சி முடிவு

Print PDF

தினகரன்             25.11.2010

ஊத்துக்கோட்டையில் ரூ77 லட்சத்தில் சிமென்ட் சாலை பேரூராட்சி முடிவு

ஊத்துக்கோட்டை, நவ.25: ஊத்துக்கோட்டை பேரூராட்சி கூட்டம் நடந்தது. தலைவர் அபிராமி குமரவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ், ஊத்துக்கோட்டை அய்யனார் நகர், இசிஐ சர்ச் ரோடு, ரோஜா தெரு, பேரூராட்சி பின்புறம் ஆகிய பகுதிகளில் ரூ77 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கவும், நகர்ப்புற வீடுகள் கட்டும் திட்டத்தில் வங்கி மூலம் கடன் வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதிமுக கவுன்சிலர் ராஜமாணிக்கம் பேசுகையில், ‘ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கேயுள்ள தரைப்பாலத்தில் மழைக் காலங்களில் வெள்ள நீர் செல்கிறது. எனவே, மேம்பாலம் அமைக்க வேண்டும்என்றார். மேம்பாலம் கட்ட பொதுப் பணித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. திமுக கவுன்சிலர்கள் எல்லப்பன், சம்சுதீன், பாலசுந்தரம், அப்துல் ரஷீத், லட்சுமி, அதிமுக கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம், ஷேக் தாவூத், ரவிச்சந்திரன், அண்ணாதுரை, பத்மாவதி, ஷர்மிளா, வள்ளி கலந்து கொண்டனர்.

 

சேலத்தில் ரூ 1.69 கோடியில் புதிய தார்ச் சாலைகள்

Print PDF

தினமணி              24.11.2010

சேலத்தில் ரூ 1.69 கோடியில் புதிய தார்ச் சாலைகள்

சேலம், நவ. 23: சேலத்தில் பாதாளச் சாக்கடைக்காக குழாய் பதித்த பகுதிகளில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 1.69 கோடியில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியது:

தமிழக அரசின் சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 5 கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டப் பணிக்கு ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. 2, 3-வது கட்டப் பணிகளுக்கு நடைபெற்ற டெண்டரில் ஒப்பந்ததாரர்கள் போதுமான அளவு கலந்து கொள்ளாததால் மறு டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர்கள் அசோகன், ரவி மற்றும் உதவி ஆணையர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இல் 1.69 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு வரும் 29-ம் தேதி மீண்டும் டெண்டர் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி மண்டல பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.

சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்த இடங்களில் புதிய தார் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

 


Page 59 of 167