Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சிவகாசியில் 5 கோடியில் சாலைகளை சீரமைக்க முடிவு

Print PDF

தினமணி            24.11.2010

சிவகாசியில் 5 கோடியில் சாலைகளை சீரமைக்க முடிவு

சிவகாசி, நவ. 23: சிவகாசி நகராட்சிப் பகுதியில் ரூ 5 கோடியில் சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி நகர்மன்ற அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்றத் தலைவர் ராதிகாதேவி தலைமை வகித்தார்.

சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011-ன் கீழ் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட சி.என்.அண்ணாத்துரை சாலை, சிவன் சந்நதி தெரு, நாவெட்டி தெரு, பி.கே.எஸ். தெரு, காமராஜ் சாலை ஆகியவற்றில் தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்க ரூ 1.19 கோடி, ஞானகிரி சாலை, பி.கே.என். சாலை ஆகியவற்றில் தார் சாலை அமைக்கும் பணிக்கு ரூ 1.34 கோடி, நான்கு ரதி வீதி, விஸ்வநத்தம் சாலை, முண்டகன் தெரு, .எஸ்.கே. தங்கையா சாலை, சோலை காலனி, காத்தான் தெரு, முஸ்லிம் வடக்குத் தெரு, பி.கே.எஸ். ஆறுமுகம் சாலை ஆகியவற்றில் தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்க ரூ 1.30 கோடி, காமாக் சாலை, ஆறுமுகம் சாலை, புஷ்பா காலனி, பசும்பொன் சாலை, நேசனல் காலனி, அம்மன்கோவில்பட்டி நடுத்தெரு ஆகியவற்றில் தார் சாலை மற்றும் சிமென்ட் சாலை அமைக்க ரூ 1.16 கோடி ஒதுக்கவும் மன்றக் கூட்டம் ஒப்புதல் அளித்தது. கூட்டத்தில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.அசோகன், பொறியாளர் முருகன், சுதாகார அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

வந்தவாசியில் சாலை&சிறுபாலம் அமைக்க ரூ2.39 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்           24.11.2010

வந்தவாசியில் சாலை&சிறுபாலம் அமைக்க ரூ2.39 கோடி ஒதுக்கீடு

வந்தவாசி, நவ.24: வந்தவாசி நகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் மாலை தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் உசேன் பாரூக் மன்னர், துணைத்தலைவர் வாசுகி உட்பட கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

வந்தவாசி நகராட்சியில் தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ2 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, சிறுபாலங்கள், தார்சாலை அமைக்கும் பணிக்கு டெண்டர் கோரப்பட்டு நகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

காயிதே மில்லத் நகர் பிரதான சாலையில் மழைநீர் கால்வாய், சிறுபாலங்கள் மற்றும் தார் சாலை அமைக்க ரூ49லட்சமும், பஜனை கோயில் தெரு மழைநீர் கால்வாய், தார் சாலை அமைக்க ரூ2.60 லட்சமும், சன்னதி தெரு மழைநீர் கால்வாயுடன் சிறுபாலங்கள், தார்சாலை அமைக்க ரூ41 லட்சமும், கம்மாள தெருவில் தார் சாலை அமைக்க ரூ4 லட்சமும், வாணியர் தெருவில் மழைநீர் கால்வாயுடன் தார் சாலை அமைக்க ரூ7.30 லட்சமும். யாதவர்&பிராமணர் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க ரூ12 லட்சமும், கோட்டை தெருவுக்கு தொகுப்பு வீடு பகுதிகளுக்கு மழைநீர் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்க ரூ12லட்சமும், காதர்மீரா தெருவில் மழைநீர் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்க ரூ11 லட்சமும், அகத்தியர், கண்ணியப்பன், பாரதி தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க ரூ6.5 லட்சமும், கோட்டையில் உள்ள பகுதிகளில் மழைநீர்கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்க ரூ11 லட்சமும் உள்ளிட்ட நகர் முழுவதும் உள்ள வார்டுகளில் ரூ2 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் சாலை, கழிவுநீர்கால்வாய், சிமென்ட் சாலைகள், மழைநீர் கால்வாய், சிறுபாலங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

மானாமதுரையில் ரூ. 50 லட்சத்தில் சாலைகள்: பேரூராட்சி அனுமதி

Print PDF

தினமணி          23.11.2010

மானாமதுரையில் ரூ. 50 லட்சத்தில் சாலைகள்: பேரூராட்சி அனுமதி

மானாமதுரை, நவ. 22: மானாமதுரையில் சிறப்புச் சாலைகள் திட்டத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிக்கு பேரூராட்சிக் கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மானாமதுரை பேரூராட்சிக் கூட்டம் இதன் தலைவர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் மருது மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர், துணைத் தலைவர், செயல் அலுவலர் ஆகியோர் பதிலளித்தனர்.

இதன்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மானாமதுரையில் 2010-2011-ம் ஆண்டு சிறப்புச் சாலைகள் திட்ட நிதி ஒதுக்கீட்டில் வார்டு எண்கள் 9, 17, 13 ஆகியவற்றில் ரூ. 22.40 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்கள் 6, 8, 4 ஆகியவற்றில் ரூ. 22.55 லட்சம் மதிப்பீட்டிலும், சிமெண்ட் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க குறைந்த தொகைக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை மேற்கொள்ள மன்றக் கூட்டம் அனுமதி வழங்குகிறது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 60 of 167