Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திருப்புவனம் பேரூராட்சியில் சிமென்ட் சாலை பணிகளுக்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினகரன்           22.11.2010

திருப்புவனம் பேரூராட்சியில் சிமென்ட் சாலை பணிகளுக்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு

திருப்புவனம், நவ. 22: திருப்புவனம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பிச்சைமுத்து வைரவன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கனகு முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி சஞ்சீவி மற்றும் 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைவர் பேசுகையில், ``சிறப்பு சாலை திட்டத்தில் 1, 2, 6, 7, 12, 17 ஆகிய வார்டுகளில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.54 லட்சத்து 80 ஆயிரமும், மானாமதுரை எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதியில் புதூரில் அங்கன்வாடி மையம் கட்ட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்புவனம் புதூர் மயானம் ரூ.5 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படும். பொது நிதி மூலம் தேரடியில் பொதுக்கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி, 2, 5, 6, 8, 11, 15 ஆகிய வார்டுகளில் வடிகால் சீரமைப்பு, பசும்பொன் நகரில் சிறிய பாலம், புதூரில் நீர்மாலை தொட்டி அமைத்தல் ஆகிய பணிகளை ரூ.6 லட்சம் மதிப்பில் செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.’’ என்று தெரிவித்தார். கூட்டத்தில் 16வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரன் தனது வார்டில் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி பணிகள் மறுக்கப்படுவதாக கூறி வெளிநடப்பு செய்தார்.

Last Updated on Monday, 22 November 2010 05:55
 

ரூ.3.95 கோடி​யில் சாலை​கள் மேம்​பாடு

Print PDF

தினமணி             20.11.2010

ரூ.3.95 கோடி​யில் சாலை​கள் மேம்​பாடு

கோவில்​பட்டி,​​ நவ.​ 19: ​ ​ சிறப்பு சாலை மேம்​பாட்​டுத் திட்​டம் 2010-11-ன் கீழ் கோவில்​பட்டி நக​ராட்சி பகு​தி​யில் ரூ.3 கோடியே 95 லட்​சம் மதிப்​பில் சாலை​கள் அமைக்​கும் பணிக்கு நகர்​மன்​றக் கூட்​டத்​தில் அனு​மதி அளிக்​கப்​பட்​டது.​

​ ​ கோவில்​பட்டி நகர்​மன்​றத்​தின் அவ​ச​ரக் கூட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ நகர்​மன்​றத் தலைவி மல்​லிகா தலைமை வகித்​தார்.​ நக​ராட்சி ஆணை​யர் விஜ​ய​ரா​க​வன்,​​ துணைத் தலை​வர் சந்​தி​ர​மெüலி முன்​னிலை வகித்​த​னர்.​ கூட்​டத்​தில் நடை​பெற்ற விவா​தங்​கள்:​ ​

​ ​ கவுன்​சி​லர் மதி ​(காங்.)​:​ வேலா​யு​த​பு​ரம் பஸ் நிறுத்த பணி​கள் நடை​பெ​றுமா?​

ஆணை​யர்:​ பணி தொடங்​கிய பின்பு நிறுத்​தப்​பட மாட்​டாது.​

​ ​ நாக​ரா​ஜன் ​(தி.மு..)​:​ துப்​பு​ரவு பணி​யா​ளர்​கள் போது​மான அளவு இல்லை.​ நக​ரி​லுள்ள சுமார் 12 பெரிய வாறு​கால்​களை சுத்​தப்​ப​டுத்த ஜே.சி.பி.​ இயந்​தி​ரம் வாங்க வேண்​டும்.​

​ ​ தவ​மணி ​(தி.மு..)​:​ கோவில்​பட்டி நக​ரில் இர​வில் சுற்​றித்​தி​ரி​யும் பன்​றி​க​ளைக் கட்​டுப்​ப​டுத்த வேண்​டும்.​ நக​ராட்​சிக்கு ஜென​ரேட்​டர் வாங்க பல​முறை முறை​யிட்​டும் பய​னில்லை.​

​ ​ ஆணை​யர்:​ நிதி கிடைத்​த​வு​டன் ஜென​ரேட்​டர் வாங்​கு​வோம்.​ பன்​றி​க​ளைக் கட்​டுப்​ப​டுத்த ஏற்​கெ​னவே நட​வ​டிக்கை எடுத்து வரு​கி​றோம்.​ மேலும் துரி​தப்​ப​டுத்​து​வோம்.​

​ ​ செல்​வ​மணி ​(காங்.)​:​ பங்​க​ளாத் தெரு​வில் குடி​நீர் சரி​யாக விநி​யோ​கம் செய்​யப்​ப​டு​வ​தில்லை.​ இது​கு​றித்து,​​ பல​முறை முறை​யிட்​டும் எந்​த​வித பல​னும் கிடைக்​க​வில்லை.​ ​ ​ பங்​க​ளாத் தெரு பகுதி குடி​நீர் விநி​யோ​கத்​துக்கு 6 இஞ்ச் பைப் அமைக்க வேண்​டும் என்று கூறி,​​ கூட்​டத்தி​லி​ருந்து வெளி​ந​டப்பு செய்த அவர்,​​ சிறிது நேரத்​துக்கு பின் மீண்​டும் கூட்​டத்​தில் பங்​கேற்​றார்.​

​ ​ கவுன்​சி​லர்​கள் செல்​வப்​பெ​ரு​மாள் ​(தி.மு..)​,​​ கரு​ணா​நிதி ​(தி.மு..)​,​​ தெய்​வேந்​தி​ரன் ​(.தி.மு..)​,​​ பவுன்​மா​ரி​யப்​பன் ​(.தி.மு..)​,​​ ராஜேந்​தி​ரன் ​(.தி.மு..)​:​ தின​சரி சந்​தை​யி​லுள்ள ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற வேண்​டும்.​ அது​போன்று நக​ரில் அனு​ம​தி​யின்றி கட்​ட​டங்​கள்,​​ சுவர்​கள் கட்​டு​வோர் மீதும்,​​ இடிப்​ப​வர்​கள் மீதும் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ எந்​த​வித பார​பட்​ச​மும் இன்றி ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற வேண்​டும்.​​ நகர்​மன்​றத் தலைவி மல்​லிகா:​ உறுப்​பி​னர்​கள் அனை​வ​ரும் ஒருங்​கி​ணைந்து செயல்​பட்​டால் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்​று​வ​தில் எந்​த​வித தயக்​க​மும் ஏற்​ப​டாது என்​றார்.​​ ​ இக்​கூட்​டத்​தில் 15 தீர்​மா​னங்​க​ளில் 12 தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

 

மாநகரில் 60 நாட்களில் புதிய சாலை மாநகராட்சி கூட்டத்தில் தகவல்

Print PDF

தினகரன்               20.11.2010

மாநகரில் 60 நாட்களில் புதிய சாலை மாநகராட்சி கூட்டத்தில் தகவல்

திருப்பூர், நவ.20: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி திருப்பூர் மாநகரில் ரூ.21.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 11ஆக பிரிக்கப்பட்டு பணிகள் டெண்டர் விடப்பட்டது. இதில் 4 பகுதிகளுக்கு பல்வேறு காரணங்களால் டெண்டர் கோரப்படவில்லை. மீதமுள்ள 7 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டது. அனைத்து பணிகளுக்கும் மதிப்பீட்டு தொகையை விட 6.62 சதவீதம் முதல் 11.20 சதவீதம் வரை அதிகமாக டெண்டர் கோரப்பட்டிருந்தது. டெண்டர் தொகையை குறைத்து கொடுக்க ஒப்பந்ததாரர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டதை, 2, 3 முறை விலை குறைப்பு செய்யப்பட்டது. அதிலும் மதிப்பீட்டு தொகையை விட 1.96 சதவீதம் முதல் 3.87 சதவீதம் வரை கூடுதல் தொகைக்கு டெண்டர் கோரப்பட்டிருந்தது.

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்கள் கூலி உள்ளிட்ட காரணங்களால் இந்த டெண்டர் தொகைக்கே பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்ற அவசர கூட்டத்தில் நேற்று முன்வைக்கப்பட்டது.

மாநகராட்சி மேயர் செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையாளர் ஜெயலட்சுமி, துணை மேயர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அ.தி.மு.. கவுன்சிலர் முருகசாமி, ‘’ரூ.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சாக்கடை பணிகளில் காலதாமதம், தரமின்மை என பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. அதேபோன்று, இதிலும் பிரச்னைகள் எழாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.அந்த திட்டத்தை விட இதில் மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் எப்போது முடிக்க வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்," என்றார்.

இதற்கு பதிலளித்த ஆணையாளர் ஜெயலட்சுமி, "மாநகரில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், பணி உத்தரவு வழங்கப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் தரத்துடன் நடக்கிறதா என்பது மிகவும் கவனத்துடன் கண்காணிக்கப்படும்," என்றார். இதையடுத்து தீர்மானங்கள் கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மதிப்பீட்டு தொகையை விட 1.96 சதவீதம் முதல் 3.87 சதவீதம் வரை கூடுதல் தொகைக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தொகையை மாநகராட்சி நிதியில் இருந்து செலவிடவும் மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

 


Page 62 of 167