Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலை பணிகள் பூமி பூஜை விழா

Print PDF

தினகரன்                  20.11.2010

சாலை பணிகள் பூமி பூஜை விழா

தங்கவயல், நவ. 20: தங்கவயல் உரிகம்பேட்டையில் நகரசபை சார்பில் சாலை அமைக்க பூமி பூஜை நடத்தப்பட்டது. கர்நாடக நகராட்சி மறுசீரமைப்பு ஆணையம் தங்கவயலில் உள்ள 35 வார்டுகளிலும் முன்னேற்றப்பணிகளுக்காக ரூ 22 கோடி ஒதுக்கி உள்ளது. அதில் முதல்கட்டமாக உரிகம் பேட்டையில் சாலை அமைக்க நேற்று பூமி பூஜை நடத்தப்பட்டது.

நகரசபை தலைவர் தயாளன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ மு.பக்தவச்சலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ஜி.குமார், குலசேகர், பிரேமகுமாரி சம்பத், ஜெயந்தி ஸ்ரீனிவாசன், மணிமேகலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகரசபை மேலாளர் ஸ்ரீகாந்த் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

 

மாநகராட்சியில் 20 இடங்களில் சிறப்பு சாலை திட்டம்

Print PDF

தினகரன்                19.11.2010

மாநகராட்சியில் 20 இடங்களில் சிறப்பு சாலை திட்டம்

கோவை, நவ.19: கோவை மாநகராட்சியில் 5.20 கோடி ரூபாய் செலவில் சிறப்பு சாலை திட்டம் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் கோவை நகரில் 27 இடங்களில் சிமெண்ட் ரோடு, தார் தளம், நடைபாதை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. 5 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் பணிகள் நடத்த அனுமதிக்கப்பட்டது. சாஸ்திரி ரோடு, காளிதாஸ் ரோடு, சத்தியமூர்த்தி ரோடு, செங்குப்தா ரோடு, திருச்சி ரோடு, உக்கடம் பைபாஸ் ரோடு இணைப்பு பகுதி ரோடு, சென்ட் முனுசாமி ரோடு, கிருஷ்ணன் வீதி, கருப்பண்ண ரோடு, கோத்தாரி நகர், மீனா எஸ்டேட், நேதாஜி ரோடு, சுசீலா நகர் பகுதியில் தார் தளம் அமைக்கப்படும்.

காளிங்கராயன் ரோடு, பிள்ளையார் கோயில் வீதியில் சிமெண்ட் ரோடு அமைக்கப்படும். தபேதார் வீதி, வெண்ணல் நாயுடு வீதி, எல்ஜி தோட்டம், திருவள்ளுவர் நகர், கிருஷ்ணப்பா வீதி, கங்குவார் வீதி, ராமர் கோயில் வீதி முதல் கனி ராவுத்தர் வீதி, சரோஜினி வீதி, ராமலிங்க ஜோதி நகர், சி.எம்.சி காலனி, கணேஷ் லே அவுட், லட்சுமி நகர் பகுதியில் சிமெண்ட் தளமும், ராமர் கோயில் வீதி, நாகப்ப செட்டி வீதியில் நடைபாதையும் அமைக்கப்படும்.

இது தொடர்பாக அ.தி.மு.க கவுன்சில் குழு தலைவர் ராஜ்குமார் பேசுகையில், " ரோடு பணியில் வேகம் இல்லை. இப்போது துவக்கவுள்ள பணிகள் எப்போது முடியும், " என்றார். கமிஷனர் அன்சுல் மிஸ்ரா பதிலளித்து பேசுகையில், " 1 மாதத்தில் பணி முடியும். மழை பெய்தால் பணி நடத்துவதில் சிரமம் ஏற்படும், " என்றார்.

 

போக்குவரத்து நெரிசலை குறைக்க பச்சையப்பன் சாலை சந்திப்பை அகலப்படுத்த மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன்                    19.11.2010

போக்குவரத்து நெரிசலை குறைக்க பச்சையப்பன் சாலை சந்திப்பை அகலப்படுத்த மாநகராட்சி முடிவு

சென்னை, நவ.19: கே.கே.நகர் மற்றும் பச்சையப்பன் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நிலம் கையகப்படுத்தி சாலை அகலப்படுத்தப்படும் என்று மேயர் தெரிவித்தார்.

கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகளுடன் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். கே.கே.நகர் பிரதான சாலை அகலமாக இருந்தாலும் பச்சையப்பன் சாலை சந்திப்பு குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் மேயரிடம் தெரிவித்தனர். இந்த சாலை சந்திப்பை அகலப்படுத்த தேவையான நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி மாநகராட்சி நிலம் மற்றும் உடமைத்துறை அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

எம்.ஜி.ஆர். நகரில் வி.எம்.பாலகிருஷ்ணன் தெரு, சத்தியமூர்த்தி பிளாக், அன்னை சத்தியா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெளி நிலத்தை ஆய்வு செய்து பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல் அமைக்கவும், மேலும் சத்தியா நகர் பகுதியில் அடையாறு ஆற்றின் குறுக்கே அப்பகுதி மக்களின் வசதிக்காக சிறிய பாலம் அமைக்க மதிப்பீடு தயார் செய்யும்படியும் அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சத்துணவு கூடங்கள், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் ஆகியவற்றையும் மேயர் ஆய்வு செய்தார்.

கோவிந்தன் தெருவிலுள்ள மீன் அங்காடி பகுதியில் மழைநீர் கால்வாயை தூர்வாருவதற்கு உத்தரவிட்டார். சென்னை மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை மேயர் வழங்கினார். மண்டலக்குழுத் தலைவர் க.தனசேகரன், கவுன்சிலர் வெங்கடேசன், மண்டல அதிகாரி சுப்பையா உடன் இருந்தனர்.

 


Page 63 of 167