Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலை சீரமைப்பு பணிக்காக ரூ82.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்              11.11.2010

சாலை சீரமைப்பு பணிக்காக ரூ82.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

மஞ்சூர், நவ.11: மஞ்சூர் பகுதியில் ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ82.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரி தெரிவித்தார்.

மஞ்சூர் பஜாரில் இட நெருக்கடி காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் நடுரோட்டிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.

பஜார் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பொது நல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர். நெடுஞ்சாலை துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன் மின் வாரிய மேல்முகாம் பகுதியில் இருந்து மஞ்சூர் பஜார், கரியமலை பிரிவு வரை சாலையின் இரு புறங்களிலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், வீடுகள் அகற்றப்பட் டன.

கடந்தாண்டு கீழ்குந்தா செல்லும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலை துறை நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் பல மாதங்கள் ஆகியும் தடுப்பு சுவர், கழிவு நீர் கால்வாய் அமைக்காமலும், சாலை விரிவுபடுத்திட நடவடிக்கை எடுக்காததால் அனைத்து தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

பஜார் பகுதியில் மேலும் புதிய ஆக்கிரமிப்பு தோன்றின. மஞ்சூர் பஜாரில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன் சாலையை சீரமைக்க வேண்டி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறும் போது, மஞ்சூர் பகுதியில் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.82.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குந்தா தொலை தொடர்பு அலுவலக பகுதியில் இருந்து மஞ்சூர் பஜார் வழியாக கரியமலை பிரிவு வரை சாலையின் தேவையான இடங்களில் தடுப்பு சுவர், கல்வெட்டுகள், கழிவு நீர் கால்வாய் அமைப்பதுடன் சாலை விரிவுபடுத்தி புதுப்பிக்கப்படும். இப்பணிகளை அடுத்த வாரம் துவக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 

தண்டையார் பேட்டையில் சாலைகள் குண்டு குழியானதை கண்டித்து பொதுமக்கள் மறியல் சீரமைக்க மேயர் உத்தரவு

Print PDF

மாலை மலர்            10.11.2010

தண்டையார் பேட்டையில் சாலைகள் குண்டு குழியானதை கண்டித்து பொதுமக்கள் மறியல் சீரமைக்க மேயர் உத்தரவு

தண்டையார் பேட்டையில்
 
 சாலைகள் குண்டு குழியானதை
 
 கண்டித்து பொதுமக்கள் மறியல்
 
 சீரமைக்க மேயர் உத்தரவு

ராயபுரம், நவ. 10- தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக மாறி விட்டது.

இந்த சாலையை சீரமைக்க கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை இளையமுதலி தெரு வைத்தியநாதன் மேம் பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே இளைய முதலி தெருவில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் பங்கேற்றனர்.

திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து உதவி கமிஷனர்கள் முருகேசன், காதர்மெய்தீன், இன்ஸ் பெக்டர்கள் பாஸ்கர், ராஜேந்திரன், சேகர்பாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று விவசாயிகள் 300 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

 

சிமென்ட் சாலைகள் அமைக்க ரூ.57 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர்          10.11.2010

சிமென்ட் சாலைகள் அமைக்க ரூ.57 லட்சம் ஒதுக்கீடு

மதுராந்தகம் : அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், சிமென்ட் சாலைகள் அமைக்க, 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் நேரு நகர், தாமரை குளம், காந்தி நகர், பெரியர் நகர், ஓம்சக்தி நகர், எம்.கே.எம்., நகர் உட்பட நகரின் அனைத்து பகுதியிலும் சாலை மிகவும் மோசமாக இருந்தது. சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.அதன் பேரில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சாலைகளை சீரமைக்க, 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிதியில் காந்தி நகர், பெரியார் நகர், ஓம்சக்தி நகர், எம்.கே.எம்., நகர் பகுதிகளில், சிமென்ட் சாலை அமைக்க பேரூராட்சி முடிவு செய்துள்ளது.

 


Page 64 of 167