Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

44 டவுன் பஞ்.,களில் ரூ. 24 கோடியில் தார் ரோடு

Print PDF

தினமலர்                31.10.2010

44 டவுன் பஞ்.,களில் ரூ. 24 கோடியில் தார் ரோடு

கொடுமுடி: ஈரோடு மாவட்டத்தில் புதிய தார் ரோடு அமைப்பதற்காக, தமிழக அரசு 24 கோடியே 22 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 44 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் புதிய தார் சாலை மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைக்கொண்டு அடுத்த நான்கு மாதத்துக்குள் பணிகளை பூர்த்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. "சிறப்பு சாலைத்திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் அமலாகும் பஞ்சாயத்துகள் மற்றும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம்: அந்தியூர் 72.82 லட்சம் ரூபாய், ஆப்பக்கூடல் 73.78 லட்சம், அரியப்பம்பாளையம் 56.74 லட்சம், அத்தாணி 48.58 லட்சம், அவல்பூந்துறை 49.19 லட்சம், பவானிசாகர் 75 லட்சம், பி.பி.அக்ரஹாரம் 31 லட்சம் சென்னிமலை 30.32 லட்சம், சென்னசமுத்திரம் 45.6 5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சித்தோடு 72.20 லட்சம், ஜம்பை 54.319 லட்சம், காஞ்சிக்கோயில் 51.79 லட்சம், கொடுமுடி 60.94 லட்சம், கருமாண்டிசெல்லிபாளையம் 30.22 லட்சம், கூகலூர் 83.99 லட்சம், லக்கம்பட்டி 78.90 லட்சம், நம்பியூர் 72.95 லட்சம், பெரியகொடிவேரி 50.54 லட்சம், பெருந்துறை 76.53 லட்சம், சிவகிரி 75.53 லட்சம், சூரியம்பாளையம் 76.24 லட்சம், வாணிப்புத்தூர் 36.67 லட்சம், வெங்கம்பூர் 74.77 லட்சம், அம்மாபேட்டை 48.76 லட்சம், அறச்சலூர் 57.70 லட்சம், எலத்தூர் 49.33 லட்சம், காசிபாளையம் 52.72 லட்சம், கிளாம்பாடி 46.79 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கெம்பநாயக்கன்பாளையம் 58.01 லட்சம், கொளப்பலூர் 49.48 லட்சம், கொல்லன்கோயில் 58.05 லட்சம், பி.மேட்டுப்பாளையம் 48.75 லட்சம், மொடக்குறிச்சி 49.89 லட்சம், நல்லாம்பட்டி 57.07 லட்சம், நசியனூர் 49.68 லட்சம், நெரிஞ்சிப்பாடி 43.95 லட்சம், ஒலகடம் 55.24 லட்சம், பள்ளபாளையம் 52.94 லட்சம், பாசூர் 30.72லட்சம், பெத்தாம்பாளையம் 51.57 லட்சம், சலங்கபாளையம் 52.49 லட்சம், ஊஞ்சலூர் 13.16 லட்சம், வடுகபட்டி 59.77 லட்சம், வெள்ளோட்டாம்பரப்பு 55.66 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சாலைத்திட்ட நிதியில் நடக்கும் பணிகள் தேர்தல் வருவதற்குள் முடிக்கப்படும். இந்நிதியில் செய்யப்படும் பணிகள் பெரும்பாலும் அ.தி.மு.., கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளிலேயே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தஞ்சை நகராட்சியில் ரூ.22.96 கோடி பணிகள் டிசம்பர் இறுதியில் நிறைவு: மண்டல இயக்குனர் தகவல்

Print PDF

தினமலர்               31.10.2010

தஞ்சை நகராட்சியில் ரூ.22.96 கோடி பணிகள் டிசம்பர் இறுதியில் நிறைவு: மண்டல இயக்குனர் தகவல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழக அரசால் தஞ்சை நகர மேம்பாட்டு பணிகளுக்கு ரூபாய் 25 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், தஞ்சை நகராட்சி மூலம் சாலை மற்றும் சுகாதார வளாகம் அமைக்க ரூபாய் 22 கோடியே 96 லட்சம் மதிப்பில் 123 பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் சாந்தி கூறியதாவது: தஞ்சை நகராட்சி பகுதியில் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு நகரின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து உலகத்தரத்தில் சாலைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தஞ்சை நகராட்சியில் ரூபாய் 22 கோடியே 96 லட்சம் மதிப்பில் 123 பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டபோது பழுதடைந்த 97 சாலை மேம்பாட்டுக்காக ரூபாய் 16 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுவரை 21 சாலை பணிகள் மிகவும் தரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதேபோல், நகரின் ஐந்து முக்கிய சாலைகள் ரூபாய் இரண்டு கோடியே 61 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மருத்துவக்கல்லூரி சாலையில் ரூபாய் 70 லட்சம் மதிப்பில் புதிய மின்விளக்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை நகரின் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூபாய் இரண்டு கோடியே 20 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நகரின் மூன்று முக்கிய இடங்களில் ரூபாய் 44லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பெரியகோவில் அருகாமையில் உள்ள ராஜராஜசோழன் சிலை பூங்கா வளாகம் ரூபாய் 25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் மதிப்பில் வழிகாட்டு பலகை அமைக்கப்பட்டுள்ளன.

இப்பணிகள் அனைத்தும் மிகவும் தரமாகவும், 20 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ள அளவுகளின்படி அமைக்கப்பட்டு வருகின்றன. அனுமதிக்கப்பட்டுள்ள 123 பணிகளில் 44 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தமிழக அரசு அறிவித்துள்ள நகராட்சிகளுக்கான ரூபாய் 1,000 கோடி கான்கிரீட் சாலைப்பணிகளில் தஞ்சை நகராட்சிக்கு 17 சாலை மேம்பாட்டுக்காக ரூபாய் மூன்று கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நகராட்சி வளர்ச்சி பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதியில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. இவ்வாறு நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சாந்தி தெரிவித்தார்.

தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி செல்லும் சாலை தார்சாலையாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளதையும், அருளானந்த நகர் ஐந்தாவது குறுக்குத்தெரு சாலை சிமெண்ட் சாலையாக மேம்பாடு செய்யப்பட்டு வருவதையும் நகராட்சிகள் மண்டல நிர்வாக இயக்குனர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மண்டல நிர்வாக பொறியாளர் ராஜசேகரன், நகராட்சி கமிஷனர் நடராஜன், பொறியாளர் காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

 

தார் சாலை கோரிக்கை பேரூராட்சி விளக்கம்

Print PDF

தினமலர்               29.10.2010

தார் சாலை கோரிக்கை பேரூராட்சி விளக்கம்

ஊத்துக்கோட்டை : தார்ச்சாலை அமைக்க வேண்டுமென, "தினமலர்' நாளிதழில் வெளியான செய்திக்கு, பேரூராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அறிக்கையின் விவரம்:ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் பின்புறம், தார்ச்சாலை அமைக்க வேண்டுமென,"தினமலர்' செய்தி வெளியிட்டுள்ளது. கற்கள் பெயர்ந்து காணப்படும் நிலையில் இருக்கும் இச்சாலையை, 10.75 லட்ச ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்க பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.விரைவில் டெண்டர் விடப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


Page 66 of 167