Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி சாலைகளை மேம்படுத்த ரூ. 82 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி               26.10.2010

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி சாலைகளை மேம்படுத்த ரூ. 82 லட்சம் ஒதுக்கீடு

திருக்காட்டுப்பள்ளி, அக். 25: திருக்காட்டுப்பள்ளி தேர்வு நிலைப் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளின் சாலை மேம்பாட்டுக்கு தமிழக அரசு ரூ. 82 லட்சத்தை வழங்கியுள்ளது என்றார் பேரூராட்சிக்குழுத் தலைவர் கோகிலா சிங்காரவேலு.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சிக்குழுக் கூட்டம் அதன் தலைவர் கோகிலா சிங்காரவேலு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சியின் அலுவலர்கள் த. குணசேகரன், நா. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

கோகிலா சிங்காரவேலு (காங்கிரஸ்): திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்குழு பொறுப்பேற்று 5-வது ஆண்டு தொடக்கவிழாவில் உள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் சிறந்த முறையில் ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்களுக்கு நன்றி.

மேலும், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில தெற்கு வாடித்தெரு, வடக்கு வாடித்தெரு, ராயர் அக்ரஹாரம், சேதுரார் மண்டபம், பாலுண்டார் தெரு, தைக்கால்தெரு, கட்ட வெட்டியார் தெரு, அரிஜனத்தெரு, ஒன்பத்துவேலி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்க, தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2010-11 நிதியாண்டுக்கு ரூ. 82 லட்சம் நிதி வரப்பெற்றுள்ளது.

ஜான்சன் தன்ராஜ் (அதிமுக): கடந்த 4 ஆண்டுகளில் எனது வார்டு பகுதியில் எந்தவித அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை.

. குணசேகரன் (தலைமை எழுத்தர்): பேரூராட்சி சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு அனைத்து வார்டுகளிலும் உள்ள பழுதான சாலைகளை படம் பிடித்து, அதற்கான உத்தேச தொகையும் கணக்கிட்டு ரூ. 1.29 கோடிக்கான பணிகளை வரைவு செய்து சென்னையில் உள்ள இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தோம். தொடர்ந்து, உயர் அலுவலர்கள் இங்கு வந்து ஆய்வு செய்ததில் சில சாலைகளில் மட்டும் பணிகளை மேற்கொள்ள ரூ. 82 லட்சம் நிதி ஒதுக்கினர். பின்வரும் காலங்கில் நிதி வந்தால் உங்கள் பகுதியிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆர். ராகவன் (திமுக): திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் உள்ள வார்டுகளிலேயே அதிக அளவில் வரிவசூல் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும் பகுதி எனது பகுதிதான். என்னுடைய பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்வதில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

. ரகமத்துல்லா (அதிமுக): எனது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் பேரூராட்சி நிர்வாகம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றாவிட்டால் நவ. 10 ஆம் தேதி வார்டு மக்களை அழைத்து வந்து பேரூராட்சி நிர்வாகம் முன்பாக உண்ணாவிரதம் இருப்போம்.

. குணசேகரன் (தலைமை எழுத்தர்): உங்கள் பகுதிகளின் அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த வாரத்துக்குள் செய்துதரப்படும்.

பேரூராட்சிக்குழு உறுப்பினர்கள் நா. குணசேகரன், . வளர்மதி, . மணிமேகலை, . இளங்கோவன், மா. கண்ணகி, எஸ். ரதி, மங்கையர்கரசி, மெய்யழகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

திருக்காட்டுப்பள்ளியில் ரூ82 லட்சத்தில் சாலைப்பணி பேரூராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                    26.10.2010

திருக்காட்டுப்பள்ளியில் ரூ82 லட்சத்தில் சாலைப்பணி பேரூராட்சி தலைவர் தகவல்

திருக்காட்டுப்பள்ளி, அக்.26: திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் நடப்பு ஆண்டில் ரூ81.90 லட்த்திற்கான சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பேரூராட்சி தலைவர் கோகிலா சிங்காரவேலு கூறினார்.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம் தலைவர் கோகிலா சிங்காரவேலு தலைமையில் நேற்று நடந்தது. தலைமை எழுத்தர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் குணசேகரன், வளர்மதி, ராகவன், மணி மேகலை, மங்கையர்கரசி, இளங்கோவன், கண்ணகி, ரகமத்துல்லா, கதிரேசன், ரதி, தன்ராஜ், மெய்யழகன் கலந்து கொண்டனர்.

கவுன்சிலர் மெய்யழகன் பேசுகையில், சாலைப்பணிக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார். கவுன்சிலர் ரகமத்துல்லா, எனது வார்டில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. வரும் 10ம்தேதி அலுவலகம் முன் உண்ணவிரதம் இருப்பேன் என்றார். கவுன்சிலர் ராகவன், நான் 2 சாலைப்பணிகள் கேட்டிருந்தேன். செய்து தரப்படவில்லை. எனது வார்டு புறக்கணிக்கப்படுகிறது என்றார். கவுன்சிலர் தன்ராஜ், எனது வார்டுக்கு கடந்த 4 ஆண்டுகளாக எந்த வேலையும் செய்த தரவில்லை என்றார்.

பேரூராட்சி தலைவர் கோகிலா சிங்காரவேலு பேசுகையில், பேரூராட்சி அலுவலகத்திலிருந்து ரூ1.29 கோடிக்கு சாலைப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னை பேரூராட்சிகள் இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில் சிறப்பு சாலைகள் திட்டம் 2010&11ன் கீழ் ரூ81.90 லட்சத்திற்கான பணிகளை செய்ய அனுமதி அளித்துள்ளனர். இதில் நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை.

தன்ராஜ் வார்டுக்கு ரூ5 லட்சத்தில் குளம்தூர் வாரும் பணி கொடுக்கப்பட்டதை அவர் தான் புறக்கணித்தார். அடிப்படை வசதிகள் செய்து தர எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார். கவுன்சிலர் குணசேகரன், தலைவர் கூறியது சரி என் றார். பின்னர் 4 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Last Updated on Tuesday, 26 October 2010 09:41
 

விழுப்புரம் மேலவீதியில் தார்சாலைஅமைக்கும்பணி சேர்மன் ஜனகராஜ் பார்வையிட்டார்

Print PDF

தினகரன்                26.10.2010

விழுப்புரம் மேலவீதியில் தார்சாலைஅமைக்கும்பணி சேர்மன் ஜனகராஜ் பார்வையிட்டார்

விழுப்புரம், அக். 26: விழுப்புரம் மேலவீதியில் (சென்னை நெடுஞ்சாலை) பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதாள சாக்கடைத் திட்ட பணிகளால் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் அவசர அவசரமாக போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட்டது. சாலை சீரமைக்கப்படாததால் மண் புழுதி பறந்து வாகன ஓட்டிகளை மிரட்டியது. சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேலவீதியின் சாலையை சீரமைக்க போர்க்கால அப்படிடையில் அமைச்சர் பொன்முடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி சென்னை நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.1 கோடி தமிழக அரசிடம் நிதி பெறப்பட்டு நகராட்சி மூலம் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலை அமைக்க பாதாள சாக்கடை திட்ட பணிகளை முன்னின்று நடத்தி வரும் குடிநீர் வடிகால் வாரியம் அனுமதித்தது. அதன்படி மேலவீதியில் கடந்த 2 நாட்களாக தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணியை பார்வையிட்ட நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் கூறுகையில், சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். விரைவில் சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தோம். அதன்படி அமைச்சர் பொன்முடியின் நடவடிக்கை காரணமாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நகரம் முழுவதும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுமையாக முடிந்த இடங்களில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும், என்றார். ஸ்டாலின் நற்பணி மன்ற செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் திருப்பதிபாலாஜி, கவுன்சிலர் ஸ்ரீவினோத் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 26 October 2010 09:41
 


Page 67 of 167