Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாயல்குடியில் ரூ.52 லட்சம் செலவில் புதிய சாலை பணி

Print PDF

தினகரன்                26.10.2010

சாயல்குடியில் ரூ.52 லட்சம் செலவில் புதிய சாலை பணி

சாயல்குடி, அக்.26: சாயல்குடி பேரூராட்சியில் புதிய சிமென்ட் சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் லிங்கம்மாள் பால்காளை தலைமை வகித்தார். துணை தலைவர் ரத்தினம், செயல் அலுவலர் செந்திலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் சோலை, செந்தூர், வன்னியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயல் அலுவலர் செந்திலன் கூறுகையில், '2010&11 சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் செலவில் அரசு மானியத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. கான்ட்ராக்டர்கள் முன்னிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி இப்பணிக்கான டெண்டர் விடப்படுகிறதுஎன்றார்.

Last Updated on Tuesday, 26 October 2010 09:41
 

மத்திய இணையமைச்சர் தகவல் : சாலை புதுப்பிக்க 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Print PDF

தினமலர்                   26.10.2010

மத்திய இணையமைச்சர் தகவல் : சாலை புதுப்பிக்க 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நாமக்கல்: ""தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து சாலைகளை புதுப்பிக்க, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, காஸ் அடுப்பு வழங்கும் விழாவில் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் பேசினார்.

ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து சின்னாக்கவுண்டம்பாளையத்தில் இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் விழா நடந்தது. தேர்வு செய்யப்பட்ட 496 பயனாளிகளுக்கு இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கி மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து சாலைகள் புதுப்பிக்க, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் மட்டும் 6 சாலைப்பணிகள் மேற்கொள்ள 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னாக்கவுண்டம்பாளையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பகுதியில் கழிப்பிட வசதி விரைந்து நிறைவேற்றப்படும். இதுவரை 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பில் 64 ஆயிரத்து 820 இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காஸ் இணைப்பு வழங்கப்படாத பகுதிக்கு விரைந்து காஸ் அடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், மாவட்ட வழங்கல் அலுவலர் பெருமாள், டவுன் பஞ்சாயத்து தலைவர் யுவராஜ், நகராட்சி சேர்மன் குமார், தாசில்தார் சேகர், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம், நடனசபாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 26 October 2010 09:41
 

எட்டயபுரத்தில் ரோடு போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்

Print PDF

தினமலர் 25.10.2010

எட்டயபுரத்தில் ரோடு போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்

எட்டயபுரம் : எட்டயபுரம் டவுன் பஞ்.,பகுதியில் ரோடு போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எட்டயபுரம் டவுன் பஞ்.,ஆபிசில் பஞ்.,தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 2010-2011 ம் ஆண்டு சிறப்பு சாலைதிட்டம் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருநெல்வேலி டவுன் பஞ்.,உதவி இன்ஜி.,சத்தியமூர்த்தி கலந்து கொண்டார். எட்டயபுரம் வர்த்தகர் சங்கத் தலைவர் ராஜா, பொருளாளர் பரமசிவம், துணை தலைவர் வெங்கடேஷ்ராஜா, கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ், நிர்வாக குழு குணசேகரன் மற்றும் தூது குழுவினர் டவுன் பஞ்.,துறை உதவி இன்ஜி.,சத்தியமூர்த்தியை சந்தித்து கோரிக்கை மகஜர் கொடுத்தனர்.

மகஜரில் குறிப்பிட்டுள்ளதாவது, எட்டயபுரம் மேலரதவீதியிலிருந்து சந்திரன் கல்யாண மண்டபம் வரை ஊருக்கு நடுவில் கடை பஜார் பகுதியில் பணிதுவங்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஜல்லிகள் குவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த பணியை தீபாவளிக்குள் முடித்து போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். மேலும் நடுரோடு பட்டத்து விநாயகர் கோயில் அருகிலிருந்து சந்திரன் கல்யாண மண்டபம் வரை ரோடு போடும் போது உயரம் அதிகரிக்காமல் பழைய ரோட் டை கொத்தி அதே இப்போ து உள்ள உயரத்தில் ரோடு போட வேண்டும்.

இதற்கு மேல் உயரம் கூட்டினால் வீடுகள் பள்ளத்திற்குள் அமைந்தது போல் ஆகிவிடும். மழைகாலங்களில் ரோட்டில் பெய்யும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடும். ஆகவே பழைய உயரத்திலேயே ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வடக்குரதவீதியிலிருந்து நாவிலக்கன்பட்டி செல்லும் ரோடு (டவுன் பஞ்., எல்கை வரை) செப்பனிட வேண்டும். எட்டயபுரம் கோவில்பட்டி மெயின் ரோ ட்டிலிருந்து நடுவிற்பட்டி கடை பஜாருக்கு வரும் சந் தை பேட்டை ரோடு குண்டும் குழியுமாக மழை கா லங்களில் சகதிக்காடாக கா ட்சியளிக்கிறது. போக்குவரத்து நலன்கருதி சந்தை பேட்டை ரோட்டை செ ப்பனிட வேண்டும். மேலரதவீ தி ரோடும், கடை பஜார் செ ல்லும் நடுரோடும் சந்திக்கும் இடத்தில் மழைநீர் தே ங்காமல் இருக்கும்படி ரோ டு செப்பனிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 


Page 68 of 167