Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சுவாமிமலை, சோழபுரம் டவுன் பஞ்.,களில் தார் சாலை அமைக்க ரூ.58 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 20.10.2010

சுவாமிமலை, சோழபுரம் டவுன் பஞ்.,களில் தார் சாலை அமைக்க ரூ.58 லட்சம் ஒதுக்கீடு

கும்பகோணம்: ""முதல்வர் கருணாநிதி சாலை மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கியுள்ள 1,000 கோடி ரூபாயில் சுவாமிமலை, சோழபுரம் டவுன் பஞ்சாயத்துக்களுக்கு தலா 58 லட்சம் ரூபாயில் சாலை வசதிகள் செய்து கொள்ள அனுமதியளித்துள்ளார்,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி தெரிவித்தார்.கும்பகோணம் அருகே சுவாமிமலை டவுன் பஞ்சாயத்தில் இலவச "டிவி' வழங்கும் விழா நேற்று கும்பகோணம் ஆர்.டி.., அசோக்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். சுவாமிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் கேசவராஜன் வரவேற்றார். துணைத்தலைவர் முகமதுபாரூக், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பேசினர்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி 1,905 பயனாளிகளுக்கு இலவச "டிவி'க்களை வழங்கி பேசியதாவது: தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துக்கள் போன்ற பகுதிகளில் சாலை என பல்வேறு திட்ட மேம்பாட்டுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய கையெழுத்திட்டு வந்துள்ளதாக அறிவித்தார். அதில், சுவாமிமலை, சோழபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் சாலை மேம்பாட்டுக்கு தலா 58 லட்சம் ரூபாயை அனுமதியளித்துள்ளார்.அவர் முதல்வராக இருக்கும் நேரத்தில்தான் மக்களுக்கு பல திட்டங்கள் கிடைக்கிறது. எனவே, அவர் வாழ்ந்தால் மக்களாகிய நாம் வாழலாம்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.உள்ளூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கணேசன், சுவாமிமலை டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஸ்தபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

* சோழபுரம் டவுன் பஞ்சாயத்தில் தமிழக அரசின் இலவச "டிவி' வழங்கும் விழா நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். சோழபுரம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 2,852 பேருக்கு ஐந்து லட்சத்து 87 ஆயிரத்து 972 ரூபாய் மதிப்புள்ள "டிவி' பெட்டிகளை அமைச்சர் கோ.சி.மணி வழங்கினார்.ஆர்.டி.ஓ., அசோக்குமார், தாசில்தார் போஸ், ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், யூனியன் கவுன்சிலர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

ரூ55 லட்சத்தில் சாலை பணிகள்

Print PDF

தினகரன் 19.10.2010

ரூ55 லட்சத்தில் சாலை பணிகள்

கடலாடி, அக்.19: முதுகுளத்தூர் பேரூராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தில் ரூ55 லட்சத்தில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

முதுகுளத்தூர் பேரூராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தில் காந்திநகர் தெரு, பொன்னடியார் கோயில் தெரு, கந்தசாமிபுரம் தெரு, தெய்வேந்திரநகர் தெரு, செல்வியம்மன் கோயில் குறுக்கு தெரு, பெரிய பள்ளிவாசல் தெரு, சுந்தரபாண்டியன் ஊருணி தெரு, திடல் தெரு, அம்பேத்கர் நகர் தெரு, கடலாடி ரோடு தெரு, முகமதியார் தெரு ஆகிய தெருக்களில் ரூ55 லட்சத்தில் சிமென்ட், தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

 

வி.கே.புரத்தில் சாலைமேம்படுத்தும் பணி துவக்க விழா

Print PDF

தினமலர்             19.10.2010

வி.கே.புரத்தில் சாலைமேம்படுத்தும் பணி துவக்க விழா

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரத்தில் நேற்று அம்பை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்படுத்தும் பணி துவக்க விழா நடந்தது.விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். அம்பை ஒன்றியக்குழு துணைத் தலைவர் சிவகுருநாதன் முன்னிலை வகித்தார். அம்பை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார் வரவேற்றார். நெல்லை கோட்ட பொறியாளர் சவுந்திரராஜ் திட்ட விளக்கவுரையாற்றினார்.

அம்பை நெடுஞ்சாலைத்துறை சார்பில் கரந்தை முதல் அம்பை ராணி பள்ளி வரை ரூ.95.30 லட்சம், வாகைகுளம் விலக்கு முதல் மன்னார்கோவில் விலக்கு வரை மற்றும் மேலமாதாபுரம் - கடையம் பெரும்பத்து வரை ரூ.91.60 லட்சம், அம்பை ராணி பள்ளி முதல் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளி வரை மற்றும் பாபநாசம் தாமிரபரணி லாட்ஜ் முதல் டெப்போ வரை ரூ.96.40 லட்சம், பாபநாசம் டெப்போ முதல் லோயர் டேம் வரை மற்றும் 2வது செக்போஸ்ட் முண்டந்துறை வரை ரூ.54.70 லட்சம்.நெல்லை - பொட்டல்புதூர் சாலையில் வடக்கு பாப்பான்குளம் முதல் காவூர் விலக்கு வரை ரூ.94.20 லட்சம், கல்லிடை முதல் சிங்கம்பட்டி வரை ரூ.50.60 லட்சம், கடையம் தோரணமலை சாலை ரூ.38.50 லட்சம், கல்லிடை முதல் மணிமுத்தாறு வரை ரூ.44 லட்சம், ஆழ்வார்குறிச்சி சிவசைலம் சாலையிலிருந்து பறம்பு வரை ரூ.19.80 லட்சம், கோவில்குளம் - சாட்டுபத்து சாலை ரூ.13.20 லட்சம், கடையம் கட்டேரிபட்டி சாலை ரூ.19.80 லட்சம், டாணாவில் சேதமடைந்த பாலம் ரூ.41.80 லட்சம், ஒமேகா சிப்ஸ் எதிரேயுள்ள பாலம் ரூ.5 லட்சத்திலும் மொத்தம் ரூ.6 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் துவக்கப்பட்டன.இப்பணியை தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் துவக்கி வைத்து பேசியதாவது:-அம்பை சட்டசபை தொகுதியில் 2006-07ம் ஆண்டு சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக 5 கோடியே 13 லட்ச ரூபாயும், 2007-08ம் ஆண்டில் 2 கோடியே 70 லட்சமும், 2008-09ம் ஆண்டில் 8 கோடியே 31 லட்சத்து 75 ஆயிரமும், 2009-10ம் ஆண்டு 6 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், 2010-11ம் ஆண்டு 6 கோடியே 65 லட்ச ரூபாயும் ஆக மொத்தம் அம்பை தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை மேம்பாட்டிற்கு மட்டும் சுமார் 5 ஆண்டு காலத்தில் 30 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.

சாலை மேம்பாட்டு பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு இவ்வளவு தொகையை செலவு செய்து கொண்டிருக்கும்போது மற்ற துறைகளுக்கும் முதல்வர் அதிகமாக நிதியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது சாலை விரிவாக்க பணிக்காக விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு 2 கோடி ரூபாயும், அம்பை நகராட்சிக்கு 2 கோடி ரூபாயும், மணிமுத்தாறு நகராட்சிக்கு ஒன்றரை கோடி ரூபாயும், ஆழ்வார்குறிச்சிபஞ்.,சிற்கு 60 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுதவிர தமிழ்நாடு அரசு சார்பாக அம்பை தொகுதியில் மட்டும் சாலை மேம்பாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முண்டந்துறை பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு வேலை நடைபெறாமல் இருந்து வருகிறது. அந்த பாலத்தை கட்டுவதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு சபாநாயகர் ஆவுடையப்பன் பேசினார்.விழாவில் கடையம் பஞ்., யூனியன் சேர்மன் செல்வி சங்குகிருஷ்ணன், அம்பை நகராட்சி தலைவர் பிரபாகரபாண்டியன், கடையம் தமிழ்நாடு அரசு மாநில நீர்வள ஆதார அமைப்புக்குழு உறுப்பினர் குமார், மணிமுத்தாறு டவுன் பஞ்., தலைவர்கள் முருகன் சுப்பிரமணியன், பொன்ஸ், வி.கே.புரம் நகராட்சி நிர்வாக அதிகாரி முருகன் உட்பட அரசுத்துறை அதிகாரிகள், அம்பை உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் தனசேகர், உட்பட நெடுஞ்சாலைத்துறையினர், திமுகவினர் கலந்து கொண்டனர்.அம்பை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சின்னச்சாமி நன்றி கூறினார்.

 


Page 70 of 167