Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

" ரூ. 17 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் துவக்கம்'

Print PDF

தினமணி 18.10.2010

" ரூ. 17 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் துவக்கம்'

திண்டுக்கல், அக். 17: திண்டுக்கல் நகரில் ரூ. 17 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இப்பணிகள் முடிவடைந்த பின்னர்தான் சாலைகள் அமைக்க அரசு நிதி ஒதுக்கும். ஆனால், இப்பணிகள் முடிவடைவதற்கு முன்னரே, சாலை அமைப்பதற்காக ரூ. 10 கோடியை சிறப்பு சலுகையாக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

மேலும், மிகவும மோசமாக உள்ள அரண்மனைக்குளம் சாலையை நெடுஞ்சாலைத் துறையின் மூலம் புதுப்பிப்பதற்காக தனியாக ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

சுரண்டை பேரூராட்சியில் ரூ.40 லட்சத்தில் சாலைபணி

Print PDF

தினகரன் 18.10.2010

சுரண்டை பேரூராட்சியில் ரூ.40 லட்சத்தில் சாலைபணி

சுரண்டை, அக்.18: சுரண்டை பேரூராட்சிக்குட்பட்ட அழகுபார்வதியம்மன் கோயில் ரத வீதி, காந்தி பஜார் மற்றும் 16, 17, 18 வார்டுக்குபட்ட இடங்களில் ரூ.40 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலைப்பணி நடந்து வருகிறது. இப்பணிகளை பேரூராட்சி தலைவர் கோமதிபழனிநாடார், செயல்அலுவலர் சாமுவேல்துரைராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பழனிநாடார், பொறியாளர் ஹரிகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயபால், சீனிவாசன், நகர காங். துணைத்தலைவர் பால்சண்முகவேல், பொருளாளர் ராஜேந்திரன், தொண்டரணி முனியாண்டி, தெய்வேந்திரன், நல்லாசிரியர் செல்லத்துரைபாண்டியன் ஆகியோர் உடன் சென்றனர்.

 

நகராட்சி கூட்டத்தில் முடிவு ரூ3.5 கோடியில் சிமென்ட் சாலை

Print PDF

தினகரன் 18.10.2010

நகராட்சி கூட்டத்தில் முடிவு ரூ3.5 கோடியில் சிமென்ட் சாலை

காஞ்சிபுரம், அக்.18: காஞ்சிபுரம் நகராட்சி கூட்டம், அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ஆணையர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் நடத்திய விவாதம்:

சந்துரு (திமுக):

சிறப்பு சாலை திட்டத்தின் கீழ், 41வது வார்டு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்.

சுரேஷ் (திமுக):

நகராட்சி மூலம் ஏற்படுத்தப்பட்ட வரி வசூல் மையங்கள் சரியாக இயங்குவதில்லை. இதனால் வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது.

உமாபதி (பாமக):

பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுமா?

அரங்நாதன்(காங்.):

கொசு மருந்து சரியில்லாததால் கொசுக்கள் குறையவில்லை.

கண்ணன்(அதிமுக):

எனது வார்டில் உள்ள சரவணன் நகர், காமாட்சி நகரில் தெரு விளக்கு எரியவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில், சிறப்பு சாலைகள் திட்டத்தில், காஞ்சிபுரம் தாமல்வார் தெரு, ராயக்குட்டை பள்ளத் தெரு, ரங்கசாமி குளம் மேற்கு, பல்லவன் நகர் மேற்கு உள்ளிட்ட 29 இடங்களில், ரூ3.5 கோடியில் சிமென்ட் சாலை அமைப்பது, ரூ9.5 லட்சத்தில் பாதாள சாக்கடை குழாய் அடைப்பை சரி செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 71 of 167