Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ16 கோடியில் சாலை பணி தங்கவயல் நகராட்சி தீர்மானம்

Print PDF

தினகரன் 15.10.2010

ரூ16 கோடியில் சாலை பணி தங்கவயல் நகராட்சி தீர்மானம்

தங்கவயல்,அக்.15: தங்கவயல் நகரசபை கவுன்சில் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. அதில் நகரசபை தலைவர் தயாளன், துணை தலைவர் மு.பக்தவச்சலம், கமிஷனர் (பொறு ப்பு) தாசில்தார் தாட்ச்சாயிணி ஆகியோர் கலந்து கொண்டனர். க்ஷஇதில் கர்நாடக நகரசபை சீரமைப்பு ஆணைய நிதி ரூ15 கோடியே 92 லட்சம் செலவில் சாலைகள், கால்வாய் அமைத்தல் மற்றும் ஸ்லம் பகுதிகளில் சிமிண்டு சாலைகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 ராபர்ட்சன் பேட்டை சுவர்ண குப்பம் விவேக் நகர், நாச்சி பள்ளி, உரிகம் பேட்டை ஆண்டரசன் பேட்டை, சாம்பியன், எஸ்.டி.பிளாக், பேண்டு லைன், ராஜர்ஸ் கேம்ப், அசோகா நகர், பைப் லைன் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப்படுகிறது. ஸ்லம் பகுதிகளான காந்தி நகர் உரிகம் பேட்டை 2 வது பிளாக், சாம்ராஜ் பேட்டை அரிசந்திரா கோவிலில் இருந்து சூசைப்பாளையம் வரையிலும் சிமிண்டு சாலைகள் அமைக்கப்படுகிறது.

மேலும் இந்த திட்டத்தில் அசோக் நகர், பவுரிலால் பேட்டை, கவுதம் நகர் பின்புரம் ஆகிய இடங்களில் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றது. மேற்கண்ட தீர்மாணம் நிறைவேறிய பின்னர் கவுன்சிலர்கள் ஜி.குமார், சாம்ராஜ் முத்துகுமார், விஜயகுமார் ஆகியோர் தங்கள் வார்டுகளிலும் முன்னேற்றப் பணிகளை செயல்படுத்த கோரினர். தங்கவயல் நகரசபையின் கவுன்சில் கூட்டத்தில் தலைவர் தயாளன், துணைத்தலைவர் மு.பக்தவச்சலம், கமிஷனர் தாட்சாயிணி கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 15 October 2010 06:09
 

29 சாலை அமைக்க ரூ5 கோடி மன்னார்குடி நகர பகுதியில் நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

தினகரன் 15.10.2010

29 சாலை அமைக்க ரூ5 கோடி மன்னார்குடி நகர பகுதியில் நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

மன்னார்குடி, அக். 15: மன்னார்குடி நகர பகுதியில் ரூ.5 கோடியில் 29 சாலைகள் அமைக்க நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மன்னார்குடி நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் கார்த்திகா உத்தமன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தமிழரசி, நகராட்சி ஆணையர் மதிவா ணன், பொறியாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

திமுக கவுன்சிலர் மதியரசன் பேசுகையில், பஸ் நிலைய பகுதியில் கழிவறை சரியாக பராமரிக்கப்படவில்லை. கொசு மருந்து சரி வர அடிப்பதில்லை என்றார். அதிமுக கவுன்சிலர் சுதா பேசுகையில், மேலராஜவீதியில் குப்பை அள்ளப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் நோய்கள் பரவும் நிலை உள்ளது என்றார். திமுக கவுன்சிலர் வீரக்கு மார் பேசுகையில், மீன் மார் க்கெட் கட்டுமான பணியை விரைவில் துவக்கவேண்டும். எரிவாயு தகன மேடை அமைக்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் பணியை குறித்த காலத்தில் துவக்காவிட்டால் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதே கருத்தை வலியுறுத்தி கவுன்சிலர்கள் ஹஜ்மைதீன், மதியரசன், சுதா உள்ளிட்டோர் பேசி னர். திமுக கவுன்சிலர் கலைவாணன் பேசுகையில், நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

ஆணையர் மதிவாணன் பேசுகையில், புதுக்கோட்டை, தஞ்சை, பட்டுக்கோட்டை மற்றும் மன்னார் குடி நகரங்களில் எரிவாயு தகன மேடை அமைக்க ஒரே நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பணியாக முடித்துக்கொண்டு வருகின்றனர். மன்னார்குடி பணியை அடு த்த நகர்மன்ற கூட்டத்திற் குள் துவக்கவில்லையெனில் மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி நடவடிக்கை எடுப் போம் என்றார். நகராட்சி தலைவர் கார்த்திகா உத்த மன் பேசுகையில், மன்னார் குடி நகரில் 29 சாலை பணி கள் மேற்கொள்ள ரூ4.93 கோடிக்கு முதல் கட்டமாக தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மன்னார்குடியில் ரயில் பாதை திட்டம் நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த 2 அம்சங்களும் கூட்ட நிலை தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது என்றார்.

கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை, அடிப்படை வசதி கட்டிடம், மாடல் நகராட்சிப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் சலீம், வடுகநாதன், கார்த்திகேயன், ராஜா, புனிதா, கோபி, கண்ணதாசன், கீதா உள்ளிட்டோர் பேசினர்.

 

தார்சாலை சீரமைப்பு துவக்கம்

Print PDF

தினமணி 14.10.2010

தார்சாலை சீரமைப்பு துவக்கம்

கோபி, அக். 13: கோபி லக்கம்பட்டி பேரூராட்சியில் தார்சாலை சீரமைக்கும் பணியை கோபி சட்டமன்ற உறுப்பினர் கே..செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சி 14-வது வார்டுப் பகுதியில் தார்சாலை பழுதடைந்து இருந்தது. இச் சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தார்ச்சாலை பராமரிப்புக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோபி எம்.எல்.. கே..செங்கோட்டையன்,ரூ 2.65 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

தார்சாலை சீரமைப்புப் பணிகள் தொடக்க விழா கோபி வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் தனசீலன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி முன்னாள் தலைவர் வேலுமணி முன்னிலை வகித்தார். எம்.எல்.. கே..செங்கோட்டையன் பணிகளைத் தொடங்கி வைத்தார். பொதுமக்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 


Page 72 of 167