Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ஆடுதுறை டவுன் பஞ்., சாலை பணிகளுக்கு ரூ.82 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 07.10.2010

ஆடுதுறை டவுன் பஞ்., சாலை பணிகளுக்கு ரூ.82 லட்சம் ஒதுக்கீடு

கும்பகோணம்: ஆடுதுறை டவுன் பஞ்சாயத்தில் 16 சாலைப்பணிகளுக்காக 82 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ள விபரம் டவுன் பஞ்சாயத்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை டவுன் பஞ்சாயத்து கூட்டம் தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஆண்டாள், நிர்வாக அதிகாரி மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனர். பின் நிர்வாக அதிகாரி மோகன்குமார், ""தமிழக அரசு 2010 - 11ம் ஆண்டுக்கு சிறப்பு சாலை திட்டத்தில் 16 சாலை பணிகளுக்கு சிமெண்ட் சாலை அமைக்க 82 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளது,'' என்றார். துணைத்தலைவர் ஆண்டாள் நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 07 October 2010 07:48
 

கடலூர் நகர சாலையை புதுப்பிக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 06.10.2010

கடலூர் நகர சாலையை புதுப்பிக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர்: கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடைத் திட் டத்திற்காக தோண்டப் பட்ட சாலைகளை புதுப் பிக்க தமிழக அரசு 11 கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்துள்ளது.கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடி ரூபாயில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங் கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை. நகரம் முழுவதும் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டி சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்து வரும் இப்பணிகள் முடிந்து ஒப்படைக்கப் பட்ட சாலைகளும் இன் னும் புதியதாக சார்சாலை போடாமல் இருந்து வருகிறது. நகராட்சியில் போதிய அளவு நிதி இல்லாததால் சாலை பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் பாதாள சாக் கடை பணிகள் நடக்கும் நகராட்சிகளில் சாலை சீரமைப்பிற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டார். இந்த நிதியைப்பெற கடந்த மாதம் கடலூர் நகராட்சியில் அவசர கூட்டம் நடத்தி புதிய பணிகள் நிறைவேற்றிட 15 கோடி ரூபாய் தேவை என தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன்பேரில் முதல்வர் கடலூர் நகரத்தில் சாலை பணிகள் மேற்கொள்ள 11 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான டெண்டர் விடும் பணி விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.

 

பம்மல் நகராட்சியில் ரூ1.5 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு

Print PDF

தினகரன் 06.10.2010

பம்மல் நகராட்சியில் ரூ1.5 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு

தாம்பரம், அக். 6: சாலைகளை புதுப்பிக்க மாநில அரசு ரூ1.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று பம்மல் நகராட்சித் தலைவர் வே.கருணாநிதி கூறினார்.

மாநிலத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள தரமற்ற சாலைகளைப் புதுப்பிக்க, ரூ1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

இதற்காக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிடம் திட்ட மதிப்பீடு கோரப்பட்டது. பம்மல் நகராட்சி சார்பில் 86 சாலைப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ8 கோடியே 79 லட்சத்து 21 ஆயிரம் அளவுக்கு திட்ட அறிக்கை வழங்கப்பட்டது. இதற்கு முதல்கட்டமாக ரூ1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் நிதியை மாநில அரசு நகராட்சிக்கு வழங்கியுள்ளது.

இந்த நிதியின் மூலம் அகத்தீஸ்வரர் கோயில் தெரு, தேவதாஸ் தெரு மழைநீர் வடிகால்வாய், அண்ணா சாலை சிமென்ட் சாலை, கம்பர் தெரு மற்றும் புகழேந்தி தெருவுக்கு மழைநீர் வடிகால்வாயுடன் சாலை, கண்ணதாசன் மற்றும் என்.எஸ்.கே. தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது என்று நகராட்சி தலைவர் வே.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 


Page 76 of 167