Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சிங்கம்புணரி பேரூராட்சியில் ரூ 76 லட்சத்தில் சாலைப் பணிகள்

Print PDF

தினமணி 05.10.2010

சிங்கம்புணரி பேரூராட்சியில் ரூ 76 லட்சத்தில் சாலைப் பணிகள்

சிங்கம்புணரி, அக். 4: சிங்கம்புணரி பேரூராட்சியில் ரூ 76 லட்சம் செலவில் சாலைப் பணிகள் நடைபெற உள்ளன.

இப் பேரூராட்சியில் சிறப்பு சாலைகள் திட்டம் 2010-11ன் கீழ் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதில் ஆர்.எம்.எஸ். மருத்துவமனை முதல் வடக்குவளவு வரை ரூ 11.52 லட்சத்தில் சிமெண்ட் சாலைகள், வார்டு 17 தேத்தாங்காட்டில் ரூ 10.15 லட்சத்தில் சிமெண்ட் சாலை, வடக்கு வளவு செட்டியார் தெருவில் ரூ 3.15 லட்சத்தில் சிமெண்ட் சாலை, ..சி. தெருவில் ரூ 5.6 லட்சத்தில் சிமெண்ட் சாலை, சந்திவீரன் கூடம் தெருவில் ரூ 3.65 லட்சத்தில் சிமெண்ட் சாலை, பண்டாரங்காலனி பிளாசம் மண்டபம் சாலையில் ரூ 4.2 லட்சத்தில் சிமெண்ட் சாலை, வார்டு 7 செட்டியார் தெருவில் ரூ 1.57 லட்சத்தில் சிமெண்ட் சாலை, வார்டு 2 உப்புச் செட்டியார் தெரு 3-ல் ரூ 1.45 லட்சத்தில் சிமெண்ட் சாலை, வார்டு 2 உப்புச் செட்டியார் தெரு 2-ல் ரூ 1.45 லட்சத்தில் சிமெண்ட் சாலையும், வார்டு 15 என்பீல்டு காலனியில் ரூ 13.25 லட்சத்தில் சிமெண்ட் சாலை, சேவுகப்பெருமாள் ஐயனார் கோவில் ரோட்டில் ரூ 20 லட்சத்தில் தார் சாலை ஆக மொத்தம் ரூ 76 லட்சத்தில் சாலைப் பணிகள் நடைபெற உள்ளதாக பேரூராட்சித் தலைவர் சுசீலா, செயல் அலுவலர் மங்களேஷ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

 

வந்தவாசியில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு விடுபட்ட பகுதியில் சாலைவசதி

Print PDF

தினகரன் 05.10.2010

வந்தவாசியில் பொதுமக்கள் எதிர்பார்ப்பு விடுபட்ட பகுதியில் சாலைவசதி

வந்தவாசி,அக்.5: வந்தவாசி ஒய்யாகண்ணு தெருவில் விடுபட்ட பகுதியில் சாலைவசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வந்தவாசி நகராட்சி 9வது வார்டில் உள்ளது ஒய்யாகண்ணு குறுக்கு தெரு. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை மீராகாதர்ஷா தெரு, குளத்துமேட்டு பகுதி, கண்ணாரதெரு, தர்மராஜ கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், காய்கனி வாங்க செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலரும் இத்தெருவை பயன்படுத்திவந்தனர்.

காலப்போக்கில் குறுக்கு தெருவில் ஒருசிலர் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதால் பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தாமல் நிறுத்தினர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங் களுக்கு முன்னர் நகராட்சி சார்பில் மீராகாதர்ஷா தெருவில் இருந்து அச்சரப்பாக்கம் சாலையுடன் இணைத்து சிமென்ட் சாலை போடப்பட்டது.

ஆனால் அச்சரப்பாக்கம் சாலையில் இருந்து மீராகாதர்ஷா தெருவிற்கு செல்லும் இவ்வழியின் மேற்கு பகுதியில் 200 மீட்டர் தூரம் சாலை அமைக்காமல் உள்ளது. எனவே அச்சாலையை பொதுமக்கள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் மேற்கு பகுதியில் முள்புதர்கள் மண்டிகிடக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாயுடன் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

சிறப்பு சாலை திட்டத்தில் தாராபடவேடு நகராட்சிக்கு ரூ3 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 05.10.2010

சிறப்பு சாலை திட்டத்தில் தாராபடவேடு நகராட்சிக்கு ரூ3 கோடி ஒதுக்கீடு

காட்பாடி, அக்.5: சிறப்பு சாலை திட்டத்தின்கீழ் சாலைகள் அமைக்க தாராபடவேடு நகராட்சிக்கு ரூ3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாராபடவேடு நகராட்சி கூட்டம் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா தலைமையில் நேற்று காலை நடந்தது. செயல் அலுவலர் சேகர், துணைத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:

ராஜா:

கடந்த கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் மினிட் புத்தகத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றியதாக உள்ளது.

தலைவர்:

மினிட் புக் திருத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது.

துணைத்தலைவர்:

இதற்கு முன்பு இருந்த செயல் அலுவலர் செய்த செலவினங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லோகநாதன்:

பன்றிக்காய்ச்சலை ஒழிக்க கொசு மருந்து அடிக்க வேண்டும். அதற்கான டீசல், பெட்ரோலை நானே வாங்கிக் கொடுக்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில், "சிறப்பு சாலை திட்டத்தில் தாராபடவேடு நகராட்சிக்கு ரூ3 கோடி ஒதுக்கீடு செய்த முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சிறப்பு சாலை திட்டத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் போக மீதமுள்ள சாலைப் பணிகளை பொது நிதியிலிருந்து மேற்கொள்வது,

நகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதி செய்து கொடுப்பது, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, மின் மோட்டார் இயக்குதல், பொது சுகாதார பணிகள் செய்துவரும் 15 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை அளிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 77 of 167