Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கணபதிபுரம் பேரூராட்சியில் ரூ62 லட்சத்தில் காங்கிரீட் சாலை

Print PDF

தினகரன் 05.10.2010

கணபதிபுரம் பேரூராட்சியில் ரூ62 லட்சத்தில் காங்கிரீட் சாலை

மணவாளக்குறிச்சி, அக். 5: கணபதிபுரத்தில் ரூ62 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு சாலைகள் திட்டம் மேற்கொள்வது என பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கணபதிபுரம் பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் தாணுலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் செல்வராஜ், செயல் அலு வலர் சேம் கிங்ஸ்டன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரவு& செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடும்ப அட்டை சம்பந்தமான பிரச்னைகளை துரித நடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்துவரும் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் அலுவலக பணியாளர்களை பாராட்டி நன்றி தெரிவிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சிறப்பு சாலை கள் திட்டம் ரூ62 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சிக்கு உட்பட்ட மூஞ்சிறவிளை& பரமன்விளை அம்மன்கோயில் செல்லும் சாலை மற்றும் வடக்கு கன்னக்குறிச்சி& தளவாய்புரம், வெள்ளிசந்தை இணைப்பு சாலை ஆகியவற்றுள் காங்கிரீட் தளம் அமைப்பது உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

குழித்துறை நகராட்சியில் ரூ1.80 கோடியில் சாலைகள் சீரமைப்பு

Print PDF

தினகரன் 05.10.2010

குழித்துறை நகராட்சியில் ரூ1.80 கோடியில் சாலைகள் சீரமைப்பு

மார்த்தாண்டம், அக்.5: தமிழக அரசின் கிராம, நகர சாலை மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் அனைத்து மாவட்ட சாலைகளையும் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழித்துறை நகராட்சிக்கு ரூ1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி தலைவர் பொன்.ஆசைதம்பி கூறியதாவது:

நகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க அரசு ரூ1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ25 லட்சத்தில் சப்பாத்துசாலை, ரூ12 லட்சத்தில் நரியன்விளை சாலை, ரூ20 லட்சத்தில் பழவார் சாலை, ரூ18.5லட்சத்தில் தேவிகுமாரி பெண்கள்கல்லூரிசாலை, ரூ12.5லட்சத்தில் விளவங்கோடு சாலை, ரூ22.75 லட்சத்தில் காட்டுவிளை சாலை, ரூ22.25 லட்சத்தில் கல்பாலத்தடிதேவர் குளம் சாலை, ரூ10 லட்சத்தில் காரவிளைசாலை, ரூ7லட்சத்தில் இடைதெருசாலை ஆகியவை 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு சிமென்ட் சாலையாக மாற்றப்படுகிறது.

கழிவுநீர் ஓடைகளும் சீரமைக்கப்படும். இது தவிர நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ30லட்சம் செலவில் கொடுங்குளம் உள்ளிட்ட பலசாலைகள் சீரமைக்க பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இம்மாத இறுதியில் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்றார். பொன் ஆசைத்தம்பி தகவல்

 

தென்கரை பேரூராட்சியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

தினகரன் 05.10.2010

தென்கரை பேரூராட்சியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

பெரியகுளம், அக். 5: தென்கரை பேரூராட்சி பகுதியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்க பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் முருகாயி காமராஜ் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் ராஜா, செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கருத்தபாண்டி, பாப்பு, முருகேஸ்வரி, முத்துசுப்பையன், ராஜாமணி, பாலமுருகன், முருகவேல், ஈஸ்வரி, ஜெயந்தி, முருகவேல், நாகராஜ், உஷாராணி, முருகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை பேரூராட்சிகள் இயக்குனரிடம் இருந்து வரப்பட்ட சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் தென்கரை பேரூராட்சி பகுதியில் பணிகள் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதன்படி இத்திட்டத்தின் கீழ் 5, 6, 10 ஆகிய வார்டுகளில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கவும், 2, 3, 7, 8, 9, 15 ஆகிய வார்டுகளில் ரூ.35 லட்சத்து 85 ஆயிரத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலைகள் அமைக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் பேரூராட்சி பகுதிகளில் உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

 


Page 78 of 167