Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

நிலக்கோட்டை பேரூராட்சியில் சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.81 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 30.09.2010

நிலக்கோட்டை பேரூராட்சியில் சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.81 லட்சம் ஒதுக்கீடு

நிலக்கோட்டை, செப். 30: நிலக்கோட்டை பேரூராட்சியில் சாலை சீரமைப்பு பணிக்கு தமிழக அரசு சிறப்பு திட்டத்தில் ரூ.81 லட்சம் நிதிஒதுக்கீடு செய்துள்ளதாக பேரூராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நிலக்கோட்டை பேரூ ராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் உதயகுமார் முன்னிலை வகித் தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்:

துணை தலைவர் உதயகுமார்:

12வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடத்தை தேர்வு செய்து ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும்.

தலைவர்:

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பால்ரத்தினராஜ்:

நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான அமரர் ஊர்தி பழுதடைந்துள்ளது. அத னை சீரமைக்க வேண்டும்.

விஜயகுமார்:

11வது வார்டு பகுதியில் உப்பு தண்ணீர் குழாய் அமைக்க பலமுறை கோரிக்கை விடுத் தும் நடவடிக்கை இல்லை.

தலைவர்:

இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தங்கராஜ்:

தெருக்களில் அனைத்து பகுதிகளுக்கு சென்று துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும்.

தலைவர்:

அனைத்து தெருக்களிலும் இப்பணி நடந்து வருகிறது. சில இடங்களில் வண்டி செல்ல முடியாததால் குப்பைகள் அள்ளப்படாமல் இருக்கலாம். இப்பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்.

பால்ரத்தினராஜ்:

நிலக்கோட்டையில் சாலை சீரமைக்க சிறப்பு திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?

தலைவர்:

தமிழக அரசு நிலக்கோட்டை பேரூராட்சியில் சாலை சீரமைப்பிற்கு சிறப்பு திட்டத்தில் ரூ.81 லட்சத்து 8 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

 

பாதாள சாக்கடை திட்டத்தால் சேதம் சாலை சீரமைப்புக்கு ரூ2 கோடி நிதி ஆவடி நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 30.09.2010

பாதாள சாக்கடை திட்டத்தால் சேதம் சாலை சீரமைப்புக்கு ரூ2 கோடி நிதி ஆவடி நகராட்சி தலைவர் தகவல்

ஆவடி, செப். 30: ஆவடியில் பாதாள சாக்கடை திட்டத்தால் பாழடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளுக்கு ரூ2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி தலைவர் விக்டரி மோகன் தெரிவித்தார்.

ஆவடி நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் விக்டரி மோகன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் எஸ்.அப்துல் ரகீம் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் நடத்திய விவாதம்:

சவுந்தரராஜன் (பகுஜன் சமாஜ்):

திருமுல்லைவாயல் தென்றல் நகர் பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். சரஸ்வதி நகர் முதல் திருமுல்லைவாயல் காலனி வரை சோடியம் விளக்குகள் அமைக்க வேண்டும்.

ராஜேந்திரன் (திமுக):

நகராட்சி பகுதிகளில் குப்பை அகற்றும் தனியார் நிறுவனம் குப்பை தொட்டிகளையும், ஊழியர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும்.

துரைராஜ் (திமுக):

நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொது கழிப்பிடம் கட்ட வேண்டும். சேக்காடு பகுதியில் சாலையோரம் இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி பஸ் வசதி செய்து தர வேண்டும்.

பழனி (பாமக):

மக்கள் பிரச்னைக்காக போராடிய கவுன்சிலர் பசுபதியை போலீசார் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் பசுபதி, வசந்தராஜ், தீனதயாளன், அமீத்பாபு, ரேவதி கலா, ஜான், சேகர், செல்வராஜ், முல்லைராமன், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி தலைவர் விக்டரி மோகன் பேசியதாவது:

நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ60 லட்சமும், சேக்காடு பகுதியில் தார்சாலையை சீரமைக்க ரூ25 லட்சமும், புதிய குப்பை தொட்டி வாங்க ரூ9.5 லட்சமும் ஒதுக்கப்படுகிறது.

அண்ணனூரில் நகராட்சி பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட ரூ25 லட்சமும், மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் கட்ட ரூ37 லட்சமும், ஆவடி பேருந்து நிலையத்தில் புதிய கழிவறை கட்ட ரூ5 லட்சமும், பருத்திப்பட்டு சுகாதார மையத்தை சீரமைக்க ரூ5 லட்சமும், திருமுல்லைவாயலில் புதிய சுய உதவிக்குழு கூடம் அமைக்க ரூ5 லட்சமும், 36வது வார்டில் உள்ள சமுதாய கூடத்தில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ13 லட்சமும் உட்பட ரூ2 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

கோபி ரோடு மேம்படுத்த ரூ.4.56 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 29.09.2010

கோபி ரோடு மேம்படுத்த ரூ.4.56 கோடி நிதி ஒதுக்கீடு

கோபிசெட்டிபாளையம்: கோபியில் ரோடுகளை மேம்படுத்த 4.56 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் ரோடு மேம்படுத்த ஊரக மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் சிறப்பு சாலைகள் திட்டம் 2010-11ல் 1,000 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் ரோடு சீரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கான உத்தரவை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் சென்ற வாரம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
கோபி நகராட்சியில் ரோடு மேம்படுத்த பல கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டது. இதையேற்று, நான்கு கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கோபி நகராட்சியை சேர்ந்த ஐந்து கவுன்சிலர்கள், தி.மு.., வுக்கு தாவியதால் கடந்த ஃபிப்ரவரி மாதம் முதல் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் தி.மு.., காங்., கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தற்போது, ஒதுக்கப்பட்ட நிதியை 18 வார்டுகளில் மட்டும் ரோடு பணி மேற்கொள்ள இன்று காலை நடக்கும் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் முன் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறாத தி.மு..,வை சேர்ந்த பெருமாள், செந்தில் வடிவு, ராக்கியண்ணன், சண்முகம், .தி.மு.., வை சேர்ந்த மாருச்சாமி, தேன்மொழி, மரகதம், காங்., கட்சியை சேர்ந்த கோபிநாத், மாரிமுத்து, கனகராஜ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த துரைசாமி, .தி.மு..,வை சேர்ந்த சாமிநாதன் ஆகியோர், இன்றைய நகராட்சி கூட்டத்தில் நிதி கேட்பர் அல்லது தீர்மானங்களை ஒத்திவைக்க கோருவர்.எட்டு மாதங்களாக தீர்மானங்களை நிறைவேற்றுவதில் பெரும் புயல் வீசி வரும் கோபி நகராட்சியில், இன்று நடக்கும் கூட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Page 82 of 167