Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

சாலை சீரமைப்புக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு உள்ளாட்சிகளில் சிறு கான்ட்ராக்டர்கள் விரக்தி

Print PDF

தினமலர் 29.09.2010

சாலை சீரமைப்புக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு உள்ளாட்சிகளில் சிறு கான்ட்ராக்டர்கள் விரக்தி

மேட்டூர்: உள்ளாட்சிகளில் சாலை சீரமைப்பிற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதியில் சாலை சீரமைப்புகளுக்கான ஒப்பந்தங்களை பெரிய ஒப்பந்தாரர்கள் மட்டுமே பெற முடியும் என்பதால், சிறு ஒப்பந்ததாரர்கள் விரக்தியடைந்துள்ளனர்.மாநகராட்சி, நகராட்சி, டவுன்பஞ்., உள்பட மாநிலம் முழுவதும் உள்ளாட்சிகளில் பயன்பாட்டில் உள்ள தார்சாலைகள், கான்கிரீட் சாலைகளை சீரமைப்பதற்காக அரசு, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், சீரமைப்பிற்காக தேர்வு செய்யும் சாலைகள் மக்கள் அதிகம் நடமாடும் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, வழிபாட்டு தளங்கள் உள்ள பகுதியாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கேற்ப மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகளை தேர்வு செய்து சீரமைக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களுக்கு ஒரு கோடி முதல் ஐந்து கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சீரமைப்பு பணிக்காக விரைவில் கான்ட்ராக்ட் விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்ட்ராக்டர்களை பொறுத்தவரை ஐந்து கிரேடுகளில் உள்ளனர். கிளாஸ்-1 கிரேடு கான்ட்ராக்டர்கள் 75 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளை செய்ய முடியும்.

கிளாஸ்-2 கிரேடு கான்ட்ராக்டர்கள் 75 லட்ச ரூபாய்க்கும், கிளாஸ்-3 கான்ட்ராக்டர்கள் 30 லட்ச ரூபாய்க்கும், கிளாஸ்-4 கான்ட்ராக்டர்கள் 15 லட்ச ரூபாய்க்கும், கிளாஸ்-5 கான்ராக்டர்கள் 6 லட்சம் ரூபாய்க்கும் கீழ் உள்ள பணிகளை மட்டுமே செய்ய முடியும். தற்போது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், சீரமைக்க வேண்டிய சாலைகள் அதிகமாக இருந்தாலும், 75 லட்சத்திற்கு கூடுதலாக பணிகளாக மாற்றி டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால், கிளாஸ்-1 கிரேடு கான்ட்ராக்டர்கள் மட்டுமே சாலை சீரமைப்புக்கான ஒப்பந்தத்தை பெற முடியும். சில இடங்களில் கிளாஸ்-2 கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தம் பெற வாய்ப்புள்ளது. நகராட்சி, டவுன்பஞ். பொறுத்தவரை கிளாஸ்-1 கான்ட்ராக்டர்கள் மிகவும் குறைவு.கிளாஸ்-4 மற்றும் 5 கான்ட்ராக்டர்களே அதிகம் இருப்பார்கள்.நெடுஞ்சாலைதுறை, ரெயில்வே, மின்வாரியம், பொதுப்பணித்துறை உள்பட குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே கிளாஸ்-1,2 கான்ட்ராக்டர்கள் அதிக ஒப்பந்த பணிகளை செய்கின்றனர். தற்போது உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணி ஒப்பந்தத்தை கிளாஸ்-1,2, கான்ட்ராக்டர்களே பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது சிறு கான்டாக்டர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

 

திண்டுக்கல் நகராட்சியில் புதிய சாலை அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 29.09.2010

திண்டுக்கல் நகராட்சியில் புதிய சாலை அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

திண்டுக்கல், செப். 29:திண்டுக்கல் நகராட்சி பகுதியில் புதிய சாலை அமைக்க ரூ,10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டபணிக்காக நகரின் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டது. குழிகள் தோண்டப்பட்ட இடங்களில் பெருமளவில் திட்டபணிகள் முடிவடைந்தது. இப்பணிகள் முடிந்த நகரின் முக்கிய பகுதிகளான ஸ்கீம்ரோடு, ரவுண்ரோடு, மெயின்ரோடு, பெல்பார்க்ரோடு உள்ளிட்ட 8 கி.மீ. து£ரத்திற்கான சாலைகள் சிமென்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது. மேலும் 10 கி.மீ. து£ரத்திற்கான சாலைகள் பேவர்ரோடுகளாக அமைக்கப்படுகிறது. ரூ.2.6 கோடி மதிப்பில் ராணி மங்கம்மாள் சாலை நடுவில் விளக்குகள் அமைத்து அவற்றை இரு வழிச்சாலைகளாக தனியாக பிரித்து தரம் உயர்த்தப்படுகிறது. இதேபோல் ரூ.1.8 கோடி மதிப்பில் ரவுண்ட்ரோடு சாலையும் அதில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவதற்காக தனிப்பாதைகள் மற்றும் ஓய்வு இருக்கைகளும் அமைக்கப் படுகிறது. இது தவிர முக்கிய சாலைகளை இணைக்கும் துணை சாலைகளும் புதியதாக அமைக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் நேற்று தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்த ரூ.10 கோடிக்கான நிர்வாக அனுமதி உத்தரவை வருவாய்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கமிஷனர் லெட்சுமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நடராஜன், தலைமை பொறியாளர் ராமசாமி, நகர்நல அலுவலர் வரதராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூ.59 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

Print PDF

தினகரன் 29.09.2010

தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூ.59 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

பெரியகுளம், செப்.29: தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்க பேரூராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தாமரைக்குளம் பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் அன்பழகன் தலைமையில் நடந் தது.துணைத்தலைவர் தவமணி ஆறுமுகம், செயல் அலுவலர் காமாட்சி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் சிங்கன், துரைராஜ், பழனியம்மாள், முருகேசன், வனிதா, அக்கிம்ராஜா, மைதிலி அன்பழகன், முருகன், பாலையா, முத்து, ராமதண்டபாணி, முருகேசன், டெய்சி ஆகியோர் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் 1, 2, 3, 4, 5, 7 ஆகிய வார்டு பகுதிகளில் ரூ.19 லட்சத்து 70 ஆயிரமும், வார்டு 8, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் ரூ.19 லட்சத்து 30 ஆயிரமும், வார்டு 7, 8 ஆகிய பகுதிகளில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் அமைக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

பேரூராட்சி பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வது சம்பந்தமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இருந்து பெறப்பட்ட கடிதத்திற்கும் ஒப்புதல் அளிப்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 


Page 83 of 167