Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

15 வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகளில் ரூ7.08 கோடியில் சாலைகள் அரசு நிதி ஒதுக்கியது

Print PDF

தினகரன் 29.09.2010

15 வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகளில் ரூ7.08 கோடியில் சாலைகள் அரசு நிதி ஒதுக்கியது

திருப்பூர், செப்.29: 15 வேலம்பாளையம் மற்றும் நல்லூர் நகராட்சிகளில் ரூ.7.08 கோடி யில் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகரா ட்சி, பேரூராட்சிகளில் சாலை களை மேம்படுத்தும் வகை யில் ரூ.1000 கோடியில் தமிழக அரசு சிறப்பு சாலைகள் திட்டத்தை செயல்படுத்தி வரு கிறது.

இதற்காக ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எந்தெந்த சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்ற விவரங்களை அரசு கேட்டிருந்தது.

இதையடுத்து ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிதி ஒதுக்கி சாலை பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவினை தமிழக அரசு வழங் கியுள்ளது. அதன்படி, திருப்பூரையடுத்து அமைந்துள்ள 15 வேலம்பாளையம் மற்றும் நல்லூர் நகராட்சிகளுக்கு ரூ.7.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்லூருக்கு ரூ.4.05 கோடி :

15 வார்டுகளை உள்ளடக்கிய நல்லூர் நகராட்சியில், சாலை வசதிகளை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி கோரியிருந்தது நகராட்சி நிர்வாகம். இதனை பரிசீலித்த அரசு, ரூ.4.05 கோடியில் சாலைகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆணை மற்றும் பணி துவக்குவதற்கான ஆணை ஆகியவற்றை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதேபோன்று 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதி யில் சாலைகளை மேம்படுத்த ரூ.3.03 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான பணி நியமன ஆணை மற்றும் நிதி ஒதுக்கீடு ஆணையை அரசு வழங்கியுள்ளது. இவ்விரு நகராட்சிகளிலும் விரைவில் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

திண்டுக்கல் நகராட்சியில் சாலை மேம்பாட்டுக்கு ரூ 10 கோடி

Print PDF

தினமணி 28.09.2010

திண்டுக்கல் நகராட்சியில் சாலை மேம்பாட்டுக்கு ரூ 10 கோடி

திண்டுக்கல், செப். 27: திண்டுக்கல் நகராட்சியில் சாலைகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ 10 கோடி நிதி வழங்கி உள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி ஆணையை வருவாய் துறை அமைச்சர் இ. பெரியசாமி திங்கள்கிழமை நகராட்சி ஆணையர் அர. லட்சுமியிடம் வழங்கினார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையை வழங்கிய அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த அரசு நிதி வழங்கி வருகிறது. திண்டுக்கல் நகரில் நடைபெற்றுவரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் காரணமாக நகரில் சில சாலைகள் தோண்டப்பட்டன.

தற்போது இத் திட்டம் பெருமளவு முடிவுற்று வருகிறது. நகரில் சாலைகளை மேம்படுத்த வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு ரவுண்டு ரோடு சாலை, மெயின் ரோடு, பெல்பர்க் சாலை, ஸ்கீம் ரோடு உள்ளிட்ட 8 கி.மீ. தூரத்துக்கான சாலைகள் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்படும். மேலும் 10 கி.மீ. தூரத்துக்கான சாலைகள் பேவர் ரோடுகளாக அமைக்கப்படும்.

ரூ 1.8 கோடி மதிப்பில் ரவுண்டு ரோடு சாலையும், அதில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக தனிப் பாதைகள், ஓய்வு இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும். ரூ. 2.6 கோடியில் ராணி மங்கம்மாள் சாலையின் நடுவே விளக்குகள் அமைத்து, அவற்றை இருவழிச் சாலைகளாகத் தனியாகப் பிரித்து தரம் உயர்த்தப்படும். இதைத் தவிர, முக்கியச் சாலைகளை இணைக்கும் துணை சாலைகளும் புதிதாக அமைக்கப்படும் என்றார் அமைச்சர்.

நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் ஆர்.நடராஜன், நகராட்சி ஆணையர் அர. லட்சுமி, பொறியாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

காரைக்குடியில் முக்கியச் சாலைகளை மேம்படுத்த ரூ.4 கோடி நிதி: நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி 24.09.2010

காரைக்குடியில் முக்கியச் சாலைகளை மேம்படுத்த ரூ.4 கோடி நிதி: நகர்மன்றத் தலைவர்

காரைக்குடி, செப். 23: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாலைகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.4 கோடி நிதி வழங்கியுள்ளது என்று நகர்மன்றத் தலைவர் எஸ்.முத்துத்துரை வியாழக்கிழமை தெரிவித்தார்.

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:

காரைக்குடி நகரில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.5.53 கோடி நிதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் உள்ளாட்சிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதில் காரைக்குடி நகராட்சிக்கு ரூ.4 கோடி நிதி கிடைத்துள்ளது. செக்காலை அண்ணாமலை செட்டியார் முதல் வீதி மற்றும் 2-வது வீதி, தமிழ்த்தாய் கோயில் சாலை, சுப்பிரமணியபுரம் முதல் வீதி, தாலுகாஅலுவலகச் சாலைகள் உள்பட பல்வேறு சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் முக்கிய பகுதிகளில் சிமிண்ட் சாலைகளும் அமைக்கப்படும்.

காரைக்குடியில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகளிடம் நிதி கோரப்பட்டது. இதில் நகராட்சியின் சார்பில் 10 சதவீத நிதியும் சேர்த்து முன்வைக்கப்பட்ட திட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் ரூ.10.5 கோடி நிதி காரைக்குடி நகராட்சிக்கு கிடைக்கும். இதில் குடிநீர் விநியோகத்துக்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

காரைக்குடியில் நகராட்சி புதிய பஸ் நிலையம் அருகில் நவீன பூங்கா ரூ.1.25 கோடி யில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவுக்கு காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றிய கொடைவள்ளல் டாக்டர் ஆர்எம். அழகப்பச் செட்டியார் நினைவாக அவரது பெயர் சூட்டும் வகையில் நகர்மன்றத்தில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்கப்படும். இந்த பூங்கா திறப்பு விழா நவம்பரில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.

 


Page 84 of 167