Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

65 கிமீ மாநகராட்சி சாலைகளை பராமரிக்க ரூ.25 கோடி மானியம்

Print PDF

தினகரன் 24.09.2010

65 கிமீ மாநகராட்சி சாலைகளை பராமரிக்க ரூ.25 கோடி மானியம்

நெல்லை, செப். 24: நெல்லை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

நெல்லை மாநகராட்சி பகுதியில் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளின் நீளம் 868.24 கி. மீட்டராகும். புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, பாதாள சாக்கடைத்திட்டம் ஆகியவற்றின் காரணமாக பழு தாகும் சாலைகளை சீரமைப்பது அவசியமாகிறது.

மாநகராட்சி பொதுநிதியிலிருந்தும், அவ்வப்போது ஒதுக்கீடு செய்யப்படும் பகுதி&2 திட்டத்தின் கீழும் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை துரிதமாக முடிக்கும் பொருட்டு அரசிடம் நிதிஒதுக்கீடு செய்து தருமாறு மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.

அதனடிப்படையில் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 65 கிமீ தூரம் சிமென்ட் சாலைகள் மற்றும் தார்ச்சாலைகள் அமைக்க ரூ.25 கோடி மான்யமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணை யினை துணைமுதல்வர் ஸ்டாலின் என்னிடம் வழங்கியுள்ளார். இப்பணியினை மேற்கொள்ள அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிப்பங்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஏற்கனவே ஒவ்வொரு வார்டுக்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி, முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இப்பணிகள் வார்டுகளில் தொடர்ந்து நடக்கும். நெல்லை மாநகராட்சியின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது கமிஷ னர் சுப்பையன், மண்டல தலைவர்கள் பாளை சுப.சீதாராமன், நெல்லை விஸ்வநாதபாண்டியன், மேலப்பாளையம் மைதீன், கவுன்சி லர்கள் சுப்பையாபாண்டியன், பிராங்கிளின் ஆகி யோர் உடனிருந்தனர். கல் லணை மாநக ராட்சி பள்ளி யில் படித்து எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஜாஸ்மினுக்கு அரசு சார்பில் கூடுதல் நிதியுதவி ரூ.15 ஆயி ரத்தை மேயர் வழங்கினார்.

நெல்லை பகுதியில் சாலை பராமரிப்புக்காக ரூ.25 கோடி அரசு மானியம் ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையை துணை முதல்வர் ஸ்டாலின் மேயர் சுப்பிரமணியனிடம் வழங்கினார்.

 

தருமபுரி நகராட்சி சாலை மேம்பாட்டுப்பணிக்கு ரூ.5.50 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 23.09.2010

தருமபுரி நகராட்சி சாலை மேம்பாட்டுப்பணிக்கு ரூ.5.50 கோடி ஒதுக்கீடு

தருமபுரி, செப்.22: தருமபுரி நகராட்சியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.5.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தருமபுரி நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதைசாக்கடை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்கவும், நகரில் பழுதடைந்துள்ள சாலைகளை புதுப்பிக்கவும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற சிறப்பு சாலை அபிவிருத்தித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இப்பணிகளுக்கான ஆûணையை துணை முதல்வர் மு..ஸ்டாலின், தருமபுரி நகர்மன்றத் தலைவர் டி.சி.பி.ஆனந்தகுமாரராஜாவிடம் வழங்கினார்(படம்). நகராட்சி ஆணையர் அண்ணாதுரையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அக்டோபர் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டு, 3 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என டி.சி.பி.ஆனந்தகுமாரராஜா தெரிவித்தார்.

 

உடு​மலையில் திட்​டச் சாலைப் பணி​கள் துவக்​கம்

Print PDF

தினமணி 23.09.2010

உடு​மலையில் திட்​டச் சாலைப் பணி​கள் துவக்​கம்

உடு​மலை,​​ செப்.22: புற​வ​ழிச்​சாலை அமைக்​கும் பணிக்​காக உடு​மலை நக​ராட்​சி​யின் சார்​பில் பணி​கள் புதன்​கி​ழமை துவங்​கின.​ கோவை-​திண்​டுக்​கல் தேசிய நெடுஞ்​சா​லை​யில் அமைந்​துள்ள உடு​மலை நக​ரத்தை அ ன்றா​டம் ஆயி​ரக்​க​ணக்​கான கன ரக வாக​னங்​கள் கடந்து செல்​கின்​றன.​ மேலும் நாளு க்கு நாள் பெருகி வரும் மக்​கள் தொகை கார​ண​மாக ஏற்​ப​டும் போக்​கு​வ​ரத்து நெரி​சல் களால் அடிக்​கடி விபத்​து​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன.​ இத​னால் பொது​மக்​கள் கடும் மன உளைச்​சல்​க​ளுக்கு உள்​ளாகி வரு​கின்​ற​னர்.​ இதைத் தடுக்க உடு​மலை நக​ரில் புற​வ​ழிச்​சாலை ஒன்றை அமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.​

​ இதன்​படி ஏற்​கெ​னவே உள்ள திட்​டச் சாலை​யில் இருந்து வரும் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்​றி​விட்டு ஒரு புற​வ​ழிச்​சாலை அமைக்க உடு​மலை நக​ராட்சி சார்​பில் திட்​ட​மி​டப்​பட்​டது.​ இதற்​காக உடு​மலை நகரை ஒட்டி கிழக்​குப் பகு​தி​யான வெஞ்​ச​ம​டை​யில் இருந்து மேற்கே உள்ள மின் மயா​னம் வரை சுமார் 5 கி.மீ.​ தொலை​விற்கு இந்த திட்ட சாலை அமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.​

​ வெஞ்​ச​ம​டை​யில் இருந்து எஸ்வி மில் பின்​பு​றம் தொடங்கி ஜோதி நகர்,​​ ஐஸ்​வர்யா நகர்,​​ அனு​சம் தியேட்​டர் பின்​பு​றம் வழி​யாக திருப்​பூர் ரோடு வரை 100 மீட்​டர் சாலை​யா​க​வும்,​​ அதன் பிறகு இங்​கி​ருந்து பொள்​ளாச்சி சாலை​யில் அமைந்​துள்ள மின் மயா​னம் வரை 60 அடி சாலை​யா​க​வும் அமைக்க திட்​ட​மி​டப்​பட்​டது.​

​ புற​வ​ழிச்​சாலை அமை​ய​வுள்ள சுமார் 5 கி.மீ.​ நீளத்​திற்கு உள்ள ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்​ற​வும் அந்த நிலங்​களை கைய​கப்​ப​டுத்​த​வும் நக​ராட்சி நிர்​வா​கம் முடிவு செய்​தது.​ இதன்​படி நக​ராட்சி அதி​கா​ரி​கள் கடந்த ஜன​வரி மாதம் இதற்​கான சர்வே பணி​க​ளில் ஈடு​பட்​ட​னர்.​

​ ​ இந்​நி​லை​யில் புற​வ​ழிச் சாலை அமைப்​ப​தற்​கான பணி​கள் புதன்​கி​ழமை தொடங்​கி​யது.​ உடு​மலை நக​ராட்சி ஆணை​யா​ளர் அ.சுந்​த​ராம்​பாள்,​​ பொறி​யா​ளர் செந்​தில்​கு​மார்,​​ சர்​வே​யர் அழ​கி​ரி​சாமி மற்​றும் நக​ராட்சி ஊழி​யர்​கள் இந்த பணி​களை மேற்​கொண்​ட​னர்.​

இது குறித்து உடு​மலை நக​ராட்சி தலை​வர் செ.வேலுச்​சாமி செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி யது:​ முதல் கட்​ட​மாக திருப்​பூர் சாலை முதல் தாரா​பு​ரம் சாலை வரை சுமார் 1 கி.மீ.​ தூரத்​திற்கு இந்​தப் பணி​கள் நடை​பெ​றும்.​ திட்​டச் சாலை​யின் அக​லம் 100 அடி​யாக இருக்​கும்.​ ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட்டு பொக்​லைன் எந்​தி​ரத்​தின் மூலம் சுத்​தம் செய்​யும் பணி தற்​போது துவக்​கப்​பட்​டுள்​ளது.​ நக​ராட்​சி​யின் சார்​பில் மேற்​கொள்​ளப்​ப​டும் இந்த பணி​கள் படிப்​ப​டி​யாக விரி​வு​ப​டுத்​தப்​ப​டும்.​ பிறகு நெடுஞ்​சா​லைத் துறை வசம் ஒப்​ப​டைக்​கப்​ப​டும்.​ இந்​தப் பணி​கள் நிறைவு பெற்​ற​பின் உடு​மலை நக​ரில் போக்​கு​வ​ரத்து நெரி​சல் வெகு​வா​கக் குறை​யும் என்​றார்.

 


Page 85 of 167