Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரோடுகள் புதுப்பிக்க ரூ6கோடி நிதி துணை முதல்வர் வழங்கினார்

Print PDF

தினகரன் 22.09.2010

ரோடுகள் புதுப்பிக்க ரூ6கோடி நிதி துணை முதல்வர் வழங்கினார்

பொள்ளாச்சி, செப். 22: பொள்ளாச்சி நகரில் உள்ள ரோடுகளை புதுப்பிக்க துணைத் தலைவர் ஸ்டாலினிடம் இருந்து ரூ. 6 கோடி நிதியினை நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி பெற்றார்.

பொள்ளாச்சி நகரின் பல்வேறு இடங்களிலும் ரோடுகள் பழுதடைந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரோடுகள் ஆங்காங்கு குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண நகரின் முக்கிய பகுதிகளில் புதிதாக தார் ரோடு போட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கென ரூ. 6 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசின் அனுமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் மேம்பாட்டுக்கென முதல்வர் ரூ. ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவித்தார். அந்த நிதியில் இருந்து பொள்ளாச்சி நகராட்சிக்கு ரூ. 6 கோடி வழங்குவதாக அரசு அறிவித்தது. இந்த நிதியினை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி பெற்றார். அப்போது நகராட்சி நிர்வாக செயலர் அசோக்வர்தன் ஷெட்டி, நகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலரும் உடன் இருந்தனர்

 

சாலை சீரமைப்பு பணி: ரூ.5.50 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 22.09.2010

சாலை சீரமைப்பு பணி: ரூ.5.50 கோடி ஒதுக்கீடு

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பாதாளா சாக்கடை திட்டம் கீழ் சாலை அபிவிருத்தி பணிகளுக்கு 5 கோடியே 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தர்மபுரி நகராட்சி உட்பட்ட 33 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாதிப்படைந்த சாலைகளை சீரமைக்க 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் துணை முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதை ஏற்று நகராட்சியில் புதிய சாலை அபிவிருத்தி பணிக்கு 5 கோடியே 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஆணையை துணை முதல்வர் ஸ்டாலின், சேர்மன் ஆனந்தகுமார் ராஜாவிடம் வழங்கினார்.

 

பொள்ளாச்சி நகராட்சிக்குசாலை மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 22.09.2010

பொள்ளாச்சி நகராட்சிக்குசாலை மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு

பொள்ளாச்சி:தமிழக அரசு மூலம் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து பொள்ளாச்சி நகராட்சிக்கு ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நகராட்சி தலைவர் ராஜேஸ்வரியிடம் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் சாலை மேம்பாட்டுக்காக ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது. முதல்கட்டமாக பொள்ளாச்சி நகராட்சிக்கு சாலை மேம்பாட்டுக்காக ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான, நிர்வாக அனுமதி ஆணையை சென்னையில் நடந்த விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் நகராட்சி தலைவர் ராஜேஸ்வரியிடம் வழங்கினார். இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.பொள்ளாச்சி நகராட்சி சாலைகள் மேம்பாட்டுக்காக, அரசு ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, நிர்வாக அனுமதி ஆணையை துணை முதல்வர் ஸ்டாலின், நகராட்சி தலைவர் ராஜேஸ்வரியிடம் வழங்கினார்.

 


Page 87 of 167