Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

அரசு ஒதுக்கியுள்ள ரூ. 10 கோடியில் விழுப்புரம் சாலைகள் சீரமைப்பு: சேர்மன் தகவல்

Print PDF

தினமலர் 14.09.2010

அரசு ஒதுக்கியுள்ள ரூ. 10 கோடியில் விழுப்புரம் சாலைகள் சீரமைப்பு: சேர்மன் தகவல்

விழுப்புரம் : விழுப்புரம் நகருக்கு அரசு ஒதுக்கியுள்ள 10 கோடி ரூபாய் நிதியில் சாலைகள் சீரமைக்கப்படுமென நகர சேர்மன் ஜனகராஜ் கூறினார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. தொடர் மழையினால் சாலைகள் சேதமடைந்து மோசமாகியுள்ளது. சாலையில் குவிந்த மண் மேடுகளை அகற்றி வருகிறோம். தமிழகத்தில் நகர்புற சாலைகளை சீரமைக்க 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக திருச்சியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் அறிவித்துள்ளார்.

இதில் விழுப்புரம் நகருக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் இந்த நிதி கிடைக்கும் என எதிர்பார்த் துள்ளோம். கிடைத்தவுடன் 40 கிலோ மீட்டர் தொலைவிலான சாலைகள் போடப்படும். எஞ்சியுள்ள 25 கிலோ மீட்டர் சாலைப் பணிகள் நகராட்சி பொது நிதியில் நிதி ஒதுக்கி முடிக்கப்படும்.

இந்தப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு அக்., மாத கடைசியில் பணிகள் துவங்கும். பழைய பஸ் நிலையத்தில் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி சிமென்ட் தளம் போட்டு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் வரும் ஜனவரிக்குள் முடிவடையும். குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ரயில் நிலையத்தை கடந்து செல்லும் சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்த ரயில்வே நிர்வாகம் தடையாக உள்ளது. நகராட்சி பள்ளி மைதானத்தில் 6 லட்சம் ரூபாயில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுகிறது. சென்னை சாலையில் (மேல் தெரு பகுதி) தார்சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு 98 லட்சம் ரூபாய் நகராட்சி வழங்கியுள்ளது. இவ்வாறு சேர்மன் ஜனகராஜ் கூறினார்.

 

"ஒட்டன்சத்திரம் - நாகணம்பட்டி புறவழிச்சாலை ரூ. 60 லட்சம் செலவில் சீரமைக்கப்படும்'

Print PDF

தினமணி 08.09.2010

"ஒட்டன்சத்திரம் - நாகணம்பட்டி புறவழிச்சாலை ரூ. 60 லட்சம் செலவில் சீரமைக்கப்படும்'

ஒட்டன்சத்திரம், செப். 7: ஒட்டன்சத்திரம் பேரூராட்சி பொது நிதி மூலம் ஒட்டன்சத்திரம் - நாகணம்பட்டி புறவழிச்சாலை சுமார் ரூ. 60 லட்சம் செலவில் சீரமைக்கப்படும் என்று அரசு தலைமைக் கொறடா அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ஒட்டன்சத்திரம் பேரூராட்சி நாகணம்பட்டி ஆர்.எஸ்.பி. நகரில் புதிதாக அமைக்கப்பட்ட தெரு விளக்குகளை இயங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் ஒன்றிய தி.மு.. செயலாளர் இரா.சோதீசுவரன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் திருமலைசாமி வரவேற்றார்.

தெரு விளக்குகளை இயங்கி வைத்து அரசு தலைமைக் கொறடா பேசியதாவது:

ஒட்டன்சத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட நாகணம்பட்டியில் நில எடுப்பு சட்டத்தின் கீழ் 4 ஏக்கர் 32 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2000-ம் ஆண்டு 115 ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், நில உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சுமார் 10 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. முடிவில் 2010-ம் ஆண்டு 2-வது மாதத்தில் நில எடுப்பு செல்லும் என்று, வீட்டுமனைப் பட்டாதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இந்த நகரில் முதற்கட்டமாக புதிதாக 17 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு, இயக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்யப்படும்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் குடிநீர் வசதியும், தமிழக அரசின் சிறப்பு சாலைகள் திட்டத்தின் மூலம் சுமார் ரூ. 40 லட்சம் செலவில் சிமெண்ட் சாலையும் விரைவில் அமைக்கப்படும்.

மேலும் ஒட்டன்சத்திரம் - நாகணம்பட்டி புறவழிச்சாலை பேரூராட்சி பொது நிதியில் இருந்து சுமார் ரூ. 60 லட்சம் செலவில் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், உதவி மின் பொறியாளர் அய்யாக்குட்டி, பேரூர் அவைத்தலைவர் ஆனந்தன், பேரூராட்சி கவுன்சிலர் பஞ்சவர்ணம் மகுடீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Last Updated on Wednesday, 08 September 2010 10:47
 

ரூ. 12 கோடியில் புதிய ரோடுகள்:நகராட்சி இன்ஜினியர் தகவல்

Print PDF

தினமலர் 08.09.210

ரூ. 12 கோடியில் புதிய ரோடுகள்:நகராட்சி இன்ஜினியர் தகவல்

ராமநாதபுரம்:""ராமநாதபுரம் நகராட்சியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் ரோடு பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாக,'' நகராட்சி இன்ஜினியர் மகேந்திரன் தெரிவித்தார்.ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கியதிலிருந்து ரோடுகள் குண்டும் குழியுமாக மாறின. வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானது குறித்து "தினமலர் ' பலமுறை சுட்டிகாட்டி உள்ளது. இதன் எதிரொலியாக முதற்கட்டமாக அக்ரஹாரம் ரோடு, போஸ்ட் ஆபீஸ் ரோடு புதுப்பிக்கப்பட்டுள் ளது. இதை தொடர்ந்து மற்ற ரோடுகள் பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது.

இன்ஜினியர் கூறியதாவது: சில தினங்களில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். திட்ட டிபாசிட் தொகை வீடுகளுக்கு 7000 , கடைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி இணைப்பு பெற்று கொள் ளலாம். குடிநீர் இணைப்பு கேட்டவுடன் வழங்கப்படுகிறது. இணைப்பு வேண்டுவோர் டிபாசிட் தொகை 5000 மற்றும் சாலை சீரமைப்பு கட்டணம் 2500 செலுத்தி இணைப்பு பெற்று கொள்ளலாம். பாதாள திட்டம் பணிகள் முடிந்தவுடன் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளும் 12 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது. மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிந்தளவு பணிகளை விரைந்து செய்ய தீவிர நவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

 


Page 90 of 167