Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பள்ளப்பட்டி பஞ்.,ல் தார்சாலை அமைப்பு

Print PDF

தினமலர் 06.09.2010

பள்ளப்பட்டி பஞ்.,ல் தார்சாலை அமைப்பு

கரூர்: அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. பள்ளப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளிலும் சாலை வசதி மேம்படுத்துவதற்காக பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. 18வது வார்டு ராஜாப்பேட்டை தெரு முதல் தைக்கால் தெரு வரை 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. பணிகளை டவுன் பஞ்சாயத்து தலைவர் பசீர் அகமது நேரில் பார்வையிட்டார். செயல் அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரத்து 271 லட்சத்தில் ரோடு சீரமைப்பு

Print PDF

தினமலர் 06.09.2010

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரத்து 271 லட்சத்தில் ரோடு சீரமைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதியதாக 3 ஆயிரத்து 271 லட்சத்தில் நூறு ரோடுகள் போடப்படுகிறது. இதில் 50 ரோடுகளில் பெயர் விபரம் வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு உத்தேசமாக 3 ஆயிரத்து 271 லட்சத்து 90 ஆயிரம் செலவாகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் மொத்தம் நூறு ரோடுகள் புதியதாக போடப்படுகிறது. புதியதாக சீரமைக்கப்படும் சாலை விபரம் கிருஷ்ணராஜபுரம் 9வது தெரு முதல் மாணிக்கபுரம் மெயின்ரோடு வரை 66 லட்சத்தில் தார் சாலை. அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா சந்திப்பில் இருந்து செயின்ட் தாமஸ் பள்ளி வரை இஞ்ஞாசியார்புரம் ரோடு 18 லட்சத்து 70 ஆயிரத்தில் தார்சாலை. சேதுபாதை மெயின் சாலையில் 42 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை. 2ம் கேட் முதல் 3ம் கேட் வரை ஆண்டாள் தெருவில் 113 லட்சத்து 60 ஆயிரத்தில் சிமென்ட் சாலை மற்றும் மழைநீர் வடிகால்.

கணேஷ்நகர் மெயின் சாலையில் 22 லட்சத்து 25 ஆயிரத்தில் தார்சாலை. கணேஷ்நகர் குறுக்குத்தெரு பகுதிகளில் 24 லட்சத்தில் தார்சாலை. 4வது ரயில்வே கேட் முதல் எட்டயபுரம் ரோடு சந்திப்பு வரை உள்ள குறிஞ்சிநகர் மெயின் ரோட்டில் 64 லட்சத்தில் சிமென்ட் சாலை. பிரையன்ட்நகர் மேற்கு மற்றும் கிழக்கு மெயின்ரோடு, பிரையன்ட்நகர் 12வது தெரு, பிரையன்ட்நகர் 1வது தெரு முதல் காமராஜ் ரோடு வரை 211 லட்சத்தில் தார்சாலை. கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் 72 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால். சிவந்தாகுளம் மெயின் ரோடு (வடக்கில் இருந்து தெற்கு) 40 லட்சத்தில் ஹோலிகிராஸ் கான்வென்ட் பள்ளி மேல்பக்கம் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால். தாமோதரநகர் மெயின் ரோட்டில் 48 லட்சத்தில் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால்.கந்தசாமிபுரம் மெயின் ரோட்டில் அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா சந்திப்பில் இருந்து எஸ்.கே.எஸ்.ஆர் காலனி வரை 42 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை .

போல்பேட்டை 60 அடி ரோட்டில் 62 லட்சத்து 75 ஆயிரத்தில் தார்சாலை. ஸ்டேட் பாங்க் காலனி சக்திவிநாயகர்புரம் குறுக்குத்தெருவில் 37 லட்சத்தில் தார்சாலை. திரேஸ்புரம் மெயின்ரோடு, பூபால்ராயபுரம் மெயின்ரோடு சந்திப்பு வரை 32 லட்சத்து 75 ஆயிரத்தில் தார்சாலை. பூபால்ராயபுரம் மெயின் ரோடு சத்யா மகால் முதல் முருகன் தியேட்டர் வரை 31 லட்சத்தில் தார்சாலை. திரேஸ்புரம் மெயின் ரோடு ஜோசப்பள்ளி முதல் மேட்டுபட்டி கிழக்கு பகுதி வரை 40 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை. வடக்கு ராஜா தெருவில் 21 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை. டேவிஸ்புரம் கிழக்கு மற்றும் மேற்கு மெயின்ரோடு முதல் கருப்பட்டி சொசைடி சந்திப்பு வரை 79 லட்சத்தில் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால்.வி..ரோடு மற்றும் தேவர்புரம் ரோடு வரை (காய்கறி மார்கெட் சந்திப்பு) 110 லட்சத்தில் தார்சாலை. போல்டன்புரம் மெயின் ரோடு முதல் நியூகாலனி கே.எஸ்.பி.எஸ் தியேட்டர் வரை 49 லட்சத்தில் தார்சாலை. போல்டன்புரம் மற்றும் ராமசாமிபுரம் தெருவில் 58 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை. மணிநகரில் 34 லட்சத்த 40 ஆயிரத்தில் தார்சாலை.

முனியசாமிபுரம் 2ம் தெரு மற்றும் மேற்குபகுதியில் 32 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை. தந்தி ஆபிஸ் ரோடு மற்றும் ஜெயிலானி தெரு தொடர்ச்சி வரை 33 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால். பக்கிள்புரம் தெருவில் 4 லட்சத்து 60 ஆயிரத்தில் தார்சாலை. டூவிபுரம் 5வது தெருவில் 18 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை.

லெவஞ்சிபுரம் 2வது தெரு மற்றும் சிவந்தாகுளம் தொடர்ச்சி பகுதியில் 19 லட்சத்து 70 ஆயிரத்தில் தார்சாலை. குறிஞ்சிநகர் கலைஞர் அரங்கம் பின் பகுதியில் 13 லட்சத்தில் தார்சாலை. மீனாட்சிபுரம் மெயின்ரோட்டில் 8 லட்சத்து 60 ஆயிரத்தில் தார்சாலை. சுப்பையாவித்யாலயம் பெண்கள் பள்ளி பெருமாள் தெருவில் 17 லட்சத்து10 ஆயிரத்தில் தார்சாலை.

அண்ணாநகர் மேற்கு 8,9,10 தெருவில் 30 லட்சத்தில் தார்சாலை. அண்ணாநகர் 1 முதல் 11 வரையிலும், அண்ணாநகர் 1,2,3 குறுக்கு தெருவில் 133 லட்சத்தில் தார்சாலை. மங்களபுரம் குறுக்குதெரு மற்றும் அண்ணாநகர் 12வது தெருவில் 22 லட்சத்தில் தார்சாலை. கே.வி.கே நகர் மேற்கு பகுதியில் 21 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை. ஸ்டேட் பாங்க் காலனி மெயின்ரோட்டில் 31 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை.வண்ணார்தெரு மற்றும் தாமோதரநகர் குறுக்குத்தெருவில் 20 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை, கீழசண்முகபுரம் 2வது தெருவில் 4 லட்சத்து 60 ஆயிரத்தில் சிமெண்ட் சாலை மற்றும் மழைநீர் வடிகால். கீழசண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோயிலை சுற்றி 3 லட்சத்து 90 ஆயிரத்தில் சிமெண்ட் சாலை. சக்திவிநாயகர் கோயில் தெரு மற்றும் சந்து பகுதியில் 4 லட்சத்து 40 ஆயிரத்தில் சிமெண்ட் சாலை.

முத்துதெருவில் 7 லட்சத்து 35 ஆயிரத்தில் சிமெண்ட் சாலை. கருப்பசாமி கோயில் தெருவில் 2 லட்சத்து 30 ஆயிரத்தில் சிமென்ட் சாலை. நம்பிக்கை ரோச் விளை தெருவில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்தில் சிமெண்ட் சாலை. பிரமுத்துவிளை மற்றும் பத்திரகாளியம்மன் கோயில் தெருவில் 6 லட்சத்து10 ஆயிரத்தில் சிமெண்ட் சாலை.பார்த்தசாரதி தெருவில் 3 லட்சத்து 85 ஆயிரத்தில் சிமென்ட் சாலை. மீ.கா தெருவில் 2 லட்சத்து 60 ஆயிரத்தில் சிமென்ட் சாலை. டி.ஆர்.தெருவிவில் (பங்களா தெரு) 6 லட்சத்து 70 ஆயிரத்தில் சிமெண்ட் ரோடு. ஸ்டேட் பாங்க் காலனி, நடராஜநகர் மற்றும் குறுக்குத் தெருவில் 28 லட்சத்தில் தார்சாலை. பிரையன்ட்நகர் அம்மன் கோயில் தெருவில் 17 லட்சத்து 50 ஆயிரத்தில் தார்சாலை.இந்த ரோடுகள் அனைத்தும் மிக விரைவில் போடுவதற்கு ரெடி செய்யப்பட்டு வருகிறது.

 

வால்பாறை சாலைகளை பராமரிக்க 2.5 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 06.09.2010

வால்பாறை சாலைகளை பராமரிக்க 2.5 கோடி நிதி ஒதுக்கீடு

வால்பாறை, செப்.5: வால்பாறை பகுதியில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சிகளின் கூடுதல் இயக்குநர் தெரிவித்தார்.

தமிழக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வால்பாறை பகுதியில் பழுதடைந்த சாலைகளை ஆய்வு செய்வதற்காக நகராட்சிகளின் கூடுதல் இயக்குநர் துரை சந்திரசேகர் வால்பாறை பகுதிக்கு வந்தார்.

வால்பாறையில் உள்ள குமரன் ரோடு, அரசு மருத்துவமனை ரோடு, மார்க்கெட் ரோடு, சக்தி, தலநார், நடுமலை, நல்லகாத்து உள்ளிட்ட எஸ்டேட் ரோடுகளை ஆய்வு செய்த அவர், இதனை சீரமைக்க 2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நகராட்சி மண்டல இயக்குநர் விஜயலட்சுமி, வால்பாறை நகராட்சி செயல் அலுவலர் ராஜ்குமார், பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 91 of 167