Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

அபிராமத்தில் 42.9 லட்சத்தில் சாலைகளைச் சீரமைக்க முடிவு

Print PDF

தினமணி 06.09.2010

அபிராமத்தில் 42.9 லட்சத்தில் சாலைகளைச் சீரமைக்க முடிவு

கமுதி, செப். 5: கமுதி அருகே அபிராமத்தில் 42.9 லட்சம் செலவில் சாலைகளைச் சீரமைக்க பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இப் பேரூராட்சியின் சாதாரண கூட்டம், தலைவர் பி.எஸ்.கணேசன் () கணேஷ்குமார் தலமைமையில் நடைபெற்றது. எஸ்.அகம்மது இப்ராகிம், செயல் அலுவலர் (பொறுப்பு) பா.முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

2010-2011-ம் ஆண்டிற்குரிய பேரூராட்சி சாலைகள் சீரமைப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் 42.9 லட்சம் செலவில் ஒரு சிமென்ட் சாலை மற்றும் 9 தார்ச் சாலைகளை சீர மைத்தல், கிராம நிர்வாக அலுவலர் அறை பின்புறம் 3 லட்சம் செலவில் மகளிருக்கு நவீன கழிப்பறை கட்டுதல், 90 சதவீத மானியத் தொகையும், பேரூராட்சியின் 10 சதவீத பங்குத் தொகையும் சேர்த்து 2.5 லட்சம் செலவில் பூங்கா மற்றும் விளையாடுமிடம் அமைத்தல், 75 சதவீத மானியத் தொகையும், பேரூராட்சியின் 25 சதவீத மானியத் தொகையும் சேர்த்து 30 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டுதல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Monday, 06 September 2010 10:30
 

ரூ13.30லட்சத்தில் தார் சாலை

Print PDF

தினகரன் 06.09.2010

ரூ13.30லட்சத்தில் தார் சாலை

பெருந்துறை, செப். 6: பெருந்துறை தொகுதி பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் சடையகவுண்டன் வலசு ராசாகோயில் பகுதியில் இருந்து தோப்புபாளையம் வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.13.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் பணி துவக்க விழா நடந்தது.இதில் எம்எல்ஏ பொன்னுதுரை பணியைத் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் இளங்கோ, செயல்அலுவலர் வில்லியம், ஜேசுதாஸ், தொகுதி அதிமுக செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பீர்க்கன்கரணை பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முடிவு பேரூராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 06.09.2010

பீர்க்கன்கரணை பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முடிவு பேரூராட்சி தலைவர் தகவல்

தாம்பரம், செப்.6: பீர்க்கன்கரணை பகுதியில் பழுதடைந்த 15க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ1,000 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி, பீர்க்கன்கரணை பேரூராட்சியில் 15 வார்டுகளில் அதிகளவில் சேதமடைந்த 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 15க்கும் மேற்பட்ட சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தார் மற்றும் சிமென்ட் சாலைகளாக அமைக்கப்பட உள்ளது.

அதன்படி, டி.டி.கே. நகர் 4வது தெரு விரிவு, சக்தி நகர் மெயின் ரோடு, இந்திரா நகர் சர்ச் ரோடு, காயத்திரி தெரு மற்றும் மணி தெரு விரிவு, வெங்கடேசன் தெரு, சூராத்தம்மன் கோயில் தெரு, டி.கே.சிதம்பரனார் தெரு விரிவு, லட்சுமி தெரு மற்றும் குறுக்கு தெரு, நேதாஜி தெரு, காந்தி ரோடு& ஏரிக்கரை சாலை, ராஜிவ்காந்தி தெரு மற்றும் குறுக்கு தெரு, வேலு நகர் 5வது தெரு, போன்ற சாலைகள் சிமென்ட் சாலைகளாகவும், ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு, விஜயலட்சுமி தெரு, ..சி. தெரு போன்ற சாலைகள் தார் சாலைகளாகவும் அமைக்கப்படுகிறது. இந்த தகவலை பேரூராட்சி தலைவர் த.ராசேந்தின் தெரிவித்தார்.

 


Page 92 of 167