Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரூ.33 கோடி செலவில் கோயம்பேடு மார்க்கெட் ரோடு அகலப்படுத்தப்படுகிறது: மழைநீர் வடிகாலும் சீரமைப்பு

Print PDF

மாலை மலர் 04.09.2010

ரூ.33 கோடி செலவில் கோயம்பேடு மார்க்கெட் ரோடு அகலப்படுத்தப்படுகிறது: மழைநீர் வடிகாலும் சீரமைப்பு

ரூ.33 கோடி செலவில்
 
 கோயம்பேடு மார்க்கெட் ரோடு
 
 அகலப்படுத்தப்படுகிறது:
 
 மழைநீர் வடிகாலும் சீரமைப்பு

சென்னை, செப். 4- சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் வடிகால் தூர்ந்து குப்பைகள் அடைந்து கிடப்பதால் வடிகால் வசதியின்றி தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் உள்ளது.

இதுபோல் ரோடுகளும் குண்டும்- குழியுமாக உள்ளது. இவற்றை அவ்வப்போது சரி செய்தாலும் மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடுகிறது.

இதனால் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு சிரமப்பட்டு செல்ல வேண்டி உள்ளது. தினமும் சுமார் 1 லட்சம் மக்கள் மார்க்கெட்டுக்கு வந்து செல்வதால் அடிப் படை வசதியின்மை குறித்து பலர் அரசுக்கு புகார் செய்தனர்.

இது பற்றி ஆலோசனை நடத்திய அதிகாரிகள் மார்க்கெட்டில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நவீன மழைநீர் வடிகால் அமைக் கவும், ரோடுகளை புதுப்பிக் கவும் மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கினர்.

அடிப்படை வசதி மேம்பாட்டு குழு உருவாக்கி ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு ரூ.33 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்யவும் சி.எம்.டி..வுக்கு குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த பணம் மார்க்கெட் கமிட்டிக்கு வழங்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் பணிகள் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

 

திட்டச்சாலைகள் அமைக்க ரூ 700 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 04.09.2010

திட்டச்சாலைகள் அமைக்க ரூ 700 கோடி ஒதுக்கீடு

கோவை, செப்.3: தமிழகம் முழுவதும் திட்டச்சாலைகள் அமைக்க மாநில அரசு ரூ 700 கோடி ஒதுக்கியுள்ளது என்று உள்ளூர் திட்டக்குழும இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.

கோவை உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தில் அவர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார் (படம்). பெரும்பாலான மனுதாரர்கள், அதிகாரிகள் தங்களுக்கு உரிய அனுமதிகளை வழங்க இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கொடுத்த புகார் மனுவில், பேரூர் செட்டிப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்க 6 மாதங்களாக அதிகாரிகள் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதைப் பார்த்ததும், ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய பங்கஜ்குமார் குமார் பன்சல், விண்ணப்பதாரர்களுக்கு உரிய அனுமதியை வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளை அழைத்து கண்டித்தார். இந்த அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கொடிசியா தலைவர் எம்.கந்தசாமி, செயலர் சுருளிவேல் ஆகியோர் பங்கஜ்குமார் பன்சலிடம் மனு கொடுத்தனர். அதில் கோவை புறநகர் பகுதிகளான அரசூர், துடியலூர், சின்னவேடம்பட்டி, குறிச்சி, விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 266 தொழில்நிறுவனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன.

இந்நிறுவனங்கள் அருகே சில ஆண்டுகளாக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தொழில்நிறுவனங்கள் மீது தேவையற்ற புகார்களை தெரிவிக்கின்றனர். எனவே, மேற்கண்ட பகுதிகளை தொழில்நிறுவனப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பங்கஜ்குமார் பன்சால் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கோவை உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் இருந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலிப்பணியிடங்கள் இருந்தபோது 619 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. இப்போது 350 விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. ஒரு மாதத்துக்கு 75 முதல் 100 வரை விண்ணப்பங்கள் வருகின்றன.

தமிழகம் முழுவதும் திட்டச்சாலைகள் அமைக்கவும், அவற்றை விரிவுப்படுத்தவும் மாநில அரசு ரூ700 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்குத் தேவையான தனியார் நிலங்களை கையகப்படுத்தி அதற்குரிய தொகையை வழங்கவும் அரசு தயாராக உள்ளது என்றார். ஆய்வின்போது உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் நாகராஜன் உடன் இருந்தார்.

 

நகரில் உள்ள அனைத்து சாலைகளும் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு எம்.எம்.ஆர்.டி.ஏ. திடீர் முடிவு

Print PDF

தினகரன் 04.09.2010

நகரில் உள்ள அனைத்து சாலைகளும் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு எம்.எம்.ஆர்.டி.. திடீர் முடிவு

மும்பை,செப்.4: மும்பையில் அனைத்து சாலைகளும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் நகரில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப் படுகிறது. இதற்கு மாநகராட்சி தான் காரணம் என்று எம்.எம்.ஆர்.டி.. குற்றம் சாட்டுகிறது. அதே சமயம் இதற்கு எம்.எம்.ஆர்.டி.. தான் காரணம் மாநகராட்சி குற்றம் சாட்டிக்கொண்டிருக் கிறது.

இந்நிலையில், இப்பிரச் னைக்கு தீர்வுகாண எம்.எம்.ஆர்.டி.. கட்டுப்பாட் டில் இருந்தத 13 சாலைகள் மாநக ராட்சியிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. எம்.எம்.ஆர்.டி..விடம் தற்போது அந்தேரி ஜே.பி.சாலை மற்றும் அந்தேரி& காட்கோபர் இணைப்பு சாலைகள் மட்டும் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளும் தொடர்ந்து மாநில பொதுப் பணித் துறையிடம் இருக்கும். இதற்கிடையே, சாலையில் உள்ள குழிகளை நிரப்ப மாநகராட்சி மேலும் 20 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது.

நகரில் தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகள் மோசமாக பாதிக்கப்பட் டதால் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு விட்டு செலவு செய்யப்பட்டுள்ளது.

 


Page 93 of 167