Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பள்ளபட்டி பேரூராட்சியில் தார்ச் சாலை ஆய்வு

Print PDF

தினமணி 02.09.2010

பள்ளபட்டி பேரூராட்சியில் தார்ச் சாலை ஆய்வு

அரவக்குறிச்சி, செப். 1: பள்ளபட்டி பேரூராட்சி ராஜாப்பேட்டை தெருவில் நபார்டு திட்டத்தின் கீழ் |ரூ 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்ச் சாலையை பேரூராட்சித் தலைவர் தோட்டம் டி.எம். பசீர்அகமது,பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் ஆர்.பி. சுப்பிரமணியன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.

கரூர் மாவட்டம், பள்ளபட்டி பேரூராட்சி 18, 14, 13 மற்றும் 12 ஆகிய 4 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் ரூ| 20 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியுள்ளது.

 

ரூ.1.66 கோடியில் பைபாஸ் சர்வீஸ் சாலை

Print PDF

தினமலர் 02.09.2010

ரூ.1.66 கோடியில் பைபாஸ் சர்வீஸ் சாலை

மதுரை : மதுரை பைபாஸ் சர்வீஸ் சாலைகளை 1.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 கி.மீ., தூரத்திற்கு மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மதுரை நகரின் வளர்ந்து வரும் பகுதியாக, பைபாஸ் சாலை இருக்கிறது. ஏற்கனவே இச்சாலையை செப்பனிடும் பணியை 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை துவக்கி உள்ளது. இச்சாலையின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகளில் மேற்கு புறத்தில் சம்மட்டி புரத்தில் இருந்து துரைசாமி நகர் வரை மட்டுமே தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதுவும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகளாக எந்த பணியும் செய்யப்படவில்லை.

இப்போது, மீதி உள்ள சர்வீஸ் சாலைகளையும் மேம்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. 68வது வார்டில் பைபாஸ் ரோடு கிழக்குபுறத்திலும் மேற்குபுறத்திலும், 71வது வார்டில் பாத்திமா நகர் முதல் பெத்தானியாபுரம் வரையிலும் புதிய சாலை அமைக்கப்படும். புதிதாக அமைக்கப்பட உள்ள சாலைகளின் 3 கி.மீ., மதிப்பீடு, 1.66 கோடி ரூபாய். மாநில அரசின் நிதியின் கீழ், நகரம் முழுவதும் 140 கி.மீ., நீளத்திற்கு சாலைகள் செப்பனிடுப்படும்போது, இச்சாலைகளும் அமைக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ரூ.10 கோடியில் சாலைகள் புதுப்பிப்பு : குடந்தை நகர்மன்ற கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 02.09.2010

ரூ.10 கோடியில் சாலைகள் புதுப்பிப்பு : குடந்தை நகர்மன்ற கூட்டத்தில் முடிவு

கும்பகோணம்: கும்பகோணம் நகரில் 10 கோடி ரூபாய் செலவில் சாலைகளை புதுப்பிக்க நகர்மன்ற கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

கும்பகோணம் நகராட்சியின் அவரச கூட்டம் தலைவர் தமிழழகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஆணையர் பூங்கொடி அருமைக்கண், துணைத் தலைவர் தர்மபாலன், பொறியாளர் கனகசுப்புரெத்தினம், மேலாளர் லெட்சுமிநாராயணன் மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் மாநில நிதி ஒதுக்கீட்டில் நிதி வழங்கிட ஏதுவாக நகராட்சி நிர்வாக இயக்குநரகம் கேட்டுகொண்டதன் பேரில், கோவில், முக்கிய புராதன சின்னம், பள்ளி, தொழிற்கூடம், போக்குவரத்துக்கான முக்கிய சாலை ஆகிய இனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அவ்வகையில் பாதாள சாக்கடை, குடிநீர் விநியோகம் குழாய் அமைத்தல், மழை மற்றும் இடர்பாடுகள் ஆகிய இனங்களால் பாதிப்பான கும்பகோணம் நகராட்சி பகுதியில் 50 கிலோ மீட்டர் நீளத்துக்கு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணி மேற்கொள்ள கருத்துருவை நகராட்சி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைத்து நிதி பெறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், திமுக உறுப்பினர் காமேஷ் பேசுகையில், "பாதாள சாக்கடைத் திட்டப்பணி எனது வார்டில் மேற்கொள்ளவில்லை. ஒரு சில தெருக்களில் சாலைகளும் சரியில்லை' என்றார்.

இதற்கு பதிலளித்த பொறியாளர், "நடப்பு நிதியாண்டில் விடுபட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும்' என்றார்.

பாமக உறுப்பினர் பீட்டர் லாரன்ஸ் பேசுகையில், "25 வார்டு பகுதியில் ராதா நகர், கிருஷ்ணப்பா மேலசந்து சாலையை இத்திட்டத்தில் சேர்க்கவில்லை' என்றார்.

பொறியாளர்: "தாங்கள் குறிப்பிட்ட நகர் நகராட்சிப் பகுதியில் உள்ளதா? என ஆய்வு செய்த பின் இத்திட்டம் இறுதி வடிவம் பெறும்போது சேர்த்துகொள்ளப்படும்' என்றார். இவ்வாறு விவாதம் முடிந்த பின் அவசர கூட்டம் நிறைவடைந்தது.

 


Page 94 of 167