Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ஆரணியில் ரூ6 கோடி மதிப்பில் சாலைகள்

Print PDF

தினகரன் 02.09.2010

ஆரணியில் ரூ6 கோடி மதிப்பில் சாலைகள்

ஆரணி,செப்.2: ரூ6 கோடி மதிப்பில் சாலை பணிகள் மேற்கொள்வது என்று ஆரணி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆரணி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் சசிகலா, மேலாளர் ராமஜெயம், துணைத்தலைவர் லட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

ஆரணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தார் சாலைகள், சிமென்ட், கான்கிரீட் தளம் மற்றும் கப்பிச் சாலை ஆகியவை மொத்தம் ரூ6 கோடி மதிப்பில் 22.98 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்வது. இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு..ஸ்டாலின் ஆகியோருக்கு மன்றம் சார்பில் நன்றி தெரிவிப்பது.

புதிய பஸ் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் ரூ50 லட்சம் மதிப்பில் பழக்கடைகளுக்கான வணிக வளாகம் கட்டுவது. ஆரணி நகராட்சிக்கு சொந்தமான ஆற்காடு பாலாறு தலைமை நீரேற்று நிலையத்தில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ரூ25 லட்சம் மதிப்பில் உள்வடி கலன் அமைத்து குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணி மேற்கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ரூ 2.32 கோடியில் சாலைகள், வடிகால்கள் சீரமைப்பு

Print PDF

தினமணி 31.08.2010

ரூ 2.32 கோடியில் சாலைகள், வடிகால்கள் சீரமைப்பு

தக்கலை, ஆக. 30: பத்மநாபபுரம் நகராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ 2.32 கோடியில் 40 சாலைகள், மற்றும் மழைநீர் வடிகால்கள் சீரமைக்க திங்கள்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அ.ரேவன்கில் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் செல்லமுத்து, பொறியாளர் சனல்குமார், ஆரம்ப சுகாதார ஆய்வாளர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் பெருமாள், துணைத் தலைவர் முகமது சலீம், மற்றும் உறுப்பினர்கள் 20 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன் தலைவர் அ.ரேவன்கில், இயற்கை மற்றும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள சாலைகள் மற்றும் சாலை அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகி பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய அரசு ரூ 2.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி புலியூர்குறிச்சி சந்தை வழி தேசிய நெடுஞ்சாலை முதல் பத்மநாபபுரம் கோட்டை சுவர்வரை கருந்தளம் புதுப்பித்தல், மழைநீர் வடிகால் அமைத்தல்.

குமாரகோவில் வேளிமண்டபம் முதல் நூருல் இஸ்லாம் கல்லூரி வரை கருந்தளம் அமைத்து மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்தல்,

வார்டு எண் 5 அண்ணா காலனி முதல் கோட்டைச்சுவர் கிழக்கு தெற்கு மூலை வரை கான்கிரிட் தளம் அமைத்தல், அரண்மனை சாலை முதல் துப்பரவு பணியாளர் குடியிருப்பு வரை மழைநீர் வடிகால் அமைத்து கருந்தளம் புதுப்பித்தல்,

இது போன்று பல்வேறு வார்டுகளில் சாலைகள் செப்பனிடவும், வடிகால்கள் கட்டவும் மொத்தம் 22 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பழுடைந்தசாலைகள் 18 கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 40 பழுதடைந்த சாலைகள், வடிகால்கள் சீரமைக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உறுப்பினர் முகமதுராபி பேசுகையில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பஸ்பாஸ், ஓய்வூதியம் போன்ற சலுகைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தக்கலை பேருந்து நிலையத்தில் நுழைவு வாயில் இல்லை. எனவே நுழைவுவாயில் கட்டி காமராஜர் பெயர் வைக்கவேண்டும் என்றார் முகமது ராபி.

இதற்கு பதிலளித்து தலைவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் உறுப்பினர்களின் அமர்வு படி ரூ 330 ஆக இருந்ததை ரூ 600 உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் பணி செய்யதான் நாம் வந்துள்ளோம். இதை தீர்மானமாக நிறைவேற்றி அனுப்ப முடியாது. அரசு தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பின்பு கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள 8 புதிய கடைகளுக்கும் மறு ஏலம் நடத்தப்படும் எனறார் தலைவர்.

 

"5.14 கோடியில் சாலைகள் சீரமைப்பு'

Print PDF
தினமணி 31.08.2010

"5.14 கோடியில் சாலைகள் சீரமைப்பு'

ஒசூர் நகரில் 5.14 கோடி நிதியில் சாலைகள் சீரமைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் எஸ்..சத்யா கூறினார்.

நகர்மன்றக் கூட்டத்தில் அவர் பேசியது:

ஒசூர் நகரில் 5.14 கோடியில் போக்குவரத்துக் கழக அலுவலகச் சாலை, ராஜேஸ்வரி நகர் சாலை உள்ளிட்ட 50 சாலைகள் சீரமைக்க நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல், புதிய பஸ் நிலையப் பராமரிக்கும் பணியை மேற்கொள்ள 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொண்டு நிறுவனங்கள் மூலம் பராமரிக்க டெண்டர் விரைவில் விடப்படும்.

மாதம் 1,65,000 பராமரிப்பு செய்து கொள்ள ஆண்டுக்கு 19,80,000 நகராட்சி நிர்வாக இயக்குநரின் அறிவுரைப்படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 


Page 95 of 167