Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

அரியலூரில் ரூ3 கோடியில் சாலை நகராட்சி கூட்டத்தில் தகவல்

Print PDF

னகரன் 31.08.2010

அரியலூரில் ரூ3 கோடியில் சாலை நகராட்சி கூட்டத்தில் தகவல்

அரியலூர், ஆக. 31: அரியலூரில் ரூ3 கோடியில் சாலைப்பணி நடைபெற உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அரியலூர் நகராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் 20 பணிகள் மேற்கொள்வதற்காக சிறப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் துவங்கியதும் பல உறுப்பினர்கள் எழுந்து தங்களை கலந்துஆலோசித்து பணிகள் தேர்வு செய்யப்படவில்லை என்று புகார் கூறினர்.

3வது வார்டு கவுன்சிலர் மணிவண்ணன் பேசுகையில், 3,7,2 ஆகிய வார்டுகளில் சாலைகளை அளக்காததால் பணிகள் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. முழு ஆய்வு செய்ததும் மன்றத்தில் தீர் மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

17வது வார்டு கவுன்சிலர் பாபு பேசுகையில், பல ஆண்டுகளாக கருணாநிதிநகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மண்சாலைகளை தார் சாலை களாக மாற்றகோரிக்கை விடுத்தும் நிறைவேற்ற வில்லை என்றார். பணிகளை தேர்வு செய்த பின் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள் கூறினர். இதற்கு நகராட்சி செயல் அலு வலர் சமயச்சந்திரன் பதில் அளிக்கையில், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் இப்பணிகள் தேர்வுசெய்யப்படுகிறது. அதன்படி

ரூ3கோடியில் 20 கி.மீ. தூரம் சாலை பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி, கோயில், பள்ளி, அரசு அலுவலகங்கள், மார்க்கெட், தொழிற்சாலை, சுற்றுலாத்தலம், பஸ்கள் செல்லும் சாலை

ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு சாலையாகவும், 5 வருடத்திற்கு முன்னர் போடப்பட்ட தார் சாலை அல்லது சிமென்ட் சாலைகளை சீரமைக்கவும் எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. நிபந்தனைகளின்படி தேர்வு செய்யப்படும் சாலைகள் மன்ற ஒப்புதலுக்கு பின் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

நகராட்சித்தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன் பேசுகையில், அனைத்து கவுன்சிலர்களையும் கலந்து ஆலோசித்து முழு அளவில் பணிகள் தேர்வு செய்யப்பட்ட பின் கூட்டம் நாளை (இன்று) நடைபெறும் என்று கூறி கூட்டத்தை ஒத்தி வைத்தார்.

கூட்டம் தொடங்கும் முன் 11வது வார்டு அதிமுக கவுன்சிலர் சிவஞானம் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து கொண்டு தனது வார்டுக்கு அடிப்படை பணிகளை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

5வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரசேகர் தனது வார்டு கருணாநிதி நகர், காமராஜர் நகர் பகுதிகளில் மண் சாலையை தார் சாலையாக்கக்கோரி நகராட்சியின் உள்ளே தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினார்.

2வது வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி பேசுகையில், தற்போதைய சிறப்பு சாலை திட்டத்தின் 20 பணிகளில் காங்கிரஸ் கட்சி 3 கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு ரூ60 லட்சம், பிற வார்டுகளுக்கு ரூ40லட்சத்திலும் பணிகள் ஒதுக்கியுள்ளனர் என்றார். உடனே காங்கிரஸ், திமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, மணிவண்ணன், ராஜா, பாபு, ராமு, பழனிச்சாமி, குணா, சந்திரசேகர், மலர்க்கொடிமனோகரன், ஜெயலட்சுமி ராஜேந்திரன், தவமணிகோவிந்தன், நகராட்சி அலுவலர் குமரன், ஓவர்சீயர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

சாலை சீரமைப்புக்கு ரூ71 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 31.08.2010

சாலை சீரமைப்புக்கு ரூ71 கோடி ஒதுக்கீடு

கரூர், ஆக.31: கரூர் நகராட்சியில் சாலை சீரமைப்பு மற்றும் வடிகால்களை புதுப்பிக்க ரூ71 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படடுள்ளது. 2010&2011ம் ஆண்டு சிறப்பு சாலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நகராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் களை புதுப்பிக்கும் பணிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் வழிகாட்டுதல் படி பணிகள் தேர்வு செய்யப்பட்டன. கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பழுதடை ந்த தார்சாலைகள், சிமென்ட் சாலைகளை புதுப்பிக்கவும், சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால்களை சீர் செய்யவும் நேராய்வு செய்து மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

36 வார்டுகளிலும் தார்சாலை புதுப்பித்தல், சிமென்ட் தளம் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், சிறுபாலம் அமைத்து சிமென்ட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான மதிப்பீடுகள் நகர்மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டது. அனைத்து வார்டுகளுக்கும் ரூ71 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

நகர்மன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டிய பணிகளை அளித்தனர். அனைத்து வார்டு தேவைகளையும் ஒருங்கிணைத்து திட்டப்பணிகள் பற்றி விவரம் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. இயக்குனர் அலுவலகத்தில் இருந்த இதனை பரிசீலித்த பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

 

கும்பகோணத்தில் ரூ10 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி நகராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன் 31.08.2010

கும்பகோணத்தில் ரூ10 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி நகராட்சி கூட்டத்தில் முடிவு

கும்பகோணம், ஆக. 31: கும்பகோணம் நகரில் ரூ10 கோடி செலவில் சாலைகளை புதுப்பிக்க நகர்மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கும்பகோணம் நகராட்சியின் அவரச கூட்டம் தலைவர் தமிழழகன் தலை மையில் நேற்று நடைபெற் றது. கூட்டத்தில் ஆணையர் பூங்கொடி அருமைக்கண், துணைத்தலைவர் தர்மபாலன், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

சிறப்பு சாலைகள் த¤ட்டத்தின் கீழ், கோயில்கள், முக்கிய புராதன சின்னங் கள், பள்ளிகள், தொழிற்கூடங்கள், போக்குவரத்துக் கான முக்கிய சாலைகள் ஆகிய இனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகை யில் பாதாள சாக்கடை, குடி நீர் விநியோகம் குழாய் அமைத்தல், மழை மற்றும் இடர்பாடுகள் ஆகிய இனங்களால் பாதிப்பான கும்பகோணம் நகராட்சி பகுதியில் 50 கிலோ மீட்டர் தூரத்தி ற்கு ரூ10கோடி மதிப்பீட்டில் சாலை புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்வதற்கான கருத் துருவை அனுப்பி வைத்து நகராட்சி இயக்குநரகத் திடமிருந்து நிதி பெறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக உறுப்பினர் கா மேஷ் பேசுகையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் எனது வார்டில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில தெருக்களில் சாலைகளும் சரியில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த பொறியாளர், நடப்பு நிதியா ண்டில் விடுபட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணை ப்பு வழங்கப்படும் என் றார். பாமக உறுப்பினர் பீட் டர் லாரன்ஸ் பேசுகையில், 25 வார்டு பகுதியில் ராதா நகர், கிருஷ்ணப்பா மேலசந்து சாலைகளை இத்திட்டத்தில் சேர்க்கவில்லை என்றார். பொறியாளர் கனகசுப்புரத்தினம் பேசு¬கையில், தாங்கள் குறிப்பிட்ட நகர் நகராட்சி பகுதியில் உள்ளதா என ஆய்வு செய்த பின் இத்திட்டம் இறுதி வடிவம் பெறும்போது சேர்த்துகொள்ளப்படும் என்றார்.

 


Page 97 of 167