Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

பாதாள சாக்கடை பணி நடக்கும் இடங்களில் சாலைகளை சீரமைக்க வேண்டும்

Print PDF

தினமணி 30.08.2010

பாதாள சாக்கடை பணி நடக்கும் இடங்களில் சாலைகளை சீரமைக்க வேண்டும்

கோவை, ஆக.29: பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடக்கும் இடங்களில் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கிழக்கு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டலத் தலைவர் எஸ்.எம்.சாமி தலைமை வகித்தார். துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார்.

இக் கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், பாதாள சாக்கடை நடக்கும் இடங்களில் உள்ள சாலைகளில் குழிகள் தோண்டப்படுகின்றன. பின்னர் அவை சரியாக மூடப்படாததால் அவை குண்டும், குழியுமாக உள்ளன. எனவே, அச் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர். மேலும் குடிநீர் பிரச்னைகளை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஒவ்வொரு வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகளுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.25 கோடி ஒதுக்கவும், ரூ.90 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு தொழில்நுட்ப அனுமதி வழங்கவும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் வெ..உதயக்குமார், பணிக்குழுத் தலைவர் ராமசாமி, கவுன்சிலர்கள் சோபனா செல்வன், கோமதி ராஜன், கிழக்கு மண்டல உதவி ஆணையர் லோகநாதன், உதவிச் செயற்பொறியாளர் ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

பீர்க்கன்காரணை பேரூராட்சியில் தார்சாலை அமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 30.08.2010

பீர்க்கன்காரணை பேரூராட்சியில் தார்சாலை அமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு

தாம்பரம், ஆக.30: பீர்க்கன்காரணை பேரூராட்சி பகுதியில் பழுதடைந்த சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்ற ரூ1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பேரூராட்சி தலைவர் த.ராசேந்திரன் தெரிவித்துள்ளார். பீர்க்கன்காரணை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் பழுதடைந்த 40க்கும் மேற்பட்ட சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்ற ரூ1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு பணி தொடங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சுவாமி விவேகானந்தர் தெரு விரிவு பகுதியில் ரூ11 லட்சத்து 50 ஆயிரத்திலும், ஏரிக்கரை சாலையில்

ரூ10 லட்சத்திலும், அன்னை தெரசா பகுதியில் 1, 2, 3வது தெருக்கள், கிருபானந்தவாரியார் தெரு, காந்தி ரோடு மற்றும் அண்ணா தெரு, தொல்காப்பியர் தெரு, டி.கே.சிதம்பரனார் தெரு மற்றும் லட்சுமிநகர் 2வது குறுக்கு தெரு, இராஜாஜி தெரு, அர்ச்சனா நகர், டி.டி.கே.நகரில் 2, 3வது குறுக்கு தெரு, அமுதம் நகர், சக்தி நகரில் 1, 2, 4, 6, 7, 8வது தெரு உட்பட பல்வேறு தெருக்களில் தலா ரூ4 லட்சம் செலவில் தார்ச்சாலைகள் அமைக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை பேரூராட்சி தலைவர் ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

தலைமை பொறியாளர் தகவல் 7 நகராட்சிகளில் 200 கிமீ சாலை அமைக்கப்படும்

Print PDF

தினகரன் 27.08.2010

தலைமை பொறியாளர் தகவல் 7 நகராட்சிகளில் 200 கிமீ சாலை அமைக்கப்படும்

அருப்புக்கோட்டை, ஆக.27: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு நகராட்சிகளில் சிறப்பு சாலை திட்டத்தில் 200 கிமீ., சாலைகள் அமைக்கப்படும் என தமிழக நகராட்சிகளின் தலைமை பொறியாளர் ரகுநாதன் கூறினார்.

அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் டெலிபோன் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, விவிஆர் காலனி உள்ளிட்ட பகுதிகளை தமிழக நகராட்சிகளின் தலைமை பொறியாளர் ரகுநாதன் நேற்று ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், ‘சிறப்பு சாலைத்திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் 25 கிமீ., திருவில்லிபுத்தூர் 25 கிமீ., திருத்தங்கல்லில் 20 கிமீ., ராஜபாளையத்தில் 40 கிமீ., விருதுநகரில் 40 கிமீ., சாத்தூரில் 20 கிமீ., சிவகாசியில் 30 கிமீ., உள்பட ஏழு நகராட்சிகளில் மொத்தம் 200 கிமீ., சாலை அமைக்கப்பட உள்ளது.

பழைய ரோடுகளை புதுப்பித்தல், பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை புதிதாக அமைத்தல், குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள், நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் உள்பட சாலைகளை புதிதாக அமைக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

ஆய்வின்போது மண்டல நிர்வாக இயக்குனர் மோகன், மண்டல பொறியாளர் கனகராஜ், நகராட்சி பொறியாளர் ரவீந்திரன் உடன் இருந்தனர்.

 


Page 99 of 167