Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கம்பம் ரோடுகளை பராமரிக்க ரூ. 1.25 கோடி மதிப்பீடு

Print PDF

தினமலர் 25.08.2010

கம்பம் ரோடுகளை பராமரிக்க ரூ. 1.25 கோடி மதிப்பீடு

கம்பம் : கம்பம் நகராட்சி ரோடுகள் ஒரு கோடியே 25 லட்ச மதிப்பீட்டில் பராமரிப்பு மேற்கொள்ள நகராட்சி முடிவு செய்துள்ளது. கம்பம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரோட்டை சிமென்ட் ரோடாக அமைக்க நகராட்சி திட்டமிட்டது. இந்நிலையில் தற்போது இதை தார் ரோடாக அமைக்க மதிப்பீடு தயாரித்துள்ளது. வி.எம். சாவடி தெரு 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ராமையாகவுடர் தெரு, ஆலமரத்து தெரு, நந்தகோபாலன் கோயில் தெருக்கள் 30 லட்சம் ரூபாய் செலவிலும், மணிநகரம் முதல் குறுக்குத் தெரு ஐந்து லட்சம் ரூபாய் செலவிலும், இரண்டாவது குறுக்குத் தெரு ஆறுலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், காளவாசள் தெற்கு 3 மற்றும் 4 வது தெருக்களில் தார்சாலை ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.

மேலும் பகுதி 2 திட்டத்தின் கீழ் அனுமதித்து வரப்பட்ட பத்து லட்சம் ரூபாய்க்கு சி.எம்.எஸ். நகர் முதல் தெருவை மண் ரோட்டை, தார் ரோடாக மாற்ற மூன்று லட்சத்து 20 ஆயிரமும், கோம்பை ரோடு முதல் தெருவில் மண் ரோட்டை சிமிண்ட் ரோடாக ஐந்து லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிலும், சுக்காங்கல்பட்டி தெருவில் தார் ரோடு அமைக்க மூன்று லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் நகராட்சி மதிப்பீடுகள் தயாரித்துள்ளது.

 

தமிழகத்தில் 83 சாலைகளை அகலப்படுத்த ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 24.08.2010

தமிழகத்தில் 83 சாலைகளை அகலப்படுத்த ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

நெல்லை, ஆக. 24: தமிழகத் தில் 83 சாலைகளை அகலப்படுத்தி, உறுதிப்படுத்த ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் தமிழகத்தில் 150 சாலைப்பணிகளை நபார்டு வங்கி கடனுதவியுடன் ரூ.250 கோடியில் செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் கடந்த 2009ம் ஆண்டு 56 மாவட்ட இதர சாலைகளை ரூ.113 கோடியில் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. மீதம் உள்ள 94 பணிகளில் 11 பணிகளை நபார்டு வங்கி நீக்கம் செய்து ரூ.136 கோடியே 80 லட்சம் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் 44 மாவட்ட இதர சாலைகள், 39 மாவட்ட முக் கிய சாலைகளை அகலப்படுத்தி உறுதிப்படுத்தி மேம் பாடு செய்ய அனுமதி வழங்குமாறு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அரசு இதை பரிசீலித்து 83 சாலைப்பணிகளுக்கு ஒப்பு தல் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியில் 80 சதவீத தொகையான ரூ.109 கோடியே 45 லட்சம் நபார்டு வங்கி கடனாகவும், 20 சதவீத தொகையான ரூ.27 கோடியே 36 லட்சம் தமிழக அரசின் பங்காகவும் இருக் கும்.

இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் மாவட்ட இதர சாலைகள் பட்டியலில் உள்ள நாங்கு நேரி தொகுதி பத்மநேரி& சிங்கிகுளம் சாலை ரூ.3 கோடியே 69 லட்சத்து 80 ஆயிரம் செலவிலும், கடையநல்லூர் தொகுதி சங்கனாப்பேரி&மீனாட்சிபுரம் சாலை ரூ.1 கோடியே 77 லட்சத்து 88 ஆயிரம் செல விலும், பாளை தொகுதி தருவை&சிங்கிகுளம் சாலை ரூ.2 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரம் செலவிலும், கடையநல்லூர் தொகுதி சுந்தரேசபுரம்&மீனாட்சிபுரம் சாலை ரூ.1 கோடியே 3 லட் சத்து 88 ஆயிரம் செலவிலும், ராதாபுரம் தொகுதி ராதா புரம்&இருக்கன்துறை சாலை ரூ.2 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரம் செலவிலும் மேம்படுத்தப்பட உள்ளதாக அரசு செயலாளர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

 

ரூ.11.65 கோடியில் சாலை மறுசீரமைப்பு

Print PDF

தினமலர் 24.08.2010

ரூ.11.65 கோடியில் சாலை மறுசீரமைப்பு

நாமக்கல்: "சிறப்பு சாலை திட்டம் 2010-11ன் கீழ், 39.90 கி.மீ., சாலைகளை 11.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு வழிகாட்டுதல்படி மறுசீரமைப்பு செய்வது' என, நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் செல்வராஜ் தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) பாலசந்திரன், துணைத்தலைவர் பூபதி, சுகாதார ஆய்வாளர் முகமது மூசா, நகர அமைப்பு அலுவலர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் விபரம்: பாண்டியன் (தி.மு..,): நகரில் குடிநீர் பிரச்னை கடுமையாக உள்ளது. ஒரு வார்டில் பத்து நாட்களுக்கு ஒருமுறையும், மற்றொரு வார்டில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து உதவி பொறியாளரிடம் கேட்டால், "எனக்கு தெரியாது' என மழுப்புகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கையை கூட அதிகாரிகள் தட்டிக்கழிக்கின்றனர். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறுமா? நிறைவேறாதா? என்ற சந்தேகம் கவுன்சிலர்களுக்கே எழுந்துள்ளது. இப்பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்தி, கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்.

செல்வராஜ் (சேர்மன்): புதிய குடிநீர் திட்டம் முடிவடைந்தால், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு ஆகும். விரைவில் முடிப்பதற்காக அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இம்ரான் (தி.மு..,): எனது வார்டில் சாக்கடை சுத்தம் செய்யப்படுவதில்லை. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சேர்மன்: ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பணிகள் முடிக்க முடியாமல் உள்ளது. ஒவ்வொரு பிரச்னையாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து கூட்டத்தில், சிறப்பு சாலை திட்டம் 2010-11ன் கீழ் 39.90 கி.மீ., சாலைகளை 11.65 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்ய மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. மத்திய அரசின் நகர்ப்புற வறுமை நீக்குதல் அமைச்சகத்தின் மூலம் சொர்ண ஜெயந்தி சகாரி யோஸ்கர் யோஜ்னா திட்டத்தின் கீழ், 2010-11ம் நிதி ஆண்டில் பெறப்பட்ட மானிய தொகை 12.62 லட்சம் ரூபாயை செலவு செய்ய மன்ற கூட்டத்தில் அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 


Page 101 of 167