Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

நான்குநேரி தொகுதியில் சாலைகளை மேம்படுத்த 5கோடி ரூபாய் ஒதுக்கீடு : எம்.எல்.ஏ வசந்த குமார் தகவல்

Print PDF

தினமலர் 24.08.2010

நான்குநேரி தொகுதியில் சாலைகளை மேம்படுத்த 5கோடி ரூபாய் ஒதுக்கீடு : எம்.எல்.ஏ வசந்த குமார் தகவல்

களக்காடு : நான்குநேரி சட்டசபை தொகுதியில் நடப்பு ஆண்டு 5கோடி ரூபாய் செலவில் சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளது என எம்.எல்.. வசந்தகுமார் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்குநேரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாவடியிலிருந்து பத்மனேரி வரையுள்ள 6 கி.மீ ரோட்டை இருவழித் தடமாக மாற்ற 1.20 கோடி ரூபாயும், நான்குநேரி- ஏர்வாடி ரோட்டை மேம்படுத்த 42லட்சமும், மருதகுளம்- மூலக்கரைப்பட்டி சாலையை மேம்படுத்த 33லட்சமும், கரந்தாநேரி- சுப்பிரமணியபுரம் சாலையை மேம்படுத்த 24லட்சமும், விஜய நாராயணம்- இட்ட மொழி வரையுள்ள 2 கி.மீ தூர சாலையை மேம்படுத்த 16லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர முனைஞ்சிப்பட்டி-சேரகுளம் உள்ள 3கி.மீ சாலையை மேம்பாடு செய்ய 35லட்ச ரூபாயும், இட்டமொழி- ஆலங்கிணறு சாலை செப்பனிட 24லட்சமும், மலையன்குளம் சாலையை மேம்படுத்த 11லட்சமும், களக்காடு- சிதம்பராபுரம், பெரும்பனை- நன்னிகுளம் சாலைகளை மேம்படுத்த தலா 14லட்சமும், ஏர்வாடி- திருக்குறுங்குடி சாலையை மேம்படுத்த 15லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரெட்டியார்பட்டி- விஜயநாராயணம் சாலையை மேம்படுத்த 20லட்ச ரூபாயும், கருங்கடல்- முனைஞ்சிப்பட்டி சாலையை மேம்படுத்த 30லட்சமும், ஏர்வாடி- மாவடி சாலையை மேம்படுத்த 24லட்சமும், மூன்றடைப்பு- புதுக்குறிச்சி சாலையை மேம்படுத்த 48லட்சமும், சிங்கிகுளம்- பானான்குளம் சாலையை மேம்படுத்த 20லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை நான்குநேரி எம்.எல்.. வசந்த குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

நடைபாதை பணிக்கு பூமி பூஜை

Print PDF

தினமலர் 24.08.2010

நடைபாதை பணிக்கு பூமி பூஜை

விருத்தாசலம் : விருத்தாசலம் கடை வீதி பகுதியில் நடை பாதை அமைக்கும் பணிக் கான பூமி பூஜை விழா நடந்தது. விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், நகரை அழகுபடுத்தும் வகையிலும் கடைவீதி சிக்னலில் இருந்து பழைய தபால் நிலையம் வரை சாலையின் இருபுறங்களிலும், விருத்தகிரீஸ்வரர் கோவிலின் முன்புறம் உள்ள சாலையின் ஒரு புறத்திலும் வடிகாலுடன் கூடிய நடை பாதை அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதற்காக நெடுஞ் சாலைத் துறை சார்பில் சாலை மேம்பாட்டு திட் டத்தின் கீழ் 25 லட்சம் ரூபாயும், நகராட்சி சார் பில் 13 லட்சம் என 38 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டது. இந்த பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் தில்லைகோவிந் தன், கமிஷனர் திருவண் ணாமலை முன்னிலை வகித்தனர். தி.மு.., நகர செயலாளர் தண்டபாணி, கவுன்சிலர்கள் அரங்கபாலகிருஷ்ணன், ராமு, கர்ணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

 

ரூ. 2.66 கோடியில் சாலைகளை மேம்படுத்தத் திட்டம்

Print PDF

தினமணி 21.08.2010

ரூ. 2.66 கோடியில் சாலைகளை மேம்படுத்தத் திட்டம்


திருப்பூர், ஆக.20: சிறப்பு சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ 2.66 கோடி மதிப்பில் 15வேலம்பாளையம் நகராட்சி பகுதியிலுள்ள சாலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, கூடுதலாக 5 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

18 லட்சம் கொள்ளளவு

நீர் தேக்கத் தொட்டிகள்

திருப்பூர் அடுத்த 15வேலம்பாளையம் நகராட்சிக்கு முதலாவது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 2 லட்சம் லிட்டரும், 2-வது கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் 18 லட்சம் லிட்டரும், 3-வது கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் 31 லட்சம் லிட்டருமாக நாளொன்றுக்கு மொத்தம் 51 லட்சம் லிட்டர் குடிநீர் நகராட்சி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

குடிநீரை விநியோகம் செய்ய அனுப்பர்பாளையத்தில் 3.50 லட்சம் லிட்டர் கொள்ள ளவில் மேல்நிலைத் தொட்டி, வேலம்பாளையத்தில் 4.50 லட்சம் லிட்டரில் 2 மேல்நி லைத் தொட்டிகள், அதேபகுதியில் 4.50 லட்சம் லிட்டரில் 2 கீழ்நிலைத் தொட்டிகளும், சாமுண்டிபுரத்தில் 1.50 லட்சம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, பெரியார் காலனியில் 2 லட்சம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, மூகாம்பிகை காலனியில் ஒரு லட்சம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, ஈபி காலனியில் ஒரு லட்சம் லிட்டர் கீழ்நிலைத் தொட்டி என நகராட்சிப் பகுதியில் 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளன.

நீர்த் தேக்கத் தொட்டிகள் தேவை

பெருகிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை அடுத்து தற்போது புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் மூலம் கூடுதலாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் பெற நிர்வாக அனுமதிக்காக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே கிடைக்கும் 51 லட்சம் லிட்டர் குடிநீருடன், பெற உள்ள 20 லட்சம் குடிநீரையும் சேர்த்து நாளொன்றுக்கு 71 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து வைக்க தற்போதுள்ள நீர்தேக்கத் தொட்டிகள் போதுமானதாக இல்லை.

17-வது வார்டில்

மேல்நிலை தொட்டி

இதையடுத்து, கூடுதலாக 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை 17-வது வார்டு சோளிபாளையத்தில் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான தீர்மானம், நகர்மன்றத் தலைவர் எஸ்.பி.மணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றம்

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும் நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், நகராட்சிப் பகுதி முழுவதும் 2010-11ம் ஆண்டு சிறப்புச் சாலைகள் திட்டத்தின்கீழ் | 2.66 கோடி மதிப்பில் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் மேம்படுத்துவதற்கான தீர்மானத்துக்கும் நகர்மன்றம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, இரு தீர்மானங்களும் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பப்பட்டு நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். நகராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் த.சரோஜா, செயல் அலுவலர் குற்றாலிங்கம் பங்கேற்றனர்.

 


Page 102 of 167