Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

குமாரபாளையத்தில் ரூ1.78 கோடியில் சாலை புதுப்பிப்பு

Print PDF

தினகரன் 20.08.2010

குமாரபாளையத்தில் ரூ1.78 கோடியில் சாலை புதுப்பிப்பு

பள்ளிபாளையம், ஆக.20: குமாரபாளையம் நகர்மன்ற அவசர கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் மாணிக்கவாசகம், பொறியாளர் ரவி, துணைத்தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி அலுவலக புதிய கட்டிடம் நாளை திறப்பு குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு ரூ42 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு குளிரூட்டப்பட்ட மன்ற கூடம் அமைக்கப்பட்டு உறுப்பினர்கள் அமர்ந்து பேச ஷோபா, டேபிள், மைக் பொருத்தப்பட்டுள்ளது. கணினி அறை, தலைவர் அறை உள்ளிட்டவைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த புதிய அலுவலக கட்டிடத்திற்கு நாளை (சனி) திறப்பு விழா நடத்துவது, இதில் பங்கேற்க மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வனை அழைப்பது என முடிவு செய்யப் பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் பள்ளிபாளையம், ஆக.20: குமாரபாளையம் நகர்மன்ற அவசர கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் மாணிக்கவாசகம், பொறியாளர் ரவி, துணைத்தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, தமிழக அரசின் சிறப்பு சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குமாரபாளையம் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை மேம்பாட்டு பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் முடிவில், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரின் கடிதத்தின்படி குமாரபாளையம் நகரில் 40 இடங்களில் சாலைகளை புதுப்பிப்பது, 9920.10 மீட்டர் தூரம் சாலை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இப்பணிக்கு

ரூ1 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, அத்தொகையை ஒதுக்கி தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் முடிவில், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரின் கடிதத்தின்படி குமாரபாளையம் நகரில் 40 இடங்களில் சாலைகளை புதுப்பிப்பது, 9920.10 மீட்டர் தூரம் சாலை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இப்பணிக்கு ரூ 1 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, அத்தொகையை ஒதுக்கி தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Last Updated on Friday, 20 August 2010 08:36
 

நகராட்சி பகுதியில் உள்ள 20 சாலைகள் ரூ4.99 கோடியில் சீரமைப்பு பொலிவு பெறுகிறது ஊட்டி

Print PDF

தினகரன் 20.08.2010

நகராட்சி பகுதியில் உள்ள 20 சாலைகள் ரூ4.99 கோடியில் சீரமைப்பு பொலிவு பெறுகிறது ஊட்டி

ஊட்டி, ஆக. 20: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட செயின்ட் தாமஸ் சர்ச் & பாட்னா அவுஸ் சாலை உட்பட 20 முக்கிய சாலைகளை சிறப்பு சாலை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ4 கோடியே 99 லட்சத்தில் சீரமைக்கப்படவுள்ளது.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளான எட்டினஸ் சாலை, கமிர்சியல் சாலை, அப்பர் பஜார் மற்றும் லோவர் பஜார் சாலை உள்ளிட்டவை கடந்த 3 ஆண்டுக்கு முன் ரூ12 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. ஆனால் பிற சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக செயின்ட் தாமஸ் & பாட்னா அவுஸ் சாலை, அணிக்கொரை & லோயர்வுட் அவுஸ் மற்றும் ஹிக்கின்ஸ் சாலை உட்பட பல்வேறு சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதன்படி ஊட்டி நகராட்சியின் அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு சாலைகள் சீரமைக்கும் திட்டம் 2010&11ன் கீழ் ஊட்டி நகராட்சியில் 7 முக்கிய சாலைகள் சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி செயின்ட் தாமஸ் சர்ச், லோயர்வுட் அவுஸ் மற்றும் ஹிக்கின்ஸ் சாலை ரூ48 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 1.76 கி.மீ., தூரம் சீரமைக்கப்படவுள்ளது. அணிக்கொரை சாலை, லோயர்வுட் அவுஸ் சாலை, கீழ்கோடப்பமந்து சாலை, மெயின் பஜார் சாலை மற்றும் அப்பர் பஜார் சாலை ஆகியவைகள் ரூ69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 3.59 சி.மீ., தூரம் சாலை சீரமைக்கப்படுகிறது.

பழைய அக்ரஹாரம் சாலை, ஆட்லி சாலை, கீழ் கோடப்மந்து சாலை, மெயின் பஜார் சாலை, மற்றும் அப்பர் பஜார் சாலை ஆகியவை ரூ69 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 3.20 கி.மீ., தூரம் சீரமைக்கப்படுகிறது. ரிட்சிங்காலனி பைபாஸ் சாலை, கிராண்டப் சாலை, மற்றும் டைகர் ஹில் ஆகிய சாலைகள் ரூ96 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 5.19 கி.மீ., சாலையும், ரெட்கிராஸ் சாலை, தீட்டுக்கல் சாலை மற்றும் ஆர்ம்பி அவுஸ் சாலை ரூ75 லட்சம் மதிப்பில் 3.43 கி.மீ., சாலை சீரமைக்கப்படவுள்ளது. ஆர்.கே.புரம் சாலை மற்றும் கிளன்ராக் சாலை ரூ96 லட்சத்தில் 3.7 கி.மீ., தூரம் சாலையும், விஜயநகரம் காலனி சாலை மற்றும் எல்க்ஹில் சாலை ஆகியவை ரூ44 லட்சத்து 20 ஆயிரம் செலவில் 2.36 கி.மீ., தூரம் சாலை சீரமைக்கப்படவுள்ளது.

தற்போது இச்சாலைகள் சீரமைக்கப்படும் நிலையில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான சாலைகள் பொலிவு பெறும். இச்சாலைகள் வரும் சீசனுக்குள் இச்சாலைகள் சீரமைக்கப்பட்டுவிட்டால், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சென்று வர ஏதுவாக இருக்கும். தற்போது இச்சாலைகளுக்கான டெண்டர் விடும் பணியும் துவங்கியுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு சாலைகள் தேர்தலுக்குள் சீரமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Friday, 20 August 2010 08:42
 

பொள்ளாச்சியில் ரூ.6.59 கோடியில் சாலை மேம்பாடு

Print PDF

தினமலர் 20.08.2010

பொள்ளாச்சியில் ரூ.6.59 கோடியில் சாலை மேம்பாடு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் 6.59 கோடி ரூபாயில் சாலைகளை மேம்படுத்த மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.

மீனாட்சி (காங்.,): கோட்டாம்பட்டி ராஜூ நகரில் குடிநீர் சரிவர வருவதில்லை. மக்களுக்கு நகராட்சி லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.

வரதராஜன் (கமிஷனர்): குடிநீர் பற்றாக்குறையாகவோ, கிடைக்காவிட்டாலோ தகவல் கொடுத் தால் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்.

மீனாட்சி : அண்ணாநகர் அங்கன்வாடி பள்ளிக்கு இதுவரையிலும் நகராட்சி லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. சமீபகாலமாக அங்கன் வாடி பள்ளிக்கு குடிநீர் வழங்குவதில்லை. வழக்கம் போல் லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.

கமிஷனர்: பள்ளி ஆசிரியர்கள் மூலம் நகராட் சிக்கு விண்ணப்பம் கொடுத்தால் நிரந்தரமாக லாரி தண்ணீர் வழங்கப்படும். அல்லது, நகராட்சிக்கு வைப்பு தொகை செலுத்தினால் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும்.

ஜேம்ஸ்ராஜா (.தி.மு..,): பொள்ளாச்சி நகராட்சியில் எல்லா ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் சுரங்க நடைபாதை கட்டும் பணிகள் தாமதமாக நடப்பதால் ராஜாமில் ரோடு சேதமடைந்து குடிநீர் குழாய் அடிக்கடி உடைகிறது. சுரங்க நடைபாதை அமைக்கும் பணியை வேகப்படுத்தி முடிக்க வேண்டும்.

தலைவர்: சுரங்க நடைபாதை அமைக்கும் பணியில் சென்ட்ரிங் அமைத்து, கான்கிரீட் போடப் பட்டுள்ளது. கான்கிரீட் உறுதியடைந்ததும் ரோடு போடப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்படும். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 12 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டத்தில், சாலை மேம்பாட்டு திட்டம் பற்றி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

புதிய திட்டசாலை வடபகுதி, தென்பகுதியை 40 லட்சம் ரூபாயில் திடப்படுத்தி புதுப்பித்தல், நேதாஜி ரோடு - குமரன்நகர் பிரதான சாலையை 40 லட்சம் ரூபாயில் புதுப்பித்து தார் தளம் அமைத்தல் உள்பட மொத்தம் 21 பகுதிகளில் சாலை மேம்பாடு செய்ய 6.59 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கவுன்சில் அங்கீகாரத்துடன் அரசுக்கு அனுப்பி, சாலை மேம்பாடு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் துவங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 104 of 167