Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

ரயில்வே மேம்பால பணிக்காக; நகராட்சி ஆர்ச் இடிக்க கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர் 19.08.2010

ரயில்வே மேம்பால பணிக்காக; நகராட்சி ஆர்ச் இடிக்க கலெக்டர் உத்தரவு

தென்காசி: தென்காசியில் ரயில்வே மேம்பால பணிக்காக நகராட்சி நகராட்சி ஆர்ச் கலெக்டர் உத்தரவுபடி இன்று(19ம் தேதி) இடிக்கப்படுகிறது. தென்காசி ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக ரோட்டின் இருபுறமும் இடிபடும் கட்டடங்கள் குறித்து சர்வே செய்யப்பட்டு அடையாள குறியீடு இடப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே ரோட்டில் உள்ள நகராட்சி ஆர்ச் இடிக்கப்படும். இதற்கான தீர்மானம் நகராட்சி கூட்டத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஜெயராமன் நேற்று மாலையில் தென்காசிக்கு வந்து ரயில்வே மேம்பால பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேம்பாலத்திற்காக இடிபடும் நகராட்சி ஆர்ச், நகராட்சி கட்டடண கழிப்பிடம், அரசு அலுவலக கட்டடங்கள், தனியார் கட்டடங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். மேம்பாலம் கட்டுவதற்கு வசதியாக நகராட்சி ஆர்ச் மற்றும் நகராட்சி கட்டட கழிப்பிடத்தை உடனடியாக இடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இப்பணி இன்று (19ம் தேதி) நடக்கிறது. மேலும் இடிபடும் கட்டடங்களின் மதிப்பு குறித்த அறிக்கையை வரும் 23ம் தேதிக்குள் வழங்கும்படியும், இடிபடும் கட்டடங்களில் செயல்படும் அரசு அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தென்காசி ரயில்வே ரோட்டில் உள்ள ஆர்ச் ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1911ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி அப்போதைய ஐந்தாம் ஜார்ஜ் மேரி அம்மா என்பவரால் திறக்கப்பட்டது. 99 வயதுடைய ஆர்ச் நூற்றாண்டை காண்பதற்கு முன்னர் இன்றுடன் தன் ஆயுளை முடித்துக் கொள்கிறது.

Last Updated on Thursday, 19 August 2010 08:37
 

ரூ.50 லட்சத்தில்; சாலை சீரமைப்பு; வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்க முடிவு

Print PDF

தினமலர் 19.08.2010

ரூ.50 லட்சத்தில்; சாலை சீரமைப்பு; வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்க முடிவு

திருநெல்வேலி: நெல்லை நயினார்குளம் மார்க்கெட் சாலை 50 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி நயினார்குளம் மார்க்கெட் சாலை நெடுஞ்சாலைத் துறையினரால் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த சாலையில் நெல்லை காய்கறி சுங்க மொத்த விற்பனை அங்காடி, மிளகாய் வற்றல் மண்டி, பெரிய வாகனங்களை பராமரிப்பு செய்யும் பணிமனைகளும் உள்ளது. இந்த சாலை வழியாக மதுரை ரோட்டில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் கன ரக வாகனங்களும் செல்கிறது. தற்போது நயினார்குளம் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த சாலையை 50 லட்சம் செலவில் பராமரித்து இரு புறமும் அகலப்படுத்தி கன ரக வாகனங்கள் செல்லும் வகையில் சாலையின் மத்தியில் வெள்ளைக் கோடுகள், பிரதிபலிப்பான்கள் அமைக்கவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சாலையை மேம்படுத்தி சாலையின் இருபுறமும் சுங்க சாவடிகள் அமைத்த சாலைகளை பயன்படுத்தும் வாகனத்திற்கு சுங்க கட்டணமாக கன ரக வாகனங்களுக்கு தலா 150 ரூபாயும், இலகு ரக வாகனங்களுக்கு தலா 100 ரூபாயும் வசூல் செய்து இத்தொகையின் மூலம் சாலையை சிறப்பான முறையில் பராமரிக்க மாநகராட்சி மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பசுமை மாநகராட்சியாக மாறுகிறது நெல்லை; நிதி தொடங்க விரைவில் புதிய திட்டம்

திருநெல்வேலி: பசுமை மாநகராட்சியாக நெல்லையை மாற்ற விரைவில் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நெல்லை மாநகராட்சியை பசுமை மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் புதியதாக உருவாக்கப்படும் மனை பிரிவுக்கு 1 மனைக்கு 2 மரக் கன்றுகள் வீதமும் மற்றும் பொது இடங்களை சுற்றி 15 அடி இடைவெளியில் ஒரு மரக் கன்று வீதமும் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வேலி அமைத்து முதல் மூன்று மாதங்கள் அந்த மனை பிரிவு உருவாக்கிய உரிமையாளரே பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மூலம் இதனை பாதுகாக்க ஒரு ஆண்டிற்கு 50 மரக்கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 35 ஆயிரம் ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இந்த மரக்கன்றுகளை கட்டமைப்பு வசதி உள்ள இடங்களில் சொட்டு நீர் பாசனம் மூலமும், மற்ற இடங்களில் சுய உதவி குழுக்கள் மூலமும் மாநகராட்சி பராமரிக்கும். இதனை போலவே 1,500 சதுர அடிக்கு மேல் கோரப்படும் கட்டட அனுமதிக்கு குடியிருப்புக்கு 2 மரக்கன்றுகள் வீதம் ஒரு முறை கட்டணமாக 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வேலி அமைக்கும் செலவினம் நிர்ணயம் செய்யப்பட்டு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். இந்த தொகையை மாநகராட்சியில் பசுமை நிதி என்ற தலைப்பில் புதிய கணக்கு தொடங்கி அதில் இருந்து மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிக்கும் பணிக்கு செலவிடவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Last Updated on Thursday, 19 August 2010 08:37
 

ஒரு மாதத்தில் காமராஜ் ரோட்டில் சாலை விரிவாக்க பணி : நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் "உறுதி'

Print PDF

தினமலர் 19.08.2010

ஒரு மாதத்தில் காமராஜ் ரோட்டில் சாலை விரிவாக்க பணி : நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் "உறுதி'

திருப்பூர் : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காமராஜ் ரோட்டில் இருந்த மாநகராட்சி கடைகள் இடிக்கப்பட்டு ஐந்து மாதங்களாகி விட்டன. மின் கம்பங்களை இடம் மாற்றி அமைப்பதும், சாலையை விரிவாக்கம் செய்யும் பணியும் கிடப்பில் போடப் பட்டுள்ளன. இதுதொடர்பாக விசாரித்த போது, "காமராஜ் ரோட்டில் சாலை விரிவாக்க பணி இன்னும் ஒரு மாதத்தில் துவங்கும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் "நம்பிக்கை'யுடன் தெரிவித்தனர்.

திருப்பூர் காமராஜ் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பஸ்கள் வெளியே வரும் பகுதியில் இருந்து, விநாயகர் கோவில் வரை, மாநகராட்சிக்கு சொந்தமாக 33 கடைகள் இருந்தன. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அவ்விடத்தில், மாநகராட்சி நிர்வாகம் கடைகள் கட்டி, வருவாய் ஈட்டி வந்தது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, ரோட்டோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அகற்றியது.

அப்போது, ரோட்டை அகலப் படுத்தவும் முடிவு செய்தது. இதற்காக, மாநகராட்சி வசமிருந்த 33 கடைகளை அகற்றிக் கொடுக்க, வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடந்த மார்ச் 14ம் தேதி, அக்கடைகள் இடிக்கப்பட்டன.

ஐந்து மாதங்களாகியும், காமராஜ் ரோடு அகலப்படுத்தும் பணி இன்னும் துவங்க வில்லை. ரோட்டுக்கு நடுவில் மின் கம் பங்கள் இருப்பதால், போக்குவரத்து நெரிச லின்றி வாகனங்கள் செல்ல முடியாத நிலையே நீடிக்கிறது. தற்போது, பிளாட்பார வியாபாரி களின் ஆதிக்கம் ஆரம்பித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, வேறு இடத்தில் வைக்க, மின் வாரியத்துக்கு, நெடுஞ்சாலைத்துறை சார் பில் இரண்டு லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டு தொகை வழங்க வேண்டி யுள்ளது. இதற்கான ஒப்புதல் கேட்டு, அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அரசு ஒப்புதல் அளித்த பின்பே, கடைகள் இடிக்கப்பட்ட பகுதியில் உள்ள மின்கம்பங்கள் அகற்றப்பட உள்ளன.

மேலும், மாநகராட்சி வசமிருந்த பகுதியை நெடுஞ்சாலைத்துறை எடுத்துக் கொள்ளவும், அங்கு சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ளவும் அனுமதி கேட்டும் அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இதற்கும் அரசின் ஒப்புதல் வந்த பின்பே, டெண்டர் அறிவித்து சாலை விரிவாக்க பணி மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "காமராஜ் ரோட்டில், மாநகராட்சி கடைகள் இடிக்கப்பட்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை அகற்ற நிதி ஒதுக்கீடு செய்ய, அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் கிடைக்குமென எதிர்பார்க்கிறோம்.

வந்ததும், மின்வாரியத்துக்கான நிதி செலுத்தப்பட்டு, மின் கம்பங்கள் ரோட்டோர பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படும். சாலை விரிவாக்க பணி குறித்து அரசின் ஒப்புதலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது; ஒரு மாதத்துக்குள் அரசின் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கான அனுமதி கிடைத்ததும், முறைப்படி டெண்டர் அறிவித்து சாலை விரிவாக்க பணி துவங்கும்,' என்றனர்.

Last Updated on Thursday, 19 August 2010 08:37
 


Page 106 of 167