Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Road Development

கூட்ட நெரிசலை சமாளிக்க அயனாவரம் சாலை 4 வழிப்பாதையாகிறது: இந்த மாத இறுதிக்குள் திறப்பு

Print PDF

மாலை மலர் 16.08.2010

கூட்ட நெரிசலை சமாளிக்க அயனாவரம் சாலை 4 வழிப்பாதையாகிறது: இந்த மாத இறுதிக்குள் திறப்பு

சென்னை, ஆக. 16- அயனாவரம் சாலை எப்போதும் வாகன நெரிசலில் சிக்கி திணறுகிறது. இந்த நெரிசலை சமாளிக்க அயனாவரம் உட்புற சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி முடிவு செய்தது. அயனாவரம், மேடவாக்கம் டேங்க் ரோட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டை இணைக்கும் இந்த சாலை 3 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.

15 முதல் 20 அடி அகலம் கொண்ட இந்த சாலை 50 அடியாக விரிவுபடுத்தப்பட்டு 4 வழி சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.

இந்த சாலை விரிவாக்கத்துக்காக மனநல ஆஸ்பத்திரி மற்றும் குடிநீர் வாரியத்தின் 50 கிரவுண்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக குடிநீர் வாரியத்துக்கு 55.24 லட்சமும், பொதுப் பணித்துறைக்கு 72.39 லட்சமும் மாநகராட்சி வழங்கி உள்ளது.

இதுபற்றி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

அயனாவரம் சாலை மற்றும் ராஜராஜன் சாலை சுமார் ரூ.3 கோடி செலவில் 4 வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இடிபாடுகள் அகற்றப்பட்டு மண் நிரப்பி சமப்படுத்தி சாலை போடப்படுகிறது.

மழைநீர் ஓடை கட்ட 1.73 கோடியும், சாலை விரிவாக்கத்துக்கு 1.20 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து திறக்கப்படும். இந்த சாலை விரிவாக்கத்தால் அயனாவரம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

 

ரூ.20 லட்சத்தில் புதிய சாலைகள்: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி 16.08.2010

ரூ.20 லட்சத்தில் புதிய சாலைகள்: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

திருக்காட்டுப்பள்ளி,​​ ஆக.​ 15: ​ திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

​ ​ ​ திருக்காட்டுப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பேரூராட்சிக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

​ ​ ​ கூட்டத்துக்கு பேரூராட்சிக் குழுத் தலைவர் கோகிலா சிங்காரவேலு தலைமை வகித்தார்.​ செயல் அலுவலர் என்.​ கலைச்செல்வன்,​​ தலைமைக் கணக்கர்கள் த.​ குணசேகரன்,​​ என்.​ குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சித் தலைவர் பேசியது:

​ ​ ​ பேரூராட்சிக்குள்பட்ட அலமேலுபுரம்,​​ பழமார்நேரி,​​ அப்பர்சாமி மண்டபம்,​​ ராயர் அக்ரஹாரம்,​​ சேதுரார் காலணி,​​ குடமுருட்டி லயன்கரை தெரு சாலைகள் உள்ளிட்ட 16 இடங்களில் பேரூராட்சி சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.​ 20 லட்சத்தில் சுமார் 7 கி.மீ.​ தொலைவுக்கு புதிய தார்,​​ சிமென்ட் சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

​ ​ ஒன்பத்துவேலி,​​ நடுப்படுகை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கு,​​ பயன்படுத்தப்பட்டு வரும் 5 குதிரைத்திறன் மின் மோட்டாருக்குப் பதிலாக 10 குதிரைத் திறன் கொண்ட 2 மின் மோட்டார்கள் வாங்கப்படும்.

​ ​ ​ விஷ்ணம்பேட்டை-​ அறந்தாங்கி கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலமாக,​​ குடிநீர் விநியோகக் குழாயிலிருந்து பேரூராட்சி சந்தைக்கு அருகேயுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ​ அனுமதி பெறப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:

​ ​ ​ என்.​ கலைச்செல்வன் ​(செயல் அலுவலர்):​ திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூராக உள்ள சிற்றுண்டி நிலையத்தை இடிக்க வேண்டும்.

​ ​ ​ கர்ணன்,​​ தன்ராஜ் ​(அதிமுக):​ சிற்றுண்டி நிலையத்துக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு பணிகளை தொடர வேண்டும்.

​ ​ ​ டி.என்.​ குணா ​(சுயேச்சை):​ புதுச்சத்திரம் பகுதியில் தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை அகற்ற வேண்டும்.​ இதனால்,​​ கொசுத் தொல்லை அதிகளவில் உள்ளது.

 

புதிய சிமென்ட் சாலை: கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 16.08.2010

புதிய சிமென்ட் சாலை: கூட்டத்தில் முடிவு

சிதம்பரம்: அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்க முடிவு செய்யப் பட்டது.சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கூட்டம் தலைவர் கீதா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன், துணைத் தலைவர் குஞ்சு பாண்டியன் முன் னிலை வகித்தனர்.கூட்டத்தில், அண்ணாமலை நகர் பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் புதிய இரண்டு கைப் பம்புகள், சிமென்ட் குப்பைத் தொட்டிகள் அமைத்தல். 450 வடிகால் சிலாப்புகள் அமைப்பது. வெள்ளக் குளம், கொத்தங்குடி பகுதியில் சிமென்ட் சாலை, ,வெள்ளைக்குளம் பகுதியில் ஆழ்துளை கிணறு, நீர்மூழ்கி மின் மோட்டார் மற்றும் பம்பு அறை. கே.ஆர்., நகரில் தார் சாலை, ஆதி திராவிடர் காலனியில் கழிப்பிடம் சீரமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 


Page 108 of 167